உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பாக்.,கிற்கு பி.ஆர்.ஓ., வேலை பார்ப்பதா? மத்திய அமைச்சர் கண்டனம்

பாக்.,கிற்கு பி.ஆர்.ஓ., வேலை பார்ப்பதா? மத்திய அமைச்சர் கண்டனம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: பா.ஜ.,வைச் சேர்ந்த, மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை இணைஅமைச்சர் ராஜிவ் சந்திரசேகர் கூறியதாவது:மணிசங்கர் மற்றும் சாம் பிட்ரோடா போன்றோரின் பேச்சுக்களும், நடவடிக்கைகளும், காங்கிரசின் சித்தாந்தம் மற்றும் கொள்கைகளை அப்படியே பிரதிபலிக்கின்றன.மணிசங்கர் அய்யரை பொறுத்தவரையில் அவர் எப்போதுமே பாகிஸ்தானுக்கு பி.ஆர்.ஓ., வேலை செய்கிறவர். பாகிஸ்தானை பார்த்து அச்சம் கொள்ள வேண்டுமென்று நமக்கு பரிந்துரை செய்கிறார்.பாகிஸ்தானை மதிக்க வேண்டுமென்றும் கூறுகிறார். அவர் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். நாடு இப்போது முன் போல இல்லை. இது புதிய இந்தியா. யாருக்கும் அஞ்ச மாட்டோம். யாரைப் பார்த்தும் பயந்து ஓடவும் மாட்டோம்.ராகுலின் கட்சியாக இருக்கும் காங்கிரஸ், பாகிஸ்தானின் தீவிரவாதச் செயல்களுக்கு அடிக்கடி மன்னிப்பு கோரும் கட்சியாகவும், அந்நாட்டின் பாதுகாவலாளியாகவும் மாறிவிட்டது. இப்போதும்கூட மணிசங்கர் மீது காங்கிரஸ் நடவடிக்கை எடுக்காது. மாறாக, 'அவரது பேச்சு ஏற்புடையதல்ல. அந்த கருத்துக்களுக்கும், காங்கிரசுக்கும் சம்பந்தமில்லை. அது, அவரது சொந்த கருத்து' எனக் கூறி நழுவிக் கொள்வர். இதுவே அவர்களின் வழக்கம். கடந்த 2019ல், ஜம்மு - காஷ்மீரின் புல்வாமாவில் நடந்த பயங்கரவாத தாக்குதல் குறித்து சாம் பிட்ரோடாவிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர், 'தீவிரவாத சம்பவங்கள் அவ்வப்போது நடந்து கொண்டு தான் இருக்கும். அவற்றில் என்ன புதிதாக இருந்துவிட முடியும்' என, அலட்சியமாக கூறினார்.சமீபத்தில் கூட, மஹாராஷ்டிரா காங்கிரஸ் தலைவர் விஜய் வடேடிவர், 'மும்பை பயங்கரவாத தாக்குதலின் போது, ஐ.பி.எஸ்., அதிகாரி ஹேமந்த் கர்கரேவை சுட்டுக் கொன்றது அஜ்மல் கசாப் அல்ல; ஆர்.எஸ்.எஸ்., ஆதரவு நிலைப்பாடு உடைய ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர் தான் சுட்டுக் கொன்றார்' என்றார்.'மும்பை தாக்குதல் பயங்கரவாத சம்பவமே அல்ல. அது, ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் சதி வேலை' என, காங்., மூத்த தலைவர் திக்விஜய் சிங் சமீபத்தில் தெரிவித்தார்.இப்போதுகூட காங்., - எம்.பி., ராகுலை, பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் பாராட்டிப் பேசியதையும் பார்த்தோம். ஓட்டு வங்கி அரசியலுக்காக காங்கிரஸ் எந்த காரியத்தையும் செய்ய துணிந்துவிட்டது.இந்த லோக்சபா தேர்தலில், கேரளாவிலும், கர்நாடகாவிலும், 'பாப்புலர் பிரன்ட் ஆப் இண்டியா' மற்றும் எஸ்.டி.பி.ஐ., போன்ற அமைப்புகளின் ஆதரவை காங்கிரஸ் பெற்றது என்பதையும் மறந்துவிடக் கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

Srinivasan Krishnamoorthi
மே 11, 2024 11:03

மனித நிலைக்கு முன் புல் பூச்சி பாம்பு புள் நாய் மாடு குரங்கு என பல நிலைகள் இருந்ததை படத்தில் உள்ள இருவரும் நினைவு படுத்துகின்றனர்


A1Suresh
மே 11, 2024 10:48

சிறுபான்மையரை ஆதரித்தால் உலகம் நம்மை முற்போக்குவாதியாக, நேர்மையாளனாக, சிந்தனாவாதியாக மதிக்கும் என்ற வக்கிரபோக்கு நம்மில் பலருக்கும் உண்டு


vbs manian
மே 11, 2024 08:56

இந்தியாவுக்கு உள்ளேயே எதிரிகள் உள்ளனர்


NicoleThomson
மே 11, 2024 08:52

கருநாடகவில் காங்கிரஸ் எனப்படுவது பார்த்தீனியம் செடியையும் குறிக்கும்


குமரி குருவி
மே 11, 2024 08:25

காங்கிரஸ் கட்சியின் கடிவாளம் இந்தியாவில் இல்லை பாகிஸ்தான் சீனா அமெரிக்க என பல நாடுகளில் ராகுல் காந்தி கொடுத்து வைத்துள்ளார்


krishnamurthy
மே 11, 2024 07:56

தேச துரோகத்தில் கைது செய்யலாம்


Svs Yaadum oore
மே 11, 2024 07:36

பாகிஸ்தானிற்கு பிஆர்ஓ, வேலை பார்க்க இங்கேயே மத சார்பின்மை திடல் தின்னி ஆட்கள் உள்ளார்கள் அவர்களுக்கு போட்டியாக இவர் எதற்கு ??பாக்கிஸ்தான் சிரியா பாலஸ்தீன் , லட்சத்தீவு , மாலத்தீவு என்று எங்கெல்லாம் தமிழ் ஆட்கள் கிடையாதோ அங்கெல்லாம் முட்டுக்கொடுக்க ரூபாய் உபிஸ் எப்போதும் தயார் ஓசி சோறு உபிஸுக்கு சோறு கண்ட இடமே சொர்க்கம் காசு கொடுத்தால் சிங்களனுக்கே கொம்பு சீவி விடுவார்கள் சமத்துவம் சமூகநீதி சகோதரத்துவம் தமிழ் தமிழன் தமிழன்டா


RAJ
மே 11, 2024 07:28

இவர்கள், sorry இவனுங்க அயல்நாட்டு அடிமைகள், மணி சங்கர தமிழ் நாட்டின் சாபக்கேடு வீரம் விளைந்த மண்ணில் ஒரு விஷப் பாம்பு விஷப் பாம்பின் பல்லை பிடுங்க வேண்டும்


Kasimani Baskaran
மே 11, 2024 07:20

தானே கள்ள நோட்டு அடிக்காமல் சிறிது கூட வெட்கமில்லாமல் பழைய நோட்டடிக்கும் மெசினை பாக்கிஸ்தானுக்கு விற்று அவர்களை அடிக்கவிட்டு இந்திய பொருளாதாரத்தை அந்தரத்தில் தொங்கவிட்டு அதில் பலனடைந்த கட்சிதான் காங்கிரஸ் மேலிருந்து கீழ் மட்டம் வரை களவாணிகளின் கூடாரம்


duruvasar
மே 11, 2024 06:48

பைத்தியகார காங்கிரஸின் பிதாமகர் ஜவஹர்லால் நேரு என்பதால் அந்த கட்சி நபர்கள் இப்படித்தான் இருப்பார்கள்


மேலும் செய்திகள்





புதிய வீடியோ