உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நிலுவையில் மசோதாக்கள்: மேற்கு வங்கம், கேரள கவர்னர்களுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

நிலுவையில் மசோதாக்கள்: மேற்கு வங்கம், கேரள கவர்னர்களுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் நிலுவையில் வைத்துள்ள குற்றச்சாட்டு தொடர்பாக பதிலளிக்கும்படி கேரள, மேற்கு வங்க கவர்னர்களுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.மேற்கு வங்க சட்டசபையில் 8 மசோதாக்கள் கவர்னரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் ஓராண்டுக்கு மேலாக அவற்றை கவர்னர் நிலுவையில் வைத்து உள்ளதாக மாநில அரசு குற்றம்சாட்டியது. இது தொடர்பாக உச்சநீதிமன்றத்திலும் அம்மாநில அரசு வழக்கு தொடர்ந்தது. அதேபோல், கேரள கவர்னரும் 4 மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் நிலுவையில் வைத்துள்ளதாக அம்மாநில அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.இதனை விசாரித்த தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு, மாநில அரசுகளின் மனு குறித்து பதிலளிக்கும்படி கேரள கவர்னர் அலுவலகத்திற்கும், மேற்கு வங்க கவர்னர் அலுவலகத்திற்கும் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

என்றும் இந்தியன்
ஜூலை 26, 2024 16:47

West Bengal Governor CV Ananda Bose said that out of the eight Bills, six were reserved for the consideration of President Draupadi Murmu, while another is subjudice and no representative of the state government turned up at the Raj Bhavan despite being called as some clarifications were needed.


sundarsvpr
ஜூலை 26, 2024 16:32

பொய்யான வாக்குறுதிகளை அதனை நிறைவேற்றாமல் அரசுகள் தொடர்கின்றன. இவைகளும் நிர்வாக பொய்யுரைகள்தான். இதே அரசுகள் மீண்டும்தொடர்கின்றனர். வாக்குறுதிகள் கிடைப்பில் உள்ளன. அரசியல் கட்சியில் நிறைவேற்றாமல் இருப்பதும் ஆளுனர்கள் மசோதாக்களை மேஜையின்மீது வைத்துஇருப்பதும் ஒன்றுதான். நீதிமன்றங்களில் நிறைய வழக்குகள் சட்டத்திற்கு உட்பட்டு 20 ஆண்டுகளாக நிலுவையில் உள்ளன. சட்டத்திற்கு உட்பட்டு ஆளுனர்களும் கோப்புகளை வைத்துள்ளனர். நேருக்கு நேர். ஒத்தைக்கு ஒத்தை


GMM
ஜூலை 26, 2024 15:22

ஊழல் மந்திரிகள் என்று தீர்ப்பு கூறி தண்டிக்கும் நீதிபதிகள் பதவி உடன் பறிக்கப்படும் என்று மசோதா தாக்கல் செய்தால், கவர்னர் ஒப்புதல் அளிக்க வேண்டுமா? அது சட்டமானால், நீதிமன்றம் ஏற்குமா?


Iniyan
ஜூலை 26, 2024 15:09

நீதி மன்றங்கள் எதிர் கட்சிகளை விட மோசமாக செயல் படுகின்றன.


Raj Kamal
ஜூலை 26, 2024 15:56

இம்மாதிரி பிரச்சனைகள் ஏன் பிஜேபி ஆளும் மாநிலங்களில் வருவதில்லை என்று யோசித்தீர்களா? யோசித்தால் விடை கிடைக்கும்.


ஆரூர் ரங்
ஜூலை 26, 2024 15:08

மக்கள் அரசுத் துறைகளுக்கு அனுப்பும் மனுக்களுக்கு தீர்வளிக்க கால நிர்ணயம் இல்லை. ஆனால் கவர்னர் மட்டும் மசோதாக்களைப் படித்துப் பார்க்காமல் உடனே கையெழுத்து போட வேண்டும்?. ஏன் கோர்ட் கூட வழக்கு போட்ட அன்றே தீர்ப்பு சொல்லணும்னு கேட்பீங்களோ?


Anbuselvan
ஜூலை 26, 2024 14:51

இந்த விஷயத்தில் கவர்னர்கள் மசோதாவை ஒப்பு கொள்ள அல்லது நிராகரிக்க கால கெடுவை அரசியல் சாசனத்தில் சீர்திருத்த மாற்றம் ஐயும் மசோதாவை இயற்ற வேண்டும்


LION Bala
ஜூலை 26, 2024 14:12

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டசபை உறுப்பினர்களின் பெறும்பான்மையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஆளுநர் அவர்கள் விருப்ப வெறுப்பு இன்றி ஒப்புதல் வழங்குவதே நல்லது.


ஆரூர் ரங்
ஜூலை 26, 2024 14:10

எப்படிப்பட்ட மசோதாக்கள் என்பதை கோர்ட் படித்துப் பார்க்கட்டும். கனம் நீதிபதிகள் அந்த மசோதாக்கள் சட்டமாக நிறைவேற்றப்பட்டால் அவற்றை செல்லாததாக தீர்ப்பளிக்க மாட்டோம் எனும் உறுதி தருவார்களா? அரசியல் சட்டத்திற்கு எதிரான மசோதாக்களால் வரிப்பணம் வீணாகிறது. உரிமைகளும் பறிக்கப்படுகின்றன


GMM
ஜூலை 26, 2024 13:38

நிர்வாக, நீதிமன்ற நிலுவை மனுக்கள் மீது இறுதி நடவடிக்கை எடுக்க கால நிர்ணயம் செய்யப்படவில்லை. அப்படி இருக்கும் போது கவர்னர், ஜனாதிபதி முடிவை நீதிமன்றம் கேட்க முடியாது. அரசியல் சாசன கவர்னருக்கு எப்படி நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப முடியும்? மசோதாக்கள் பொது நலம் இல்லாமல் மத்திய சட்ட விதிகளுக்கு வெளியே தயாரிக்கும் போது, ஏற்க, நிராகரிக்க, முடிவு செய்ய கால அவகாசம் தேவை. நீதிமன்றம் கவர்னரை கேள்வி கேட்பது தவறான நடைமுறை. நீதிமன்றம் வழக்கறிஞர்கள் மனு அடிப்படையில் தான் கேள்வி கேட்கும். மத்திய அரசு தான் முறைப்படுத்த முடியும்.


V GOPALAN
ஜூலை 26, 2024 13:10

Long pending cases fir the last 15 years un attend we 130 crores voters are asking the cji. What is the reply.


மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி