உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அசாமில் ஊழல் நிறைந்த அரசு ஆட்சி: ராகுல் குற்றச்சாட்டு

அசாமில் ஊழல் நிறைந்த அரசு ஆட்சி: ராகுல் குற்றச்சாட்டு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோஹிமா: ''அசாமில் ஊழல் நிறைந்த அரசு ஆட்சி நடத்துகிறது'' என காங்கிரஸ் எம்.பி ராகுல் குற்றம் சாட்டியுள்ளார்.லோக்சபா தேர்தலையொட்டி, மணிப்பூர் முதல் மும்பை வரையிலான இரண்டாம் கட்ட 'பாரத் ஒற்றுமை நியாய யாத்திரை'யை காங்கிரஸ் எம்.பி., ராகுல் கடந்த ஜன.,14ம் தேதி மணிப்பூரில் துவக்கினார். இன்று(ஜன.,18) 5வது நாள் அசாம் மாநிலத்தில் சிவசாகர் மாவட்டத்தில் யாத்திரை மேற்கொண்டார்.

அநீதி

பின்னர் நிகழ்ச்சியில் ராகுல் பேசியதாவது: நாங்கள் மணிப்பூரிலிருந்து பாரத் ஒற்றுமை நியாய யாத்திரையை துவக்கினோம். இந்த யாத்திரை இந்தியாவில் உள்ள அனைத்து மதங்களையும் சாதிகளையும் ஒன்றிணைப்பதை நோக்கமாகக் கொண்டது. பா.ஜ., பொருளாதார மற்றும் அரசியல் ரீதியாக நாட்டு மக்களுக்கு நிறைய அநீதி இழைத்துள்ளது.

உள்நாட்டு போர்

நாடக ஆசிரியரும், சீர்திருத்தவாதியுமான சங்கர்தேவ் அனைவரையும் ஒன்றிணைக்க முயன்றார். அவர் அநீதிக்கு எதிராக போராடினார். இதனை தான் பாரத் ஒற்றுமை நியாய யாத்திரையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. மணிப்பூரில் உள்நாட்டு போர் சூழல் நிலவுகிறது. ஆனால், பிரதமர் மோடி மணிப்பூருக்கு செல்லவில்லை. நாகாலாந்தில் பிரதமர் அளித்த வாக்குறுதிகள் என்ன ஆனது என்று மக்கள் கேட்கின்றனர். அசாமில் ஊழல் நிறைந்த அரசு ஆட்சி நடத்துகிறது. இவ்வாறு ராகுல் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 19 )

Ramesh Sargam
ஜன 19, 2024 00:44

அப்ப தமிழகத்தில், கர்நாடகாவில் எப்படிப்பட்ட ஆட்சி நடக்கிறது? ஊழலின் பிறப்பிடம் தமிழகம்.


கணபதி
ஜன 18, 2024 23:33

பொழுது போகாமல் ஊர் சுற்றும் விளையாட்டுப் பிள்ளையின் வழக்கமான உளறல்.


Jayaraman Pichumani
ஜன 18, 2024 23:11

கண்ணாடி முன்னால் நின்று கொண்டு பேசுவதே பப்புவுக்கு வாடிக்கையாகப் போய் விட்டது


J.V. Iyer
ஜன 18, 2024 21:21

கான்-கிராஸுக்கும், திமுகவுக்கும், ஆம்-ஆத்மீக்கும் ஊழலைப்பற்றி பாஜகவை குறைகூற எந்த அருகதையும் இல்லை. திருடர்கள்.


Rajasekar Jayaraman
ஜன 18, 2024 19:16

நேஷனல் ஹெரால்டு கொள்ளையன் உழலை பற்றி பேசுகிறான் மக்களே அவனிடம் 2ஜி நிலக்கரி ஊழல் நில மோசடி ஊழல் பற்றிகேளுங்கள்.


M S RAGHUNATHAN
ஜன 18, 2024 16:35

காங்கிரஸ் ஏன் அஸ்ஸாமில் ஆட்சி இழந்தது என்று ராகுல் ( அவர்தான் இப்போது முதல்வராக இருக்கும் ஹேமந்த் பிஸ்வாஸ் அவரை கட்சி விஷயமாக பேச சென்றபோது, ராகுல் அவர் செல்ல அவைகளுடன் விளையாடி கொண்டு இருந்தார்.


subramanian
ஜன 18, 2024 16:03

ஊழலின் உருவம்


raja
ஜன 18, 2024 16:03

30000 கோடி கொள்ளையை பற்றியும் சொல்லுங்க ராகுல்...


shyamnats
ஜன 18, 2024 15:53

கான் கிராஸை எப்பொழுதோ கலைத்திருந்தால் , இதுபோல் அரை வேக்காடுகளை சகிக்க வேண்டியிருந்திருக்காது.


R Kay
ஜன 18, 2024 15:37

ராகுல் உள்ளவரை பாஜக விற்கு கவலையே இல்லை. Keep up your


மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி