உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / டில்லியில் ஹேமந்த் சோரன் இல்லை: வலைவீசும் அமலாக்கத்துறை

டில்லியில் ஹேமந்த் சோரன் இல்லை: வலைவீசும் அமலாக்கத்துறை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: சட்டவிரோத நிலக்கரி சுரங்க ஊழல் வழக்கு, நில அபகரிப்பு வழக்குகளில் 9-வது முறையாக சம்மன் அனுப்பியதையடுத்து டில்லியில் அவரது இல்லத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்த சென்றனர். அவர் இல்லை தலைமறைவாகிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.ஜார்க்கண்ட் முதல்வராக ஹேமந்த் சோரன், 48, உள்ளார். இம்மாநிலத்தில் சட்ட விரோதமாக சுரங்கம் தோண்டிய வழக்கில், அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. மேலும் அத்துடன், போலி ஆவணங்கள் வாயிலாக அபகரிக்கப்பட்ட நிலங்கள் முதல்வர் ஹேமந்த் சோரன் பெயரில் பதிவு செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதில் நடந்த சட்டவிரோத பணபரிமாற்றம் தொடர்பாக அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து 9 முறை சம்மன் அனுப்பிது.இந்நிலையில் 7-வது முறையாக அனுப்பிய சம்மனுக்கு பணிந்து கடந்த 20-ம் தேதி வீட்டிலேயே விசாரணை நடத்துமாறு கூறியதையடுத்து அவரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் 7 மணி நேரம் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்றனர்.மீண்டும் 8-வது முறையாக சம்மன் அனுப்பியது. இந்த சம்மனுக்கு ஹேமந்த் சோரன் பதில் அளிக்கவில்லை.இந்நிலையில் விசாரணை முழுமையாக முடியவில்லை என்று கூறி ஹேமந்த் சோரனுக்கு, அமலாக்கத்துறை 9-வது முறையும் சம்மன் அனுப்பப்பட்டது. அதில் ஜன.27-ம் தேதி முதல் 31-ம் தேதிக்குள் ஏதேனும் ஒருநாள் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று கடிதம் அனுப்பியது. இக்கடிதத்துக்கு ஹேமந்த் சோரன் தரப்பில் எந்தவித அதிகாரபூர்வ பதிலும் அனுப்பப்படவில்லை எனக் கூறப்படுகிறது.இந்நிலையில், இன்று (ஜன. 29) டில்லியில் உள்ள ஹேமந்த் சோரனின் இல்லத்தில் அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்த சென்றனர். வீட்டில் ஹேமந்த் சோரன் இல்லை அவர் பற்றிய தகவல் அங்கிருந்தவர்களுக்கும் தெரியவில்லை. இதனால் ஹேமந்த் சோரன் எங்கு சென்றார் என்பது பற்றிய தகவல் தெரியாமல் அவரை தேடும் முயற்சியில் அமலாக்கத்துறை இறங்கியுள்ளது. எப்படியாயினும் அவர் 31-ம் தேதிக்குள் அஜராக வேண்டும் எனவும் கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

NACHI
ஜன 30, 2024 09:44

சோமந் மெரினா பிச்சுலை குதிரை ஒட்டிகிட்டு இருக்காப்பிள்ளை


Sampath
ஜன 30, 2024 07:24

Check in Kajerival house


Indhuindian
ஜன 30, 2024 06:08

ஜார்கண்ட் அரசு எங்க முதலமைச்சரே காணோம் அப்டீன்னு ஒரு ஆட் கொணர்வு மனுவை தாக்கல் செய்ய வேண்டும். கண்ணுக்குஎதிராவே அமைச்சரை குண்டுக்கட்ட தூக்கி கார்லே போட்டு அவரை கைது செய்து எடுத்துக்கிட்டு போனதை எல்லா டீவி லேடயும் திருப்பி திருப்பி போட்டும் எங்க வூட்டுக்காரை காணோம் கண்டுபிடியுங்கன்னு ஒரு ஆட்கொணர்வு மனுவை அவரோட சம்சாரம் போடலையா அதேமாதிரி அந்த மாநிலமே போடாநும்


sankaranarayanan
ஜன 30, 2024 00:30

அமலாக்கத்துறையின் துணி வலை சரி இல்லை வலை வீசி என்ன பயன் அமெரிக்காவிலிருந்து அலெக்ட்ராஸ் சிறையிலுள்ள வலையை வாங்கி வாருங்கள் தப்பிக்கவே முடியாது அது அரசியல் வாதிக்குகளுக்கென்ற தனியாக பின்னப்பட்டது இவன் எங்கேயாவது நிலக்கரி சுரங்கத்துக்குள்ளேயே பதுங்கிக்கிடப்பான்


vnatarajan
ஜன 29, 2024 22:12

மடியிலே கநம் யிருந்தாத்தானே ஓடி ஒலியனும்.ஒருவேளை அவர் தோண்டிய சுரங்கத்துக்குள்ளே ஓடி ஒளிந்திருப்பாரோ. அமலாக்க துறை அங்கெ தேடிப்பார்க்கலாமே.


SUBBU,MADURAI
ஜன 29, 2024 21:02

Hemant Soren, Jharkhand CM, s history as the first ever CM to abscond. ED is hunting him for corruption cases.


Raa
ஜன 29, 2024 20:04

வெட்கமாக இல்லை? இந்த லக்ஷ்ணத்தில் முன்னாள் முதல்வர் வேறு... பொய்வழக்காக இருந்தாலும் பொது வாழ்க்கைக்கு வந்தபிறகு எதிர் கொள்ள வேண்டுமல்லவா? ஓடி ஒளிவது தலைவர்களுக்கு அழகல்லவே?


மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ