உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மஹா., தேர்தல் முடிவு எதிர்பாராதது: ராகுல், கார்கே கருத்து

மஹா., தேர்தல் முடிவு எதிர்பாராதது: ராகுல், கார்கே கருத்து

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: '' மஹாராஷ்டிரா மாநில தேர்தல் முடிவு எதிர்பாராதது,'' என காங்கிரஸ் தலைவர் கார்கே மற்றும் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் ஆகியோர் கருத்து தெரிவித்து உள்ளனர்.மஹாராஷ்டிராவில் பா.ஜ., கூட்டணி ஆட்சியை தக்க வைத்து கொண்டுள்ளது.அதேபோல் ஜார்க்கண்ட் மாநிலத்தில் காங்கிரஸ் கூட்டணி மீண்டும் ஆட்சி அமைக்கிறது. ஹேமந்த் சோரன் மீண்டும் முதல்வராக உள்ளார்.இது தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் ராகுல் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: 'இண்டியா' கூட்டணிக்கு அமோக ஆதரவு அளித்த ஜார்க்கண்ட் மக்களுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த வெற்றிக்காக முதல்வர் சோரன், காங்கிரஸ், ஜேஎம்எம் தொண்டர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறேன். கூட்டணிக்கு கிடைத்த வெற்றியானது, மாநிலத்தின் வெற்றி. வனம், நீர், நிலம் மற்றும் அரசியல்சாசனத்திற்கு கிடைத்த வெற்றி. மஹாராஷ்டிரா தேர்தல் முடிவுகள் எதிர்பாராதது. அதற்கான காரணத்தை விரிவாக ஆராய்வோம். எங்களுக்கு ஆதரவு அளித்த சகோதரர், சகோதரிகளுக்கும், கடுமையாக உழைத்த கட்சி நிர்வாகிகளுக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

வயநாடு

பிரியங்கா மீது நம்பிக்கை வைத்த எனது வயநாடு குடும்பத்தை நினைத்து பெருமை கொள்கிறேன். பெருமை மிக்க வயநாட்டை வளர்ச்சியடைந்த பகுதியாக மாற்ற தைரியம், நம்பிக்கை மற்றும் அர்ப்பணிப்புடன் பிரியங்கா உழைப்பார் .

காரணம் தெரிகிறது

கார்கே வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: மஹாராஷ்டிரா தேர்தல் முடிவு எதிர்பாராதது. தோல்விக்கான காரணங்களை புரிந்து கொள்ள முடிகிறது. எங்கள் கட்சி தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். சத்ரபதி சிவாஜி, அம்பேத்கர் ஆகியோரின் கொள்கையின் உண்மையான பிரதிநிதிகள் நாங்கள் தான். மக்களின் பிரச்னையை தொடர்ந்து எழுப்புவோம். இவ்வாறு அந்த அறிக்கையில் கார்கே கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

பேசும் தமிழன்
நவ 24, 2024 13:24

உங்களுக்கு எதிர்பாராதது..... மக்கள் எங்களுக்கு எதிர்பார்த்த ஒன்று தான்.... ஊழல் இண்டி கூட்டணி ஆட்களை விரட்டி அடித்து விட்டார்கள்..... மகாராஷ்டிரா மக்களுக்கு வாழ்த்துக்கள்.


Nandakumar Naidu.
நவ 24, 2024 00:30

இவை விடியா மூஞ்சிகள்.


தனி
நவ 23, 2024 21:11

என்ன முடிவு எதிர்பாத்திங்க?


Ramona
நவ 23, 2024 20:50

இவங்க கட்சி அடுத்த பொதுத் தேர்தல் வைர தாங்குமா,அதுவே பெரிய சந்தேகம், பாவம் பழி சுமக்கும் தலைவர் கார்கே,அவரது நிலை மிகவும் வருத்தம் அளிப்பதாக உள்ளது..


sridhar
நவ 23, 2024 20:30

சத்ரபதி சிவாஜியின் பிரதிநிதியாம் காங்கிரஸ். அவரை போல் இஸ்லாமியர்களை எதிர்ப்பாயா .


RK
நவ 23, 2024 21:18

சத்ரபதி சிவாஜி பற்றி காங்கிரஸ் பேசவேண்டியத்தில்லை,pls ignore the true Indians,I like ur statement thanks


Ramesh Sargam
நவ 23, 2024 20:23

அப்ப வயநாடு தேர்தல் எதிர்பார்த்ததா...??


rama adhavan
நவ 23, 2024 20:04

இந்த தடவை ஓட்டு மெஷின்ஐ குறை சொல்ல முடியாது. காரணங்கள் : ஒன்று . ஜார்கண்ட் /வயநாடு முடிவுகள். இரண்டு : தேர்தல் கமிஷன் அடிப்படை அற்ற காங்கிரஸ்ஸின் வாக்கு இயந்திரங்கள் மீது உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப் போவது குறித்து யோசிக்கிறது என்னும் தகவல்.


Sivagiri
நவ 23, 2024 20:02

என்னமோ ஜார்கண்டில் இவிங்கதான் லீடிங் பார்ட்டி மாதிரி - காங்கிரஸ் கூட்டணி / காங்கிரஸ் கூட்டணி - ன்னு மீடியாக்களில் போட்டுக்கிறாய்ங்க . . . தமிழ்நாட்டில் மற்றும் இந்தியா முழுவதும் போல , மாநில கட்சி - சோரன் பார்ட்டி பின்னால் தொற்றிக் கொண்டு சில சீட்டுகளை பெற்றுக் கொண்டிருக்கு கங்கிராஸ் கம்பெனி . . இந்தியா முழுவதும் மாநிலக்கட்சிகளுக்கு , வேஸ்ட் லக்கேஜ்-ஆக மாறிக் கொண்டிருக்கிறது காங்கிரஸ் கம்பெனி , அதை எல்லாம் மறந்து மறைத்து , ஒரு சில மேனேஜர்களை சம்பளம் கொடுத்து , கூவ சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் . . .


Ramona
நவ 23, 2024 20:43

ராகுல் ,கான் கிரஸை விரைவில் கலைத்துவிடுவார்.


KRISHNAN R
நவ 23, 2024 19:50

அப்போ இங்கு வேற சார்கண்டுல வேற யா


Sundar R
நவ 23, 2024 19:33

காங்கிரஸ்-உத்தவ்-சரத் கூட்டணியினர் தாங்கள் எதிர்பார்த்ததை விட அதிகமான சீட்டுகள் கிடைத்தது என்று சொல்ல வருகிறார்களா?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை