உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / குழந்தைகள் மாயம் அதிகரிப்பு: எம்.பி.,க்கள் கவலை

குழந்தைகள் மாயம் அதிகரிப்பு: எம்.பி.,க்கள் கவலை

புதுடில்லி: நாட்டில் குழந்தைகள் காணாமல் போவது குறித்து, லோக்சபாவில் காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா எம்.பி.,க்கள் கவலை தெரிவித்தனர்.லோக்சபாவில் நேற்று பேசிய இந்த இரு கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.,க்கள் கூறியதாவது:நாட்டில் ஒவ்வொரு ஆண்டும், 44 ஆயிரம் குழந்தைகள் காணாமல் போகின்றன. இவர்களில், 11 ஆயிரம் குழந்தைகளை கண்டுபிடிக்கவே முடிவதில்லை. டில்லியில், நாள் ஒன்றுக்கு, ஏழு குழந்தைகள் காணாமல் போகின்றன. அதேநேரத்தில், இந்தக் குழந்தைகளை மீட்பது குறைவான அளவிலேயே உள்ளது.இப்படி காணாமல் போகும் குழந்தைகளில் பெரும்பாலானவை, ஏழைக் குழந்தைகள். அந்தக் குழந்தைகள் கடத்தப்பட்டு விபசாரத்தில் தள்ளப்படுகின்றன அல்லது குழந்தை தொழிலாளர்களாக பணி அமர்த்தப்படுகின்றன அல்லது உடலுறுப்புகள் மாற்றத்திற்கும், இதர பல கிரிமினல் நடவடிக்கைகளுக்கும் பயன்படுத்தப்படுகின்றன.மருத்துவமனைகளில் இருந்தும் பெருமளவு சிசுக்கள் தூக்கிச் செல்லப்படுகின்றன. எனவே, குழந்தைகள் கடத்தல் மற்றும் குழந்தைகள் காணாமல் போவதைத் தடுக்க கடும் நடவடிக்கைகளை போலீசார் எடுக்க வேண்டும். மாயமாகும் குழந்தைகளையும் மீட்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை