உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சரண் சிங்கிற்கு பாரத ரத்னா விருது வழங்காத காங்.,: துணை ஜனாதிபதி சாடல்

சரண் சிங்கிற்கு பாரத ரத்னா விருது வழங்காத காங்.,: துணை ஜனாதிபதி சாடல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: முன்னாள் பிரதமர் சரண் சிங், நேரு குடும்பத்தை சேர்ந்தவராக இருந்திருந்தால், அவருக்கு பாரத ரத்னா விருதை காங்கிரஸ் வழங்கியிருக்கும் என மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் கூறியுள்ளார். காங்கிரஸ் கட்சியை துணை ஜனாதிபதியும் கடுமையாக சாடி உள்ளார்.முன்னாள் பிரதமர் சரண் சிங்கிற்கு பாரத ரத்னா விருது வழங்கப்படுவதாக பிரதமர் மோடி நேற்று அறிவித்தார். பார்லிமென்ட் கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்று இது தொடர்பாக ராஜ்யசபாவில் விவாதம் நடந்தது.அப்போது, மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் பேசுகையில், சரண் சிங்கை அவமதித்ததற்காக காங்கிரஸ் மன்னிப்பு கேட்க வேண்டும். ஆனால், அவருக்கு பாரத ரத்னா விருது அறிவித்து பிரதமர் மோடி மரியாதை செலுத்தியது பெருமைப்படும் தருணம். சரண் சிங்கிற்கு விருது அளித்து பிரதமர் மோடி பெருமைப்படுத்தியதை காங்கிரஸ் கொண்டாட வேண்டும். ஆனால், காங்கிரஸ் ஆட்சியின் போது, அவருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படவில்லை. ஒரு வேளை அவர் நேரு குடும்பத்தை சேர்ந்தவராக இருந்திருந்தால், பெயரில் நேரு காந்தி என இருந்து இருந்தால் விருதை காங்கிரஸ் அளித்து இருக்கும். இவ்வாறு அவர் பேசினார்.இதற்கு பதிலளித்த எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, அரசியல் கட்சி, மதம், ஜாதியை தாண்டி நாட்டிற்காக பணியாற்றிய அனைவருக்கும் காங்கிரஸ் மரியாதை செலுத்துகிறது என்றார்.அப்போது பேசிய துணை ஜனாதிபதி ஜக்தீப் தங்கர் கூறுகையில், ‛‛ சரண் சிங்கை காங்கிரஸ் அவமானப்படுத்தியது. அவரது பாரம்பரியத்தை அவமானப்படுத்தியது. சரண் சிங்கிற்கு விருது வழங்க அக்கட்சிக்கு நேரம் இல்லை. சரண் சிங் விவகாரத்தில் இது போன்ற சூழலை உருவாக்கி நாட்டில் உள்ள ஒவ்வொரு விவசாயியையும் காயப்படுத்துகிறீர்கள். இதற்கு நாம் தலை குனிய வேண்டும். சரண் சிங்கை அவமானப்படுத்துவதை என்னால் பொறுத்துக் கொள்ள முடியாது. குறை சொல்ல முடியாத நேர்மை, விவசாயிகளுக்கான அர்ப்பணிப்பு ஆகியவற்றுக்காக அவர் நிற்கிறார். இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

அப்புசாமி
பிப் 11, 2024 07:35

பாரத ரத்னா ஜகதீப் வாழ்க.


நரேந்திர பாரதி
பிப் 11, 2024 04:53

இதோ காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது கொடுக்கப்பட்ட பாரத் ரத்னா லிஸ்ட் (ஒரு உதாரணம்) பாருங்க ஜவாஹர்லால் நேரு, அப்துல் காபர் கான், காமராஜ், சாகிர் ஹுசைன்,மௌலானா ஆசாத், எம்.ஜி.ஆர், அருணா ஆசப் அலி ,இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி (தியாகிகள் சஞ்சய் காந்தி, சோனியா, ராவுல், ப்ரியங்கா பெயர்கள் விட்டுப்போச்சு)...இதுல நேரு, இந்திரா, ராஜீவ் இதெல்லாம் தனக்குத்தானே கொடுத்துக்கிட்டது...


Ramesh Sargam
பிப் 10, 2024 23:06

சரண் சிங்கிற்கு பாரத ரத்னா விருது வழங்காத காங்கிரஸ். தமிழகத்தில் பெரியாருக்கு வழங்கவில்லை என்று திமுக.


A1Suresh
பிப் 10, 2024 22:17

மாண்புமிகு மோடிஜி அவர்களுடைய ராஜதந்திரம் இதில் நன்கு புலப்படுகிறது. உத்தரபிரதேசத்தில் எண்பதுக்கு எண்பது முழு ஸ்வீப் அடிக்கிறார். பீஹாரிலும் நூறு சதவிகித ஸ்வீப் அடிக்கிறார்.


Indhuindian
பிப் 10, 2024 20:30

These awards to politicians should be totally done away with. Thank God, Congress has no chance of ever coming back to power in the Centre. Just imagine what would happen then. Congress would give Bharat Ratna to Sonia Gandhi, Rahul Gandhi and even Sanjay Gandhi posthumously. May be it would even be given to Priyanka and Robert Vadra. Sir C V Raman hated Nehru and did not like the award being given to him by an aetherist like Nehru, He was so furious that he by his own hands hammered the award to express his anger and discomfiture


Indhuindian
பிப் 10, 2024 20:15

Bharat Rathna to Shri M S Swaminathan is long overdue. He should have been decorated with this honor alongside with Shri C Subramaniam. However, C S being a politician took the priority. Aside, these awards have lost its significance and value not today but from inception itself. In partiulcular, the awards conferred posthumously. Men of eminence have to be honoured during their life time or at the least in the year following theri demise.What's the point in honouring decades later. In anycase these awards should not be conferred on anyone who even has the slim connection to politics. Electoral politics and coaltion politics overtake the merit. Look at the ist of Bharat Rathna awardeeds. How may deserved them. Are the politicians like Karpoori Thakoor or Charan Singh is of the same class as Sir C V Raman or Sri P V Kane and the like. It's high time Padma awards are given a decent burial


Francis
பிப் 10, 2024 19:01

பாபு ஜெகஜீவன் ராம் அவர்களுக்கும் பாரத் ரத்னா விருது வழங்கப்பட வேண்டும்


Indian
பிப் 10, 2024 18:57

இவர் துணை ஜனாதிபதியா பாஜகவின் செய்தி தொடர்பாளரா ?


sankar
பிப் 10, 2024 19:58

இதில் உங்களுக்கு என்ன பிரச்சினை -அப்பாவு போல அவர் ஒரு சார்பு அல்ல


Arachi
பிப் 10, 2024 18:55

முன்னாள் காங்கிரஸ் கட்சி பிரதமர்களுக்கு பாரத்ரத்னா விருது வழங்குவதில் இருந்து காங்கிரஸ் ஆட்சி சிறப்பாக நடந்திருக்கிறது என்று ஒப்புக் கொண்ட தற்போதைய பிரதமருக்கு நன்றி.


S.kausalya
பிப் 10, 2024 17:51

கடைசி வரை Congress ஆளாகவே இருந்த திரு நரசிம்ம ராவ் அவர்களுக்கே tharavillai. திரு சரண்சிங்,,இந்த கட்சி தலைவரின் பேச்சை கேட்டு moraarji desai அரசை கவிழ்த்து விட்ட ஒரு செயலுக்காக விருது குடுப்பார்க ளா?


மேலும் செய்திகள்





புதிய வீடியோ