உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கூர்மையான சிந்தனை கொண்டவர் ராஜாஜி; பிரதமர் மோடி புகழாரம்

கூர்மையான சிந்தனை கொண்டவர் ராஜாஜி; பிரதமர் மோடி புகழாரம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ராஜாஜியின் 147வது பிறந்த நாளையொட்டி, அவர் கூர்மையான சிந்தனை கொண்டவர் என்று பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.அவரது அறிக்கை; ஸ்ரீ சி.ராஜாகோபாலாச்சாரியை பற்றி நினைக்கும் போது, சுதந்திர போராட்ட வீரர், சிந்தனையாளர் உள்ளிட்ட பல்வேறு வார்த்தைகள் தான் என் மனதில் எழுகின்றன. அவரது பிறந்த நாளன்று அவருக்கு மரியாதை செலுத்த கடமைப்பட்டுள்ளேன். 20ம் நூற்றாண்டின் கூர்மையான சிந்தனை கொண்டவராக திகழ்ந்த இவர், மதிப்புகளை உருவாக்குவதில், மனிதர்களின் கண்ணியத்தை காப்பாற்றுவதிலும் உறுதி பூண்டிருந்தார். அவர் செய்த தியாகங்களை நம் நாடு எப்போதும் நன்றியுடன் நினைவுகூரும்.இளம் ராஜாஜியின் போட்டோ, அவரது அமைச்சர் நியமன அறிவிப்பு, 1920ல் தொண்டர்களுடன் எடுத்த புகைப்படம் மற்றும் காந்தி சிறையில் இருந்த போது, ராஜாஜியால் எழுதப்பட்ட கட்டுரை போன்ற மதிப்புமிக்க பொக்கிஷங்களை பகிர்ந்துள்ளேன், இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

Ram
டிச 10, 2025 14:05

தமிழ்நாட்டுக்கு உண்மையான விடியலை தந்தவர்


ஆரூர் ரங்
டிச 10, 2025 13:43

இடதுசாரி அந்நியக் கைக்கூலிகளுக்கு சிம்மசொப்பனமாகத் திகழ்ந்தவர்.


எஸ் எஸ்
டிச 10, 2025 13:14

நேர்மையானவர். சுதந்திரம் அடைந்த 1947 ஆகஸ்ட் 14 நள்ளிரவு அதிகாரம் மாறும் போது டெல்லியில் சம்பந்தர் தமிழ் தேவாரம் ஒலிக்க செய்தவர். நீதி கட்சி தலைவர்கள் சாதி அடையாளத்துடன் இருந்த காலத்திலேயே தன் மகளை காந்தி மகனுக்கு கலப்பு திருமணம் செய்து தந்தவர். பட்டியல் சமூக மக்கள் ஆலய பிரவேசம் செய்தபோது ஆதரித்தவர். முதல்வராக இருக்கும் போது சிங்காரவேலர் என்ற பட்டியல் சமூக இளைஞர் எடை குறைவு என்று டி எஸ் பி வேலைக்கு நிராகரிக்கப் பட்ட போது அந்த இளைஞரின் ஏழ்மை நிலைதான் காரணம் என்று கண்டுபிடித்து ஊட்ட சத்து மிக்க உணவு வழங்கி எடை அதிகரித்து ஆறு மாதங்களில் மீண்டும் தேர்வு வைத்து தேர்ந்து எடுக்கப்பட்டார். டி எஸ் பி யாக பதவி உயர்வு பெற்று பின்னாளில் ஐ ஜி ஆனார். தன் வாரிசுகளை முன்னிறுத்தும் இன்றைய அரசியல்வாதிகள் இவர் பற்றி ஒன்று தெரிந்து கொள்ள வேண்டும். ஒரு பிரபல ஆங்கில பத்திரிகையில் தன் மகன் வேலைக்கு விண்ணப்பித்த போது என் மகன் என்பதற்காக பரிசீலிக்க வேண்டாம் அவனுக்கு தகுதி இருந்தால் கொடுங்கள் என்று கடிதம் எழுதியவர். இவரைத்தான் திராவிட கட்சிகள் இன்னும் வசை பாடுகின்றன. இத்தனைக்கும் 1967 இல் திமுக ஆட்சிக்கு வர பாடுபட்டவர். ஏறி வந்த ஏணியை ஜெயித்தவுடன் எட்டி உதைத்தார் அண்ணாதுரை.


M Ramachandran
டிச 10, 2025 13:08

நீங்கள் போற்றுகிறீர்கள். இங்கு பெர்மனன் என்று காரணம் காட்டி திருட்டு டிராவிடர்கள் யூதா சீன படுத்து கிறார்களே. இஙகு மக்களும் அவர்கள் பக்கம் தானெ போகிறார்கள்.


Sudha
டிச 10, 2025 12:15

காமராஜரை எதிர்த்து திமுக வை வளர விட்டவர் என்பது தமிழகத்தின் துயர சரித்திரம்


K V Ramadoss
டிச 10, 2025 13:29

அது உண்மையில் நேருவின் கலாசாரத்தை எதிர்த்து என்று கொள்ளவேண்டும். காமராஜர் நேருவின் அதீத பக்தர் ..


Rathna
டிச 10, 2025 11:39

அவரது சாதியால் இந்த அறிஞர் பின்னுக்கு தள்ளப்பட்டார். பாரதியாரை போல.


Sundar R
டிச 10, 2025 11:10

மெத்தப் படித்த ஒருவர், தன் கல்வியறிவோடு, கூடவே அவர் வளர்த்துக் கொண்ட நற்குணங்கள் தான் அந்த மனிதரை ஜொலிக்க வைக்கும். நற்குணங்களைக் கொண்ட மாமனிதர்கள் எந்த சூழ்நிலையிலும் தவறான மனிதர்களோடு சகவாசம் வைக்க மாட்டார்கள்.


Modisha
டிச 10, 2025 10:44

ஐயையோ , ராஜாஜியை புகழ்ந்தால் தமிழகத்தில் வோட்டு கிடைக்காது என்று பிஜேபிக்காரன் யாரும் இவருக்கு சொல்லலையா. நாங்க ஜாதியை ஒழிச்சிட்டதா சொல்வோம் , ஆனா குறிப்பிட்ட ஜாதி மீது விஷம் கக்குவோம் .


ஆரூர் ரங்
டிச 10, 2025 10:37

பாரதமாதா பெற்ற மிகச்சிறந்த ராஜதந்திரி. முதன்முதலில் மதுவிலக்கை அமல்படுத்திய பெருமைக்குரியவர். பட்டியலின மேம்பாட்டுக்காக நாமக்கல் மாவட்டத்தில் காந்தி ஆஸ்ரமம் அமைத்தவர். பொருளாதார தாராளமயமாக்கல், தனியாருக்கு ஊக்குவிப்புக்கும் முதன்முதல் குரல் கொடுத்தது அவர்தான். அதைத்தான் பிற்காலத்தில் மன்மோகன் நடைமுறைப்படுத்தினார்.


Balasubramanian
டிச 10, 2025 10:35

மொழி வாரியாக பிரித்து இன்றும் சாதி வாரியாக பிரிவினையை கோருவது காங்கிரஸ்! அன்று மதவாரியாக நாட்டை பிளந்து விட்டு இன்று நல்லிணக்கம் குறித்து பேசி மக்களை ஏமாற்றி வருகின்றனர்


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை