பாட்னா: ஐக்கிய ஜனதா தள தலைவர் நிதிஷ் குமார், பீஹார் முதல்வராக 10வது முறையாக இன்று பதவி ஏற்கிறார். விழாவில், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோர் பங்கேற் கின்றனர். பீஹாரில், கடந்த 6 மற்றும் 11ம் தேதிகளில் சட்டசபை தேர்தல் நடந்தது. மொத்தமுள்ள, 243 தொகுதிகளுக்கு நடந்த ஓட்டுப்பதிவில், ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி, 202 இடங்களை பிடித்து அமோக வெற்றி பெற்றது. கூட்டணியில் இடம் பெற்ற பா.ஜ., 89; ஐக்கிய ஜனதா தளம் 85; லோக் ஜனசக்தி ராம் விலாஸ் பஸ்வான் கட்சி 19; ஹிந்துஸ் தானி அவாம் மோர்ச்சா 5, ராஷ்ட்ரிய லோக் மோர்ச்சா 4 இடங்களை பிடித்தன. கூட்டம் இதையடுத்து, என்.டி.ஏ., எனப்படும், தேசிய ஜனநாயக கூட்டணியின் புதிய எம்.எல்.ஏ.,க்கள் பங்கேற்ற கூட்டம் பாட்னாவில் நேற்று நடந்தது. இதில் தற்போதைய முதல்வரும் ஐக்கிய ஜனதா தள தலைவருமான நிதிஷ் குமார் தே.ஜ.., கூட்டணி எம்.எல்.ஏ.,க்கள் குழுவின் தலைவ ராக தேர்வு செய்யப்பட்டார். முன்னதாக, நேற்று காலை ஐக்கிய ஜனதா தள எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் நடந்தது. இதில், முதல்வர் நிதிஷ் குமாரை அக்கட்சியின் சட்டசபை தலைவராக தேர்வு செய்தனர். தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவராக தேர்வு செய்யப்பட்டதை அடுத்து, நிதிஷ் குமார் கூட்டணி கட்சி தலைவர்களுடன் சென்று கவர்னர் ஆரிப் முகமது கானை நேற்று மாலை சந்தித்தார். ராஜினாமா அப்போது வெளியேறும் அரசின் தலைவரான நிதிஷ், முதல்வர் பதவியை ராஜினாமா செய்வதற்கான கடிதத்தை கவர்னரிடம் அளித்தார். அதை ஏற்றுக்கொண்ட கவர்னர் ஆரிப், புதிய அரசு பதவியேற்கும் வரை இடைக்கால முதல்வராக நீடிக்கும்படி கேட்டுக்கொண்டார். இதையடுத்து, பீஹார் முதல்வராக, 10வது முறையாக நிதிஷ் குமார் இன்று பதவி ஏற்கிறார். காந்தி மைதானத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.