மேலும் செய்திகள்
பா.ஜ., முன்னாள் நிர்வாகி குடும்பத்தினரை துன்புறுத்த தடை
40 minutes ago
பீஹாரில் நடந்ததுபோல் தமிழகத்தில் நடக்காது
41 minutes ago
பரிகார பூஜையில் பங்கேற்ற பழனிசாமியின் மனைவி
49 minutes ago
கோல்கட்டா: சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றதை அடுத்து, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, முறைப்படி தன் எம்.பி., பதவியை நேற்று ராஜினாமா செய்தார். மேற்கு வங்கத்தின் தெற்கு கோல்கட்டா தொகுதி லோக்சபா உறுப்பினராக, மம்தா பானர்ஜி தேர்வு செய்யப்பட்டிருந்தார். இந்நிலையில், சட்டசபை தேர்தலில், திரிணமுல் காங்கிரஸ் வெற்றி பெற்றதை அடுத்து, அம்மாநிலத்தின் முதல்வராக பதவியேற்றார். பதவியேற்ற ஆறு மாதத்திற்குள், ஏதாவது ஒரு தொகுதியில் எம்.எல்.ஏ.,வாக தேர்வு செய்யப்பட வேண்டும் என்பதால், பொவானிபூர் சட்டசபை தொகுதிக்கு நடந்த இடைத் தேர்தலில், போட்டியிட்டார். இதில், 54 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதைத் தொடர்ந்து, தெற்கு கோல்கட்டா எம்.பி., பதவியை, முறைப்படி நேற்று அவர் ராஜினாமா செய்தார். திரிணமுல் காங்., பொதுச் செயலர் முகுல் ராய், மம்தா பானர்ஜியின் ராஜினாமா கடிதத்தை, லோக்சபா சபாநாயகர் மீரா குமாரிடம் அளிக்கவுள்ளதாக, திரிணமுல் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
40 minutes ago
41 minutes ago
49 minutes ago