உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஜன., 31ம் தேதி பட்ஜெட் கூட்டத்தொடர்: பிப்.,1ல் இடைக்கால பட்ஜெட்

ஜன., 31ம் தேதி பட்ஜெட் கூட்டத்தொடர்: பிப்.,1ல் இடைக்கால பட்ஜெட்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: இந்தாண்டின் முதல் பார்லி., கூட்டத்தொடர் ஜன.,31ல் ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையுடன் துவங்குகிறது. இடைக்கால பட்ஜெட் பிப்.,1ல் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார்.மத்திய பட்ஜெட் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி இறுதியில் தாக்கல் செய்யப்பட்டு வந்தது. இந்த நடைமுறையை மாற்றி 2017 முதல் பிப்ரவரி 1ம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. அந்த வகையில், நடப்பாண்டில் லோக்சபா தேர்தல் நடக்க உள்ளதால் இந்தாண்டு பிப்.,1ல் இடைக்கால பட்ஜெட்டாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ளார்.இதற்கான பார்லி., கூட்டத்தொடர் வரும் ஜன.,31ல் துவங்க உள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். இந்த ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் ஜன.,31ல் ஜனாதிபதி திரவுபதி உரையாற்ற உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை