உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஓடும் பஸ்சில் டிரைவருக்கு மாரடைப்பு: 60 பயணியரை காப்பாற்றி உயிரிழந்தார்

ஓடும் பஸ்சில் டிரைவருக்கு மாரடைப்பு: 60 பயணியரை காப்பாற்றி உயிரிழந்தார்

புவனேஸ்வர்: ஒடிசாவில் 60 பயணிகளுடன் சென்ற பஸ் டிரைவருக்கு, திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக பஸ்சை நிறுத்திய பிறகு அவரது உயிர் பிரிந்தது. பயணிகள் அனைவரும் காயமின்றி தப்பினர்.மேற்கு வங்கத்தில் இருந்து ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் உள்ள பஞ்சலிங்கேஸ்வரர் கோயிலுக்கு 60 சுற்றுலா பயணிகளுடன் பஸ் வந்து கொண்டு இருந்தது. இந்த பஸ்சை, ஷேக் அக்தர் என்பவர் ஓட்டி வந்தார். பாலசோர் மாவட்டத்தில் பட்பூர் சாய்க் என்ற இடத்தில் பஸ் வந்த போது டிரைவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதனால், அவர் பஸ்சை சாலையில் ஓரத்தில் நிறுத்திவிட்டு மயக்கமடைந்தார். பயந்து போன பயணிகள் போலீசாருக்கு தகவல் அளித்தனர். போலீசார் வந்து, ஷேக் அக்தரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக டாக்டர்கள் கூறினர்.ஷேக் அக்தர், மாரடைப்பு ஏற்பட்டதும் சமயோஜிதமாக செயல்பட்டு பஸ்சை ஓரத்தில் நிறுத்தியதால், அதில் இருந்த 60 பயணிகள் அதிர்ஷ்டவசமாக காப்பாற்றப்பட்டனர். அவர்கள் அனைவரும் டிரைவருக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Malarvizhi
ஜன 31, 2024 11:08

அந்த பேருந்து ஓட்டுநர் மிகுந்த பாராட்டுக்குரியவர். ஆனால் அவரை பாராட்டுவதோடு நிறுத்திவிடாமல், அந்த பேருந்தில் பயணம் செய்தவர்கள், தலா ருபாய் ஆயிரமாவது அந்த ஓட்டுனரின் குடும்பத்திற்கு கொடுத்து, தங்கள் நன்றியை தெரிவிக்க வேண்டும்.


D.Ambujavalli
ஜன 31, 2024 06:06

உயிருக்கே. ஆபத்தான நிலையிலும் சமயோசிதமாக வண்டியை நிறுத்திக் காப்பாற்றிய அவர் பாராட்டுக்குரியவர்


Ramesh Sargam
ஜன 30, 2024 23:50

தாங்கமுடியாத துயரம் அடைந்தேன். அந்த இறைவன் அவரின் குடும்பத்தை காப்பாற்றட்டும். அவரின் ஆன்மா சாந்தி அடையட்டும் இறைவனின் பாதங்களில்.


V K
ஜன 30, 2024 23:47

What people don't understand is power of CPR till ambulance arrives. He could have been saved had someone from the 60 passengers knew a out CPR and did that.


Jay
ஜன 30, 2024 19:57

RIP, மக்களை காக்க நினைத்த மாண்புக்கு நன்றி


Saai Sundharamurthy AVK
ஜன 30, 2024 18:10

வாழ்க்கைக்கு கடமை செய்து உயிரை விட்ட ஷேக் அக்தரை இறைவன் நிச்சயம் சொர்க்கத்திற்கு அழைத்து செல்வார்.


Bms
ஜன 30, 2024 17:50

Great person om shanti


vijay
ஜன 30, 2024 17:23

RIP


மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி