உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஒரே நாடு; ஒரே தேர்தல் மசோதா : தேர்தல் கமிஷனுக்கு அழைப்பு

ஒரே நாடு; ஒரே தேர்தல் மசோதா : தேர்தல் கமிஷனுக்கு அழைப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

'ஒரே நாடு; ஒரே தேர்தல்' குறித்த அரசியலமைப்பு சட்ட திருத்த வரைவு மசோதாவை ஆய்வு செய்து வரும் பார்லிமென்ட் கூட்டுக்குழு, அது குறித்து ஆலோசிக்க தலைமை தேர்தல் கமிஷனர் மற்றும் தேர்தல் கமிஷனர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.நாடு முழுதும் உள்ள மாநிலங்களில் நடக்கும் லோக்சபா மற்றும் சட்டசபை தேர்தல்கள் அனைத்தையும் ஒரே நேரத்தில் நடத்த வேண்டும் என வலியுறுத்தி வரும் மத்திய அரசு, ஒரே நாடு; ஒரே தேர்தல் என்ற புதிய நடைமுறையை அமல்படுத்த தீவிரம் காட்டி வருகிறது.அறிக்கை அடிக்கடி நடத்தப்படும் தேர்தல்களால் ஏற்படும் செலவுகளையும், தேர்தல் நடத்தை விதிகள் காரணமாக அரசின் திட்டப் பணிகளில் ஏற்படும் பாதிப்புகளையும் குறைக்க வேண்டும் என்ற எண்ணத்தில், இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.ஒரே நாடு; ஒரே தேர்தல் திட்டத்தை ஆய்வு செய்வதற்கு, முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் உயர் மட்டக் குழுவை மத்திய அரசு அமைத்திருந்தது. இந்த குழு சமர்ப்பித்த அறிக்கையை, கடந்தாண்டு செப்டம்பரில், மத்திய அமைச்சரவை ஒருமனதாக ஏற்றது.அதில் வழங்கப்பட்ட பரிந்துரைகள் ஏற்கப்பட்டதை அடுத்து, ஒரே நாடு; ஒரே தேர்தல் மசோதா கடந்த ஆண்டு டிச., 17ல் பார்லிமென்டில் அறிமுகம் செய்யப்பட்டது.அதன்படி, லோக்சபா தேர்தலுடன், அனைத்து மாநில சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வழிவகை செய்யும் மசோதா, லோக்சபாவில் தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு எதிர்க்கட்சிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்தன.ஆலோசனை இதையடுத்து, ஒரே நாடு; ஒரே தேர்தல் மசோதா, இதற்காக அமைக்கப்பட்ட பா.ஜ., - எம்.பி., பி.பி.சவுத்ரி தலைமையிலான பார்லி., கூட்டுக் குழுவின் ஆய்வுக்கு அனுப்பப்பட்டது.இந்தக் குழு சட்ட நிபுணர்கள், ஓய்வு பெற்ற நீதிபதிகள், வழக்கறிஞர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் உட்பட பல்வேறு தரப்பினரிடம் தொடர்ந்து ஆலோசித்து வருகிறது.இந்நிலையில், தேர்தல்களை நடத்தும் முழு அதிகாரம் படைத்த தலைமை தேர்தல் கமிஷனுடன் ஆலோசிக்க பார்லி., கூட்டுக் குழு முடிவு செய்துள்ளது.அதிகாரம் இதுதொடர்பாக, டிச., 4ம் தேதி ஆலோசனை நடத்த தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமார் மற்றும் பிற தேர்தல் கமிஷனர்களுக்கு பார்லி., கூட்டுக்குழு அழைப்பு விடுத்துள்ளது.டிச., 1ம் தேதி பார்லி., குளிர்கால கூட்டத்தொடர் துவங்க உள்ள நிலையில், இந்த முக்கிய ஆலோசனைக் கூட்டம் பார்லிமென்ட் வளாகத்திலேயே நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.இந்த ஆலோசனையின் முடிவில், ஒரே நாடு; ஒரே தேர்தல் விஷயத்தில், தலைமை தேர்தல் கமிஷனின் அதிகாரம் குறித்து இறுதி செய்யப்படும் என கூறப்படுகிறது.ஒரே நாடு; ஒரே தேர்தல் சட்ட மசோதாவில் 82 ஏ(5) பிரிவில் இடம்பெற்றுள்ள, குறிப்பிட்ட மாநிலங்களில் சட்டசபை தேர்தல்களை தள்ளி வைக்கவோ அல்லது முன்கூட்டியே நடத்தவோ, தேர்தல் கமிஷனுக்கு அதிகாரம் அளிப்பது குறித்த சட்ட சிக்கலுக்கும் இந்த ஆலோசனையின் போது தீர்வு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.நமது டில்லி நிருபர் -:


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை