உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / "ஹசாரே போராட்டத்திலிருந்து பாடம் கற்றுக் கொள்ளுங்கள்

"ஹசாரே போராட்டத்திலிருந்து பாடம் கற்றுக் கொள்ளுங்கள்

ஆமதாபாத் : ''அகிம்சை போராட்டத்தின் மூலம், ஊழலுக்கு எதிரான கோரிக்கையில் அன்னா ஹசாரே வெற்றி பெற்றுள்ளதிலிருந்து, நக்சலைட்கள் மற்றும் பயங்கரவாத இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்'' என, குஜராத் முதல்வர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

இது குறித்து, நரேந்திர மோடி தன் வலைதளத்தில் கூறியுள்ளதாவது: அமைதியான முறையில் ஊழலுக்கு எதிரான போராட்டத்தில் வெற்றி பெற்றுள்ள அன்னா ஹசாரேவின் நடவடிக்கை, அகிம்சைக்கு மேலும் வலுவூட்டியுள்ளது. அகிம்சை என்பது இந்தியர்களின் மரபணுவோடு கலந்தது என்பதை, கடந்த கால சம்பவங்களும் தற்போதைய நிகழ்வுகளும் நிரூபித்துள்ளன.

சுதந்திர போராட்ட கால நிகழ்ச்சிகளை நாம் நேரடியாக பார்க்கவில்லை. ஊழலுக்கு எதிரான தற்போதைய போராட்டம், அகிம்சையின் வலிமையை மீண்டும் நிரூபித்துள்ளது. இந்த அகிம்சை வழி, இந்தியாவை மேலும் பலமுள்ளதாக்கும். மனித குலத்துக்கு சேவை செய்யும். நக்சலைட்கள் மற்றும் பயங்கரவாத நடவடிக்கையில் ஈடுபடுவோர், ஹசாரேவின் அகிம்சை போராட்டத்தின் வெற்றியைப் பார்த்து, தங்கள் போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும். அதிலிருந்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டும். இவ்வாறு நரேந்திர மோடி கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை