தோட்டக்கலைத் துறை
l தோட்டக்கலை தொடர்பாக, தொழில்நுட்ப ஆலோசனை கூற, மார்க்கெட் இணைப்பு ஏற்படுத்த, விவசாய உபகரணங்கள், உற்பத்தி பொருட்களை ஒரே கூரையின் கீழ் கிடைக்க செய்யும் நோக்கில், முக்கியமான மாவட்டங்களில் 'கிசான் மால்'கள் அமைக்கப்படும்l மாநிலத்தில் 98,842 ஏக்கர் பகுதிகளில் பயிரிடும் பூக்களை விற்கவும், ஏற்றுமதியை ஊக்கப்படுத்தவும், அரசு மற்றும் தனியார் ஒருங்கிணைப்பில், பெங்களூரில், சர்வதேச தரம் வாய்ந்த வர்த்தக பூ மார்க்கெட் அமைக்கப்படும்l தோட்ட விளைச்சலை பாதுகாக்கவும், ஏற்றுமதி அளவை அதிகரிக்க செய்யவும், அரசு, தனியார் ஒருங்கிணைப்பில் 'பேக் ஹவுஸ்' மையம் அமைக்கப்படும்.l பாக்கு விளைச்சலை பாதிக்கும் நோய்களை கட்டுப்படுத்த, மத்திய அரசின் உதவியுடன், ஆய்வு மற்றும் தாவரம் பாதுகாப்பு திட்டம் செயல்படுத்தப்படும்.l தோட்ட விளைச்சலில், அதிக பிராண வாயுவை தக்க வைத்துக்கொள்ளும் விளைச்சல்களை அடையாளம் கண்டு, சர்வதேச மார்க்கெட்டில் விற்பனை செய்வதன் மூலம், விவசாயிகளின் வருவாயை அதிகரிக்க, நடவடிக்கை எடுக்கப்படும்l மாநிலத்தில் மசாலா உற்பத்தி பொருட்களை பயிரிடும் விவசாயிகளை ஊக்கப்படுத்தவும், விளைச்சலை ஏற்றுமதி அதிகரிக்கவும், அரசு, தனியார் ஒருங்கிணைப்பில் சிக்கமகளூரு மாவட்டத்தில், 'ஸ்பைஸ் பார்க்' அமைக்கப்படும்l தோட்ட விளைச்சல்களுக்கு, விஜயபுரா மாவட்டம் பிரசித்தி பெற்றது. இப்பகுதியில் தோட்ட விளைச்சல்களுக்கு ஊக்கமளிக்க, விஜயபுராவில் அலமேலாவில், தோட்டக்கலை கல்லுாரி கட்டப்படும். பட்டு
l ஆசியாவிலேயே மிக அதிகமான பட்டு கூடு விற்பனை செய்யும், ராம்நகர் மற்றும் சித்லகட்டாவில் உள்ள பட்டு மார்க்கெட்டுகளை, முதல் கட்டமாக, 150 கோடி ரூபாய் செலவில் ஹை - டெக் மார்க்கெட்களாக தரம் உயர்த்த, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பணிகளை விரைவில் முடித்து, 250 கோடி ரூபாய் செலவில் இரண்டாம் கட்ட பணிகள் துவக்கப்படும்l பட்டு நுால் நெய்வோரை ஊக்கப்படுத்தும் நோக்கில், கச்சா பட்டுக்கு ஊக்கத்தொகை வழங்க, கர்நாடக சிறுபான்மையினர் வளர்ச்சி கார்ப்பரேஷன் உதவியுடன், ஆண்டுக்கு 12 கோடி ரூபாய் ஒதுக்கப்படும்l 'பைவோல்டீன்' பட்டுக் கூடுகளுக்கு, தற்போது வழங்கப்படும் ஊக்கத்தொகை 1 கிலோவுக்கு 10 ரூபாயில் இருந்து, 30 ரூபாயாக அதிகரிக்கப்படும்.