உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / " இது சாதாரண தேர்தல் அல்ல ., ஒவ்வொரு ஓட்டும் நாட்டின் முன்னேற்றத்திற்கானது" - பிரதமர் மோடி கடிதம்

" இது சாதாரண தேர்தல் அல்ல ., ஒவ்வொரு ஓட்டும் நாட்டின் முன்னேற்றத்திற்கானது" - பிரதமர் மோடி கடிதம்

புதுடில்லி: ஒவ்வொரு ஓட்டும் நாட்டின் முன்னேற்றத்திற்கானது என்றும், இதனை கருத்தில் கொண்டு பணியாற்ற வேண்டும் என பிரதமர் மோடி பா.ஜ., தலைமையிலான தே.ஜ., கூட்டணி வேட்பாளர்களுக்கு கடிதம் அனுப்பி உள்ளார். நாளை (ஏப்., 19) தமிழகம் உள்பட 21 மாநிலங்களில் 102 தொகுதிகளுக்கு முதல்கட்ட லோக்சபா தேர்தல் ஓட்டுப்பதிவு துவங்குகிறது. நாடு முழுவதும் பல கட்ட தேர்தல் முடிந்து வரும் ஜூன் 4 ம் தேதி ஓட்டுக்கள் எண்ணப்படுகின்றன.இந்நிலையில் பிரதமர் மோடி தே.ஜ., கூட்டணி அனைத்து வேட்பாளர்களுக்கும் அனுப்பி உள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: இது ஒரு சாதாரண தேர்தல் அல்ல என்பதை இந்த கடிதம் மூலம் தெரிவிக்க விரும்புகிறேன். காங்கிரஸ் ஆட்சியின் கடந்த 50 ஆண்டு கால ஆட்சியில் நாட்டு மக்கள் பல தரப்பினரும் பட்ட கஷ்டங்கள் ஏராளம். கடந்த 10 ஆண்டில் பல்வேறு சாதனைகளை செய்துள்ளோம். சமூகத்தில் ஒவ்வொரு பிரிவினரும் பலன் பெற்றுள்ளனர். ஆனாலும் இன்னும் அதிகம் செய்ய வேண்டியுள்ளது. அனைவருக்கும் சிறந்த வாழ்க்கையை உருவாக்கும் எங்கள் பணியில் இந்த தேர்தல் திடமாக இருக்கும்.

2047 க்குள் வளர்ந்த தேசமாக

பா.ஜ.க., மற்றும் நமது கூட்டணி பெறும் ஒவ்வாரு ஒட்டும் நிலையான அரசை அமைப்பதற்கும், 2047 ல் இந்தியா வளர்ந்த நாடாக அமைக்க நாம் செல்லும் பயணத்திற்கு நல்ல ஊக்கத்தை தரும். இந்த முக்கியமான தருணத்தில் நான் கேட்டு கொள்வது என்னவென்றால், தேர்தல் முடியும் கடைசி தருணம் வரை நாம் ஊக்கமாக உழைக்க வேண்டும். அதே நேரத்தில் உங்களின் மற்றும் உங்களை சுற்றியுள்ள நபர்களின் உடல் நலத்தையும் பேணி காத்திட வேண்டும். கோடை காலம் என்பதால் பெரும் சிரமங்கள் இருக்கும். இந்த தேர்தல் நமது தேசத்தின் எதிர்காலத்திற்கு மிகவும் முக்கியமானது. எனவே, வெப்பம் தொடங்கும் முன், அதிகாலையில் வாக்களிக்குமாறு வாக்காளர்களிடம் வேண்டுகோள் விடுக்கிறேன். பாஜகவின் வேட்பாளராக, எனது காலத்தின் ஒவ்வொரு தருணமும் எனது சக குடிமக்களின் நலனுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது . இது சாதாரண தேர்தல் அல்ல நாட்டின் முன்னேற்றத்திற்கான தேர்தல். பிரகாசமான எதிர்காலத்துடன் இணைக்க இந்தத் தேர்தல் ஒரு வாய்ப்பாகும். இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

Bahurudeen Ali Ahamed
ஏப் 18, 2024 20:10

மற்றும் ஆம் வருடங்களில் கூறிய வார்த்தைகளைதான் இப்போதும் கூறுகிறீர்கள், கடந்த பத்து வருடங்களில் என்ன செய்தீர்கள்பொதுத்துறை நிறுவனங்களை விற்று அழித்தது, கார்பரேட்களின் காவலனாகியது, பணவீக்கத்தை அதிகரித்தது, கார்ப்பரேட் முதலாளிகளின் கடன்களை தள்ளுபடி செய்தது தவிர என்று கூற உங்களால் முடியவில்லை எதற்கெடுத்தாலும் அந்த காங்கிரஸ் காரர்கள் என்று ஆரம்பிக்க வேண்டியது


venugopal s
ஏப் 18, 2024 17:41

பாஜகவுக்கு எதிரான ஒவ்வொரு ஓட்டும் நாட்டைக் காப்பாற்றும் ஓட்டு!


Sivak
ஏப் 18, 2024 11:58

மோடிக்காக, நாட்டு நலனுக்காக தாமரைக்கு தான் எங்கள் ஓட்டு


Ramesh Sargam
ஏப் 18, 2024 11:17

இந்திய நாடு முன்னேற பிரதமர் மோடி பாடுபடுகிறார் அனால், தேச துரோக எதிர்கட்சியினரோ அவர்கள் முன்னேற மிகவும் பாடுபடுகிறார்கள் யார் முன்னேற வேண்டும் என்று மக்கள் சிந்தித்து வாக்களிக்கவேண்டும்


S Nagarajan
ஏப் 18, 2024 10:33

தங்களின் உயர்ந்த, நல்ல தொலை நோக்கு சிந்தனையுள்ள பிரதமரை தேர்வு செய்து நாடு முழுவதுமாக தமிழ்நாடு உட்பட நலமும் வளமும் பெற நாடு என்பது பாரத மண்ணில் உள்ள உயிர்கள் உட்பட அனைத்தும் தங்கள் அணிக்கே வாக்களித்து தங்களின் திட்டங்கள் அனைத்தும் வெற்றி பெற செய்ய வேண்டும்


Sampath Kumar
ஏப் 18, 2024 10:25

தமிழ் நாட்டின் பாரம்பரிய சேலை தொழிலை நசுக்குவது புரிந்து கொண்டு வாக்கு செலுத்துங்கள் தமிழ் நாட்டை காப்பாற்றுங்கள்


ஆரூர் ரங்
ஏப் 18, 2024 10:57

விலையில்லா கைத்தறி சேலை பார்டரில் பாதியளவு பாலியஸ்டர் கலந்து ஊழல் செய்தது மாநில அரசு. ஆனால் காப்பாற்ற மட்டும் மோடி வரணுமா?


sahayadhas
ஏப் 18, 2024 10:11

உண்மைதான் உங்களை போன்றவர்கள், சுடாலின் உட்பட சுகமாக வாழ எங்கள் ஒட்டு முக்கியம்


Ramanujadasan
ஏப் 18, 2024 09:55

தமிழர்களே, நம்மை ஏமாளி என நினைத்து நம் காதில் பூசுற்றுவோரை, அந்த பூக்களில் ஒரு "பூவை" கொண்டே ஒழித்து கட்டுவோம்


Ramanujadasan
ஏப் 18, 2024 09:52

உண்மை தான் நீங்கள் சொன்ன கருத்தை சிரமேற் கொண்டு தான் எங்கள் குடும்பம் நல்ல காலையிலேயே வாக்களிக்க போகிறோம் நாட்டின் முன்னேற்றத்திற்கும், வளத்திற்கும், கொள்ளை கூட்ட ஒழிப்புக்கும்


மேலும் செய்திகள்











புதிய வீடியோ