உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பாரபட்சமற்ற விசாரணை தேவை: யோகிக்கு ராகுல் கடிதம்

பாரபட்சமற்ற விசாரணை தேவை: யோகிக்கு ராகுல் கடிதம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: 'ஹத்ராஸ் பகுதியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீட்டு தொகையை உயர்த்தி வழங்க வேண்டும். பாரபட்சமற்ற விசாரணை வேண்டும்' என உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு காங்கிரஸ் எம்.பி., ராகுல் கடிதம் எழுதியுள்ளார்.உத்தர பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டம் புல்ராய் கிராமத்தில், சாமியார் போலே பாபாவின் ஆன்மிக சொற்பொழிவு நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 121 பேர் உயிரிழந்தனர். பாதிக்கப்பட்ட மக்களை ராகுல் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். இது தொடர்பாக, உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு ராகுல் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீட்டு தொகையை உயர்த்தி வழங்க வேண்டும். பாரபட்சமற்ற விசாரணை வேண்டும். சம்பவத்துக்கு காரணமான குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்.தேவைப்படும் எந்த உதவிகளையும் செய்வதற்கு காங்கிரஸ் தொண்டர்களும் தயாராக இருக்கின்றனர். பாதிக்கப்பட்ட குடும்பத்தினரிடம் நான் பேசும் போது அவர்கள் வழங்கப்பட்டுள்ள இழப்பீட்டுத் தொகை போதுமானதகாக இருக்காது என்று தெரிவித்தனர். 80,000 பேர் கூடுவதற்கு மட்டுமே அனுமதி வழங்கிய நிலையில் இவ்வளவு பேர் எப்படி அங்கு கூடினார்கள். இவ்வாறு ராகுல் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

karunamoorthi Karuna
ஜூலை 08, 2024 08:48

இண்டியா கூட்டணி கட்சி ஆதரவு பெற்ற போலோ பாபா என்று தெரியும் அதனால் தான் பாரபட்சம் இல்லாமல் விசாரணை நடத்த வேண்டும் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவுகள் பற்றி நேரில் வந்து ஏன் விசாரணை நடத்த வில்லை இறந்தவர்கள்


ராமகிருஷ்ணன்
ஜூலை 08, 2024 05:34

மதத்தை பார்த்து பாரபட்ச விசாரணை செய்வது காங்கிரஸ்காரர்களின் வாடிக்கை. யோகியின் விசாரணை எப்படி பட்டது என்பது உலகறியும். நீ எல்லாம் அட்வைஸ் செய்ய வேண்டியதில்லை


பேசும் தமிழன்
ஜூலை 08, 2024 04:56

ராகுல் நிலைமையை பார்த்தால் பாவமாக இருக்கிறது.... முற்றி விட்டது போல் தெரிகிறது... அதனால் தான் பாராளுமன்றம் என்பதை மறந்து..... தெருமுனை பொது கூட்டத்தில் பேசுவது போல் பேசி இருக்கிறார்.... ஆற்றாமையின் வெளிப்பாடு தான் இந்த மாதிரி அரைவேக்காட்டு தனமான பேச்சு.... மக்கள் உங்களை மூன்றாவது முறையாக புறக்கணித்து விட்டார்கள்.... அதனை முதலில் புரிந்து கொள்ளுங்கள்.


பேசும் தமிழன்
ஜூலை 08, 2024 04:52

பப்பு..... கள்ளக்குறிச்சி நகருக்கு நீங்களும் வரவில்லை.... உங்கள் சகோதரியும் ஆளையே காணோம்..... ஏன் இங்கே நடப்பது உங்கள் புள்ளி வைத்த இந்தி கூட்டணி ஆட்சி என்பதாலா ???


பேசும் தமிழன்
ஜூலை 08, 2024 04:47

விபத்தின் விசாரணையை அவர் பார்த்து கொள்வார்.... நீங்கள் தமிழ்நாடில் கள்ள குறிச்சி அல்லது பெரம்பூர்.... செல்ல முடியுமா என்று பாருங்கள் !!.... மக்களின் மீதான உங்கள் அக்கறை புல்லரிக்க வைக்கிறது ???


skv srinivasankrishnaveni
ஜூலை 10, 2024 11:42

கள்ளக்குறிச்சி எங்கேருக்குன்னே


M Ramachandran
ஜூலை 07, 2024 21:21

அளவுக்கு மீறி பேசுபவனை சேட்டர் பாக்ஸ் என்பார்கள் படித்தவர்கள். யோகி சில தீவிர வாதிகள் சட்டத்திற்கு புறம்பாக நடப்பவர்கள் ஏன்னா பேசுகிறோம் என்று திரியும் கிறுக்கன்ங்கள் இவர்களை சரியானபடி அவர்கள் உணரும்படி செய்யும் ஆற்றல் இருப்பவர் யோகி ஆதித்தனார் அவர்கள்


Balasubramanian
ஜூலை 07, 2024 20:37

எத்தனை பேர் கூடியிருந்தால் காலடி மண்ணை எடுக்க துடிக்கும் மக்கள் இடையே 80 ஆயிரம் ஆனால் என்ன? லட்சம் ஆனால் என்ன? நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளரோ? அதை அனுமதித்த அரசோ எவ்வளவு பொறுப்பேற்க முடியும்? நிகழ்ச்சி நடத்திய ஹரி பாபா தான் இதற்கு பொறுப்பு! அவர் மேல் உரிய நடவடிக்கை தேவை!


Sathyanarayanan Sathyasekaren
ஜூலை 07, 2024 22:37

எதையுமே கொஞ்சம் சரியாக படித்துவிட்டு பிறகு கொந்தளியுங்கள். வழியில்இருந்த சாக்கடையில் தடுக்கி விழுந்து அதனால் ஒருவர் மீது ஒருவர் விழுந்து விபத்து ஏற்பட்டது. நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் செய்ய தவறிய கிரௌட் கண்ட்ரோல் தான் காரணம்


Sathyanarayanan Sathyasekaren
ஜூலை 07, 2024 22:37

எதையுமே கொஞ்சம் சரியாக படித்துவிட்டு பிறகு கொந்தளியுங்கள். வழியில்இருந்த சாக்கடையில் தடுக்கி விழுந்து அதனால் ஒருவர் மீது ஒருவர் விழுந்து விபத்து ஏற்பட்டது. நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் செய்ய தவறிய கிரௌட் கண்ட்ரோல் தான் காரணம்


sankaranarayanan
ஜூலை 07, 2024 20:27

பப்பூவே கள்ளக்குறிச்சிக்கு சென்று கள்ளன் யார் என்று முதலில் கண்டுபிடியுங்கள் இதுவரை அங்கே செல்லாத உம்முடைய ஆதரவு ஆளையும் முதலில் கூட்டிச்சென்று மக்களை சந்தியுங்கள் பணம் கொடுத்து செய்த தவறை மறப்பதைவிட அதற்கு காரணமானவர்களை முதலில் தண்டிக்க ஏற்பாடு செய்யுங்கள்


Sathyanarayanan Sathyasekaren
ஜூலை 07, 2024 19:59

இந்த பப்புவின் தந்தை இறந்தபோது நடந்த வன்முறைக்கு முறையான விசாரணை தேவை, இவர்களது ஆட்சில் நடந்த காஷ்மீர் படுகொலைகளுக்கு முறையான விசாரணை தேவை, இவன் அமெரிக்காவில் போதை பொருள் வைத்து இருந்ததாக கைது செய்யப்பட்ட விஷயத்திற்கு முறையான விசாரணை தேவை, ரபையல் விமான விஷயத்தில் பொய் சொல்லி மக்களை ஏமாற்றியதற்கான முறையான விசாரணை தேவை, இவனது அடிமை கார்கே, எப்படி கோடிக்கணக்கான சொத்துக்களை சேர்த்தார் என்பதற்கு முறையான விசாரணை தேவை, இவனும் இவனது அம்மாவும் சேர்ந்து சீனாவுடன் போட்ட புரிந்துணவர்வு ஒப்பந்தம் என்ன என்று மக்களுக்கு தெரியப்படுத்த முறையான விசாரணை தேவை.


mathan
ஜூலை 07, 2024 17:22

கள்ளக்குறிச்சி பற்றி உங்க அண்ணன் ஸ்டாலின் அவர்களுக்கு கடிதம் எழுதுங்கள் முதலில் .


மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை