உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா /  தீர்ப்பாயங்கள் சீர்திருத்த சட்டத்தின் முக்கிய ஷரத்துகள் ரத்து: கோர்ட் அதிரடி

 தீர்ப்பாயங்கள் சீர்திருத்த சட்டத்தின் முக்கிய ஷரத்துகள் ரத்து: கோர்ட் அதிரடி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

தீர்ப்பாயங்கள் சீர்திருத்த சட்டங்களின் முக்கிய ஷரத்துகளை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது. ஏற்கனவே நீக்கப்பட்ட ஷரத்துகளில் சிறிய திருத்தம் செய்து மத்திய அரசு மீண்டும் அறிமுகம் செய்திருப்பதாக விமர்சித்து உள்ளது. மத்திய அரசு, 2021ல் தீர்ப்பாயங்கள் சீர்திருத்த சட்டம் கொண்டு வந்தது. திரைப்பட தணிக்கை சான்றிதழ் மேல் முறையீட்டு தீர்ப்பாயம் போன்ற சில மேல் முறை யீட்டு தீர்ப்பாயங்களை இந்த சட்டம் கலைத்தது. மேலும் பதவி காலத்தை நிர்வகிக்கும் விதிகளை திருத்தியது. மனு தாக்கல் எனவே, மத்திய அரசு கொண்டு வந்த தீர்ப்பாயங்கள் சீர்திருத்த சட்டத்தின் அரசியலமைப்பு செல்லுபடியை ரத்து செய்யக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு தரப்பினர் சார்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதனை விசாரித்த உச்ச நீதிமன்றம், கடந்த 11ம் தேதி தீர்ப்பை ஒத்தி வைத்திருந்தது. இந்நிலையில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய், நீதிபதி கே.வினோத் சந்திரன் அடங்கிய அமர்வு நேற்று இவ்வழக்கில் தீர்ப்பளித்தது. அதன் விபரம் வருமாறு: உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுகளை செயல்படுத்தக்கூடாது என்பதற்காகவே இந்த சட்டம் கொண்டு வந்தி ருப்பது போல் தெரிகிறது. நீதித்துறையின் தனிப்பட்ட அதிகாரங்களுக்கான நெறிமுறைகளை மீறும் வகையில் இந்த சட்டம் உள்ளது. நீதிமன்றத்தால் ஏற்கனவே ரத்து செய்யப்பட்ட பிரிவுகளை மீண்டும் சேர்த்திருப்பதன் மூலம், நீதித்துறை முன்னுதாரணங்களை சட்டப்பூர்வமாக மீறுவதற்காக இந்த புது சட் டம் கொண்டு வரப்பட்டி ருப்பதாகவே உச்ச நீதிமன்றம் கருதுகிறது. பொறுப்பு வேண்டும் அதிகார வரம்பு மற்றும் நீதித்துறை சுதந்திரம் உள்ளிட்ட கொள்கைகளை மீறும் வகையில் தீர்ப்பாய சீர்திருத்த சட்டத்தில் ஷரத்துகள் சேர்க்கப்பட்டுள்ளன. அதனை எக்காரணம் கொண்டும் மீண்டும் சேர்த்து இருக்கக் கூடாது. தேங்கி கிடக்கும் வழக்குகளை விசாரிக்கும் கடமை நீதித்துறையை சார்ந்தது மட்டுமல்ல, அரசின் பிற துறைகளுக்கும் அதனை பகிர்ந்து கொள்வதற்கான பொறுப்பு இருக்கிறது. ஏற்க முடியாது தீர்ப்பாயங்கள் சீர்திருத்த சட்ட மசோதாவில் சேர்க்கப்பட்ட ஷரத்துகளையும், 2021ல் இயற்றப்பட்ட சட்டத்தையும் ஒப்பிட்டு பார்த்தோம். அதில், பழைய சட்டத்தில் நீக்கப்பட்ட ஷரத்துகளில் சிறிய அளவில் மட்டும் மாற்றம் செய்து மீண்டும் அறிமுகம் செய்யப்பட்டிருப்பது தெளிவாக தெரிகிறது. எனவே, நீதித்துறை சுதந்திரம் மற்றும் அதிகார வரம்பை மீறும் 2021 சட்டத்தில் உள்ள ஷரத்துகளை எக்காரணம் கொண்டும் ஏற்க முடியாது. இது அரசியலமைப்புக்கு எதிரானது என தீர்ப்பளிக்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. வருமான வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயம், சுங்கம், கலால், சேவை வரி உள்ளிட்ட மேல்முறையீட்டு தீர்ப்பாய உறுப்பினர்கள் 62 வயது வரை பதவியில் தொடரலாம். மேலும், தீர்ப்பாய தலைவர்கள் 65 வயது வரை சேவையாற்றலாம் என்ற முந்தைய தீர்ப்பையும் நீதிபதிகள் உறுதி செய்தனர். - டில்லி சிறப்பு நிருபர் -:


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை