உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அரண்மனை செட்டப்: மன்னர்கள் கெட்டப்: கர்நாடகாவில் கலக்கல் ஓட்டுச்சாவடி

அரண்மனை செட்டப்: மன்னர்கள் கெட்டப்: கர்நாடகாவில் கலக்கல் ஓட்டுச்சாவடி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஷிமோகா: கர்நாடகா மாநிலம் ஷிமோகாவில் உள்ள ஓட்டுச்சாவடியை, வாக்காளர்கள் அனைவரும் மன்னர்கள்தான் என்பதை உணர்த்தும் வகையில் அரண்மனைபோல் தேர்தல் ஆணையம் அமைத்துள்ளது.நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடக்கிறது. ஏற்கனவே 2 கட்டங்கள் முடிந்த நிலையில், இன்று (மே 7) மூன்றாம் கட்ட தேர்தல் நடந்து வருகிறது. இதற்காக ஓட்டு சதவீதத்தை அதிகரிக்க தேர்தல் ஆணையம் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்திருந்தது. 100 சதவீதம் வாக்காளர்கள் ஓட்டுச்சாவடிக்கு வந்து தங்கள் ஓட்டினை பதிவு செய்யுமாறு வலியுறுத்தி வருகிறது. இந்த நிலையில் கர்நாடகா மாநிலம் ஷிமோகாவில் உள்ள ஓட்டுச்சாவடி ஒன்றை அரண்மனை போன்று 'செட்' அமைத்து வாக்காளர்களை கவர்ந்துள்ளது தேர்தல் ஆணையம்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=0rn06bgv&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அரண்மனை போல வடிவமைக்கப்பட்டுள்ள ஓட்டுச்சாவடிக்கு செல்லும் வாக்காளர்களை அரண்மனை சேவகர்கள் போன்ற உடையணிந்து தேர்தல் அலுவலர்கள் வரவேற்கின்றனர். ஓட்டளிக்கும் மக்கள் அங்கிருக்கும் மன்னர்கள் அமரும் அரியணையில் கிரீடத்துடன் அமர்ந்து, ஓட்டுப்போட்டதை அடையாளம் காட்டும்படி விரலை உயர்த்தி போட்டோ எடுத்துக்கொள்ளலாம். வாக்காளர்கள் அனைவரும் மன்னர்கள்தான் என்பதை உணர்த்தும் வகையில் இந்த செட்டப் செய்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை