உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / எந்த சக்தியாலும் தேர்தலை தடுக்க முடியாது : தேர்தல் ஆணையம் உறுதி

எந்த சக்தியாலும் தேர்தலை தடுக்க முடியாது : தேர்தல் ஆணையம் உறுதி

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரில் தேர்தல் நடைபெறுவதை உள்நாட்டில் மட்டுமல்ல, எந்த வெளிநாட்டு சக்திகளாலும் தடுக்க முடியாது என தலைமை தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார் தெரிவித்தார்.ஜம்மு-காஷ்மீருக்கு வரும் செப்.30-ம் தேதிக்குள் சட்டசபை தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் கெடுவிதித்துள்ளது.இதையடுத்து தலைமை தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், தேர்தல் ஆணையர்கள் ஞானேஷ்குமார், எஸ்.எஸ். சாந்து ஆகியோர் நேற்று (ஆக.08 ) முதல் ஆக10-ம் தேதி வரை 3 நாள் முகாமிட்டு நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இன்று அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடைபெற்றது.பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் ராஜிவ் குமார் கூறியதாவது, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளோம். இங்கு சட்டசபை தேர்தலை முழு அர்ப்பணிப்புடனும், உறுதியுடனும் நடத்த எல்லா ஏற்பாடுகளும் செய்து நடவடிக்கை எடுத்து வருகிறோம். இத்தேர்தலை சீர்குலைக்க உள்நாட்டில் மட்டுமல்ல, எந்த வெளிநாட்டு சக்திகளாலும் தடுக்க முடியாது.அவர்களுக்கு ஜம்மு காஷ்மீர் மக்கள் இத்தேர்தலில் தகுந்த பதிலடி கொடுப்பார்கள் எந்த சூழ்நிலைகளையும் சமாளிக்க கூடிய வகையில் நமது படைகள் வலுவாக உள்ளன என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

GMM
ஆக 09, 2024 23:01

ஜம்மு காஷ்மீர் மக்கள் தேர்தல் ஆதரித்து பதிலடி கொடுப்பதை அறிய தேர்தல் ஆணையம் வாக்காளர் கருத்து கேட்க வேண்டும். அங்கீகாரம் பெற்ற கட்சிகள் தேர்தலில் போட்டியிடலாம். வாக்காளர்கள் பயமின்றி வாக்களிக்க முடியுமா? ஆயுத குழுக்கள் அழிக்க பட வேண்டும். தேச பற்றுடன் வளராத, வாக்குரிமை பெற்றவர் அதிகம். உச்ச நீதிமன்றம் எந்த புள்ளி விவரங்கள் கொண்டு கெடு விதிக்கிறது? வழக்கறிஞர்கள் நீதிமன்ற விதிகளை வாதம் மூலம் இஷ்டம் போல் திருத்தி வருகின்றனர். வக்கீல் வாதம் இரு பக்கம் பலன் பாதிப்பு தர வேண்டும்.


தஞ்சை மன்னர்
ஆக 09, 2024 21:14

ஹி ஹி நீங்க சொல்லுறதை பார்த்தால் ஆர் எஸ் எஸ் கொலைகார கும்பலுக்கு வேலை வந்துருச்சின்னு சொல்லுங்க


N Sasikumar Yadhav
ஆக 09, 2024 23:26

உங்கள மாதிரியான ஐஎஸ்ஐஎஸ் ஆதராவாளர்களுக்கு எச்சரிக்கை செய்யதான் தலைமை தேர்தல் ஆணையர் அப்படி சொல்கிறார்


T.sthivinayagam
ஆக 09, 2024 21:06

ஐயா நீங்கள் சொல்லும் சக்தி ஒரு சிலரை சார்ந்து இருக்கக்கூடாது


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை