கைதிகளுக்கு மந்திர அட்சதை
சாம்ராஜ்நகர்: சாம்ராஜ்நகர் மாவட்ட சிறையில், கைதிகளுக்கு அயோத்தி ராமர் கோவிலின், மந்திர அட்சதை வழங்கப்பட்டது.அயோத்தியில் ராமர் கோவில் திறப்பு விழா, ஜனவரி 22ல் நடக்கவுள்ளது. இதற்காக கோடிக்கணக்கான பக்தர்கள், ஆவலோடு காத்திருக்கின்றனர். ஹிந்து அமைப்பினர், பா.ஜ.,வினர் மாநிலத்தில் வீடு வீடாக வழங்குகின்றனர்.சாம்ராஜ்நகர் மாவட்ட சிறையில், மாவட்ட சட்ட சேவைகள் ஆணையம், ஜனார்த்தன பவுன்டேஷன் சார்பில், நேற்று ஆன்மீக வழிபாடு, சட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. சிறை கைதிகளுக்கு அயோத்தி ராமர் கோவிலின் மந்திர அட்சதை, ராமர் சரித்திர புத்தகம், ஜெபமாலை வழங்கப்பட்டன.ஜனார்த்தன கோவில் அர்ச்சகர் அனந்த பிரசாத், சிறை கைதிகளுக்கு ராமதாரக மந்திரத்தை கற்றுக்கொடுத்து, தினமும் பாராயணம் செய்யும்படி கூறினார்.