உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / உ.பி., பா.ஜ.,வுக்குள் கோஷ்டி சண்டை: அகிலேஷ் யாதவ் கண்டுபிடிப்பு

உ.பி., பா.ஜ.,வுக்குள் கோஷ்டி சண்டை: அகிலேஷ் யாதவ் கண்டுபிடிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

லக்னோ: 'உ.பி., பா.ஜ.,வுக்குள் கோஷ்டி சண்டை நடக்கிறது. கட்சியினர் பதவிக்காக சண்டையிட்டு வருவதால், மக்கள் சிரமப்படுகின்றனர்' என சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.லக்னோவைச் சேர்ந்த மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர் விஜய் பகதூர் அகிலேஷ் யாதவ் முன்னிலையில் சமாஜ்வாதி கட்சியில் இணைந்தார். பின்னர், நிகழ்ச்சியில் அகிலேஷ் யாதவ் பேசியதாவது: உ.பி., பா.ஜ.,வுக்குள் கோஷ்டி சண்டை நடக்கிறது. கட்சியினர் பதவிக்காக சண்டையிட்டு வருவதால் மக்கள் சிரமப்படுகின்றனர். பா.ஜ., ஆட்சி நிலையற்றது. ஆசிரியர்களை பா.ஜ., அரசு துன்புறுத்துகிறது. இது அரசு பலவீனமாகி விட்டது என்பதை தெளிவாக காட்டுகிறது. நீதி கேட்டு பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். போலீசாரும், உள்ளாட்சி நிர்வாகமும் என்ன செய்து கொண்டிருக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.

அதிருப்தி

பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் பலர் முதல்வர் யோகி ஆதித்யநாத் மீது அதிருப்தியில் உள்ளதாக துணை முதல்வர் கேசவ் மவுரியா கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கிடையே, உ.பி., பா.ஜ., தலைவர் பூபேந்திர சவுத்திரி, பா.ஜ., தேசிய தலைவர் நட்டாவை சந்தித்துள்ளார். அப்போது அவர் நட்டாவுடன் உ.பி., பா.ஜ.,வுக்குள் நடந்து வரும் கோஷ்டி மோதல் குறித்து ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

தத்வமசி
ஜூலை 18, 2024 10:18

உங்களைப் போல குடும்பம் கட்சி நடத்தினால் அதில் அடிமைகள் மட்டுமே இருப்பார்கள். ஆனால் பிஜேபி போன்ற பெரிய கட்சிகளில் சுதந்திரம் உள்ளது. அவர்கள் தலைமைக்கு கட்டுப் பட்டு நடப்பார்கள். அவர்களும் ஒருநாள் தலைவர் ஆவார்கள். உங்கள் கட்சியில் அப்படி வேறு யாராவது தலைவர் ஆக இயலுமா ? பிறகு அடுத்த கட்சியைப் பற்றி பேசலாம் அகிலேஷ்.


Barakat Ali
ஜூலை 17, 2024 20:23

கண்டுபிடிப்பு ன்னு போட்டு அகிலேஷை கிண்டல் பண்ணிட்டேளே ...... அகிலேஷண்ணா சொன்னது சரியான ஸ்டேட்மென்டுங்காணும் .....


Barakat Ali
ஜூலை 17, 2024 20:11

வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் ஆட்சி மாற்றமும் உறுதி .....


MADHAVAN
ஜூலை 17, 2024 18:37

இது உண்மையான நியூஸ்தான், இதில் என்ன சந்தேகம் இருக்கிறது


Nandakumar Naidu.
ஜூலை 17, 2024 17:03

அதை நாங்க பார்த்துக்கொள்வோம், நீ ஏண் கவலைப்படுற?


Velan Iyengaar
ஜூலை 17, 2024 16:04

இலவச பேருந்து திட்டத்தை எதிர்த்த மோடி ... சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ள இலவச பேருந்து திட்டத்தை திறந்து வைக்க வருவாரா ???


Anand
ஜூலை 17, 2024 15:37

என்ன ஒரு கண்டுபிடிப்பு, அடுத்து மிகவும் கடினமான கண்டுபிடிப்பாக அவர் தலையில் இருக்கும் தொப்பி எப்படி உருவானது என கண்டுபிடிப்பார்..


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை