உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மதுபான கொள்கை வழக்கு: டில்லி ஐகோர்ட்டில் கெஜ்ரிவால் இன்று ஆஜர்

மதுபான கொள்கை வழக்கு: டில்லி ஐகோர்ட்டில் கெஜ்ரிவால் இன்று ஆஜர்

புதுடில்லி: மதுபான கொள்கை வழக்கில் சி.பி.ஐ., கைது செய்ததை எதிர்த்து டில்லி ஐகோர்ட்டில் கெஜ்ரிவால் தொடர்ந்த வழக்கில் இன்று ஆஜராகிறார்.டில்லி ஆம் ஆத்மி அரசு அமல்படுத்திய புதிய மதுபான கொள்கையில் நடந்த முறைகேட்டினை சி.பி.ஐ., அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது. இதில் அமலாக்கத்துறையால் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டார். திகார் சிறையில் உள்ளார்.இந்நிலையில் கடந்த ஜூன் 26-ம் தேதி சி.பி.ஐ., வழக்குப்பதிவு செய்து, திகார் சிறையில் வைத்து கெஜ்ரிவாலை கைது செய்தது.இதனை எதிர்த்து டில்லி ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கில் இன்று நீதிபதி நீனா பன்சால் கிருஷ்ணா முன் கெஜ்ரிவால் ஆஜராகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Seshaderi
ஜூலை 03, 2024 17:41

பழைய செய்தி


Azar Mufeen
ஜூலை 03, 2024 11:18

பூசன் அய்யா வழக்கில் மட்டும் நீதிமன்றம் இருட்டாகவே இருக்கிறதே


Kasimani Baskaran
ஜூலை 03, 2024 05:05

சிபிஐ க்கு அதிகாரம் இல்லை என்று எந்த நீதிமன்றமும் சொல்ல முடியாது.


Palanisamy Sekar
ஜூலை 03, 2024 04:52

டெல்லி உயர்நீதிமன்றம் ஒப்புக்கொண்டது கெஜ்ரிவால் நூறுகோடி ரூபாய் அளவுக்கு தனக்காக லஞ்சம் வாங்கியதற்கு போதுமான ஆதாரங்கள் இருப்பதாக தெளிவாக சொல்லியுள்ளது. அதனால் கெஜ்ரிவால் என்னதான் தலைகீழாக தண்ணி போட்டாலும் ஆடவே முடியாது. இண்டி கூட்டணியினர் தன்னை எப்படியாவது காப்பாற்றுவார்கள் என்பதெல்லாம் கனவாகவே போய்விடும். முறையிட்டாலும் தப்பிக்கவே முடியாது. சட்டம் இருட்டறையாக இங்கே இருக்காது என்றே நம்புவோமே


மேலும் செய்திகள்







புதிய வீடியோ