உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நமோ ஹாட்ரிக் என்ற வாசகத்துடன் காவி உடையில் பார்லிமென்ட் வந்த மத்திய அமைச்சர் அனுராக்தாக்கூர்

நமோ ஹாட்ரிக் என்ற வாசகத்துடன் காவி உடையில் பார்லிமென்ட் வந்த மத்திய அமைச்சர் அனுராக்தாக்கூர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்று ‛காவி டீசர்ட்டில்' வந்து அனைவரின் கவனத்தை ஈர்த்தார் மத்திய அமைச்சர் அனுராக் தாக்குர்.பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனாதிபதி உரையுடன் ஜன. 31-ல் கூடியது, பிப்1-ம் தேதி பொதுபட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தாக்கல் செய்து உரையாற்றினார். பின்னர் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவித்து பிரதமர் மோடி இரு அவைகளிலும் உரையாற்றினார். இன்று (10 ம் தேதி) கூட்டத்தொடரின் கடைசி நாள் என்பதால் மோடி உரை முக்கியத்துவம் பெற்றுள்ளது.அதே நேரம் கூட்டத்தொடரில் பங்கேற்க வந்த மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாகூர் ‛நமோ ஹாட்ரிக் வாசகத்துடன் கூடிய காவி டீசர்ட்டில் வந்தார். அவரது வித்தியாச உடை அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.அனுராக் தாகூர் கூறியது, ‛‛பிரதமர் மோடி வரும் லோக்சபா தேர்தலில் 3வது வெற்றியை எதிர்நோக்கி பயணிக்கிறார். அதோடு பொருளாதாரத்தில் இந்தியாவை 3வது வளர்ந்த நாடாக உயர்த்தும் நோக்கில் செயல்பட உள்ளார். இதனை உணர்த்தவே ‛நமோ ஹாட்ரிக்' டீசர்ட் அணிந்துள்ளேன் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

RAMAKRISHNAN NATESAN
பிப் 11, 2024 12:01

ஹிந்தி தெரியாது போடா டி ஷர்ட் -ஐ ஊக்குவித்த தேசவிரோதிகளுக்கு எரிச்சலை ஏற்படுத்தும் செய்தி அண்ட் போட்டோ ....


J.V. Iyer
பிப் 11, 2024 07:22

பாரதத்திற்கு மீண்டும் மோடிஜி வேண்டும் மோடிஜி தமிழகத்திற்கும் வேண்டும் மோடிஜி அடுத்த தமிழக முதல்வர் அண்ணாமலைஜி.


A1Suresh
பிப் 10, 2024 21:55

வாழ்க வளர்க, மாண்புமிகு அமைச்சர் அனுராக் காஷ்யப் ஜி பல்லாண்டு வாழ்க


T.sthivinayagam
பிப் 10, 2024 21:48

கோவிந்தா கோவிந்தா ஏழுமலையானுக்கு கோவிந்தா


g.s,rajan
பிப் 10, 2024 21:39

எது எப்படியோ மீண்டும் உங்களை நம்பி இருக்கும் மக்களைக் க்ளீன் போல்ட் ஆக்கி விடாதீர்கள் .....


Vijay D Ratnam
பிப் 10, 2024 21:28

செம்ம செம்ம செம்ம. சூப்பரா இருக்குதுங்கோ.


Priyan Vadanad
பிப் 10, 2024 21:03

அருமையான கருத்துச்செயல், கருத்து விளக்கம். ஹைகூ கவிதை மாதிரி. ஹைகூ அனுராக்.


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை