உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இன்று மத்திய பட்ஜெட்; நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார்

இன்று மத்திய பட்ஜெட்; நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார்

புதுடில்லி: பட்ஜெட் கூட்டத்தொடரை முன்னிட்டு, இன்று (பிப்., 1ம் தேதி) இடைக்கால பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்து உரையாற்றுகிறார். நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யும் ஆறாவது மத்திய பட்ஜெட் இதுவாகும். கவர்ச்சிகரமான அறிவிப்புகள் இருக்குமா என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. 2024 பாராளுமன்ற லோக்சபா தேர்தல் சில மாதங்களில் நடக்க உள்ள நிலையில் இந்த பட்ஜெட் மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.முன்னதாக கடந்த ஜன.,30ம் தேதி டில்லியில் உள்ள பார்லி., நூலகக் கட்டடத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டம் கூடியது. காங்கிரஸ், திமுக, அதிமுக, இடது சாரி கட்சிகள், ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் கூட்டத்தை புறக்கணித்துள்ளன.கூட்டத்தில், பட்ஜெட் கூட்டத்தொடரை அமைதியான முறையில் நடத்த ஒத்துழைக்குமாறு கேட்டு கொள்ளப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

Shankar
பிப் 01, 2024 11:14

அநேகமாக இந்த இடைக்கால பட்ஜெட் அதிக கவர்ச்சிகரமாக இருக்க வாய்ப்பில்லை. காரணம், வருகிற நாடாளுமன்ற தேர்தலில் எப்படியும் மோடி அவர்கள்தான் மீண்டும் பிரதமராக வருவார் என்று அனைவரும் தெரிந்த விஷயம். அதனால் வாக்காளர்களை கவர்வதற்காக என்று எதுவும் இருக்கப்போவதில்லை.


BALU
பிப் 01, 2024 10:40

பட்ஜெட் பற்றியெல்லாம் அ-னா ஆ-வன்னா கூடத் தெரியாத 200 ரூபாவைப் பற்றி மட்டுமே தெரிந்த ஞானசூன்யங்கள் கருத்துக்களைப் பார்க்கும் போது 'நெஞ்சுப் பொறுக்குதில்லையே, இந்த நிலைகெட்ட மனிதரை நினைத்து விட்டால்' என்ற பாரதியின் வரிகள் தான் நினைவுக்கு வருகிறது. ஐய்யோ பாவம் 200 ரூபா தமிழா.


Rajarajan
பிப் 01, 2024 09:15

முதல்ல அரசு ஊழியருக்கு பட்ஜெட்ல நிதி ஒதுக்கி வெச்சிட்டு, மீதியை தானே மத்த துறைகளுக்கு ஒதுக்கி இருப்பீங்க. அவங்களுக்கு போதாதுன்னா, கூடுதல் வரிவிதிப்பு போடுவீங்க. இதுதானே கால காலமா வழக்கமா நடக்கறது. இதுல என்ன புதுசா இருக்கும்? யானை சிந்திய கவளம், ஆயிரம் எறும்புகளுக்கு உணவாகும். பட்ஜெட்டோட சாரம்சம் அவ்ளோதான்


ديفيد رافائيل
பிப் 01, 2024 08:21

தேர்தல் செலவுக்காக இந்த இடைக்கால பட்ஜெட்


Velan Iyengaar
பிப் 01, 2024 09:40

கிளம்பரத்துக்கு முன்னாடி மிச்சம் மீதி நல்லது மகாகோடீஸ்வரர்களுக்கு என்ன செய்யலாம் என்று ராப்பகலா யோசிச்சிருப்பாரு


KumaR
பிப் 01, 2024 11:09

அதுக்கு தான் உங்க தலைவர் ஸ்பெயின் போயிருக்காரோ.. மருமகன் கம்பனிக்கு சம்பாதிச்சு கொடுக்க.


sankaranarayanan
பிப் 01, 2024 07:56

எதிர் கட்சி எம் பிக்கள் அனைவருக்கும் அல்வா அல்லவா கொடுத்தாகிவிட்டது இனி அல்வா உண்ட களைப்புதான் மிச்சம்


Ramesh Sargam
பிப் 01, 2024 07:40

இன்று மதியம் பட்ஜெட் தாக்கல். இன்று சாயங்காலம் எதிர்க்கட்சியினர் பாஜக அரசையும், மோடிஜியையும், நிதி அமைச்சரையும் 'தாக்க' (குற்றம் சொல்ல) ஆரம்பித்துவிடுவார்கள். ஒரு சிலர் இது அம்பானி, அதானி போன்றவர்களுக்கு சாதகமான பட்ஜெட் என்று கூறுவார்கள். மற்ற சிலர் எப்பொழுதும்போல, இது தேர்தல் நேர பட்ஜெட் என்று கூறுவார்கள்.


அப்புசாமி
பிப் 01, 2024 07:32

பெரியவர் வடை சுட்டால் இவர் அல்வா கிளறி வினியோகம்.


Kasimani Baskaran
பிப் 01, 2024 05:39

உழைக்கும் வர்க்கத்துக்கு வருமான வரி வரம்பை உயர்த்த அதிக வாய்ப்பிருக்கிறது.


Venkatesan.v
பிப் 01, 2024 04:17

It was agreed by Dr. Subramanian Swamy as well.... He has such a successful ecomical advisory background....


ஆரூர் ரங்
பிப் 01, 2024 07:45

இந்திரா நேரு அரசியலை அவரது கணவர் ஃபெரோஸ் காந்தியே எதிர்த்தார். மந்திரிக்கு பிரதமரது ஆதரவு. போதும். சு சாமியின் ஆதரவு அவசியமில்லை.


Velan Iyengaar
பிப் 01, 2024 09:35

ஆதரவு இருந்தா போதும் என்கிறீர்கள் விளங்கிடும்


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை