உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஜெய்ப்பூரில் மோடி, மெக்ரோன் பேரணி

ஜெய்ப்பூரில் மோடி, மெக்ரோன் பேரணி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மெக்ரோனும், பிரதமர் மோடியும் வாகன பேரணி நடத்தினர்.நாளை (ஜன.,26) நடக்கும் 75வது குடியரசு தின விழாவில், சிறப்பு விருந்தினராக பங்கேற்கவுள்ள பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரோன், இரண்டு நாள் அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ளார்.அவரை பிரதமர் மோடி வரவேற்றார். புதுடில்லியில் உள்ள கடமைப் பாதையில் நடக்கும் குடியரசு தின விழாவில், ஐரோப்பிய நாடான பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரோன் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார். இந்நிலையில், ராஜஸ்தானின் வந்த மேக்ரோனை வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் உள்ளிட்டோர் வரவேற்றனர். தொடர்ந்து புகழ்பெற்ற ஆம்பர் கோட்டை, ஜந்தர் மந்தர், ஹவா மஹால் உள்ளிட்ட இடங்களை அவர் பார்வையிட உள்ளார்.பின்னர் ஜெய்ப்பூரில் முக்கிய சாலையில் பிரதமர் மோடியுடன் சாலைப் பேரணியில் அதிபர் மெக்ரோன் பங்கேற்றார். முன்னதாக ஜெய்ப்பூரில் கடை ஒன்றிற்கும் சென்ற மோடியும், மெக்ரோனும், அங்கு வைக்கப்பட்டிருந்த யு.பி.ஐ., டிஜிட்டல் பண பரிவர்த்தனைக்கான க்யூஆர். கோடு முறையை பிரதமர் மோடி மெக்ரோனுக்கு விளக்கினார். பின்னர் அங்கு விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த ராமர் கோயில் மாதிரி மர பொம்மையை மெக்ரோனிடம் காண்பித்தார் மோடி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Ramesh Sargam
ஜன 26, 2024 00:04

சீன அதிபருக்கும் இந்தியா வர ஆசைதான். ஆனால் தலைக்கனம் வரவிடுவதில்லை.


N Annamalai
ஜன 25, 2024 22:24

இரு நாடுகளும் ஒன்றாக பயணிக்க வேண்டும் .தீவிரவாதத்துக்கு இரண்டு நாடுகளும் பாதிக்கப்பட்டு உள்ளது .அதை எதிர்க்க ஒன்று சேர வேண்டும் .ராணுவ தளவாடங்கள் உற்பத்தி ,தொழில் நுட்பம் இந்தியாவுடன் இணையலாம் .நம் ஆடை அவர்களுக்கு தேவைப்படும் .நல்லது நடக்கட்டும்


NALAM VIRUMBI
ஜன 25, 2024 21:32

டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையில் பாரதம் தான் உலகின் முன்னோடியாக விளங்குகிறது. மோடிஜி சாதனைகளில் இதுவும் ஒன்று.


Seshan Thirumaliruncholai
ஜன 25, 2024 20:17

சரியா தவறா என்பதனை ஒதுக்கிவைத்து ஒருவரை தைரியமாய் தலைவராக கூறவேண்டும்.


Bye Pass
ஜன 25, 2024 20:02

ராணுவ தளவாடங்கள் இந்தியாவில் தயாரிக்க ஒப்பந்தம் செய்தால் இரண்டு நாடுகளும் பயன்பெறும்


மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ