உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 2 மகள்களுடன் தாய் தற்கொலை

2 மகள்களுடன் தாய் தற்கொலை

சிக்கபல்லாப்பூர்: தன் இரண்டு மகள்களுடன், ஏரியில் குதித்து தாய் தற்கொலை செய்து கொண்டார்.சிக்கபல்லாப்பூர் பாகேபள்ளி மிட்டேமரி கிராமத்தில் உள்ள ஏரியில், நேற்று மதியம் ஒரு பெண்ணும், இரண்டு பெண் குழந்தைகளும், சடலங்களாக மிதந்தனர். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள், போலீசுக்கு தகவல் கொடுத்தனர். அங்கு சென்ற போலீசார் மூன்று பேரின், உடல்களையும் மீட்டனர். விசாரணையில் அந்த பெண், சிந்தாமணி யாகவகோட் கிராமத்தின் மல்லிகார்ஜுன் என்பவரின் மனைவி ராதா, 33, மூத்த மகள் பூர்விகா, 4, என்று தெரிந்தது.இன்னொரு குழந்தையின் பெயர் தெரியவில்லை. மகள்களுடன் ஏரியில் குதித்து, ராதா தற்கொலை செய்தது தெரிந்தது. என்ன காரணம் என்று தெரியவில்லை. குடும்ப தகராறு அல்லதுகணவர் தொல்லையால், ராதா விபரீத முடிவு எடுத்திருக்கலாம் என்று, போலீசார் கருதுகின்றனர். மல்லிகார்ஜுனை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்