உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பொன்முடி வழக்கு: இன்று விசாரணை

பொன்முடி வழக்கு: இன்று விசாரணை

புதுடில்லி: பொன்முடியை அமைச்சராக நியமிக்க கவர்னர் மறுத்தது தொடர்பாக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு இன்று (மார்ச் 21) விசாரணை எடுத்துக் கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வருமானத்துக்கு அதிகமாக சொத்து சோ்த்ததாக தொடரப்பட்ட வழக்கில் பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சிக்கு உயா்நீதிமன்றம் மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது. இதையடுத்து எம்.எல்.ஏ., பதவியில் இருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்டு அமைச்சர் பதவியையும் பொன்முடி இழந்தார். இவரது தண்டனையை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்தது.இதனைத் தொடர்ந்து, பொன்முடிக்கு மீண்டும் எம்.எல்.ஏ. பதவி வழங்கி தமிழக சட்டப்பேரவை செயலகம் உத்தரவிட்டதை தொடர்ந்து, அவரை மீண்டும் அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து வைக்கக் கோரி முதல்வர் ஸ்டாலின், கவர்னருக்கு கடிதம் அனுப்பி இருந்தார்.பதவி பிரமாணம்செய்து வைக்க கவர்னர் ரவி மறுத்தார். இதனை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு இன்று தலைமை நீதிபதி சந்திரசூட் முன் விசாரணைக்கு வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 22 )

N.Purushothaman
மார் 21, 2024 06:52

இதை எல்லாம் தலைமை நீதிபதியே அவசரமாக விசாரிக்க என்ன தேவை இருக்கு ?


Narayanan
மார் 21, 2024 14:25

panam paathaalam varai paaikirathu


Kasimani Baskaran
மார் 21, 2024 06:02

நீதிமன்றம் பாராளுமன்றத்தையே நீர்த்துப்போக வைக்க முயல்வது மகா கேவலம். நல்ல வேளையாக நீதிமன்றங்களுக்கு சட்டமியற்றும் உரிமை இல்லை. அப்படி இருந்திருந்தால் இந்தியாவின் கதி அதோகதியாக ஆகியிருக்கும்.


Mani . V
மார் 21, 2024 05:12

பேரம் ஸ்டார்ட்.


நரேந்திர பாரதி
மார் 21, 2024 03:39

இவ்வழக்கின் தீர்ப்பு, உச்சா நீதிமன்றத்தின் தராதரத்தை நிச்சயம் வெளிப்படுத்தும்


DARMHAR/ D.M.Reddy
மார் 21, 2024 03:22

விசாரணை முடிவக்கு வருவதற்கு முன்னதாகவே பொன்முடியின் கருப்பு சாயம் பூசப்பட்ட முடி வெளுத்து நரை முடியாக மாறிவிடுமே


Palanisamy Sekar
மார் 21, 2024 02:29

இதுக்கு காங்கிரஸ் தலைமை அலுவலகத்திலேயே விசாரணையை நடத்த சொல்லியிருக்கலாம். ரெண்டு தீர்ப்பும் ஒரே மாதிரிதானே இருக்கப்போகுது..


ranjani
மார் 21, 2024 01:30

வயது மூப்பை கணக்கிட்டு அவரது மூன்று வருட தண்டனையை ஆறு வருடமாக்குதல் நல்லது. அவருக்கு சிறையில் மருத்துவரின் ஆலோசனைகப்படி கழியை 'ஓசி'யாக உணவு கொடுக்கவும்


vadivelu
மார் 21, 2024 06:45

வயது மூப்பை பார்த்துதான் தண்டனை குறைத்தது , அதே காரணத்திற்குத்தான் இப்போது மந்திரியாக பணியாற்ற முடியாது என்று சொல்வார்களோ.


Kalyan Singapore
மார் 21, 2024 00:13

தங்க முடி வழக்கில் உயர்நீதி மன்ற விசாரணை மற்றும் தண்டனை ஜெயலலிதா அம்மையார் காலத்தில் தொடுத்த மேல்முறையீட்டில் நடந்தவை. தீர்ப்பு வழங்கிய நீதிபதி பட்டைஅணிந்தவருமல்ல


Sri
மார் 21, 2024 00:06

தத்கால் வக்கீல்கள் மனு சிங்வி கபில்சிபல் இருக்கும் போது எந்த. கேஸ்க்கும் ஊழல் சம்பாத்தியம் கோடி கணக்கில் கொடுத்தால் சித்ரகுப்தன் தீர்ப்பே குப்பையில் போகும்


kskmet
மார் 20, 2024 23:53

இது திமுகவின் ராஜதந்திரம். பொன்முடியை திருப்தி செய்த மாதிரியும் ஆச்சு அவரை கழட்டி விட்ட மாதிரியும் ஆச்சு. சாதாரண நாமே இவ்வளவு யோசிக்கும் போது திமுக யோசித்திருக்காதா எந்த மாதிரியான தீர்ப்பு வரும் என்று. அதற்காகத்தானோ என்னவோ அவர் மகனுக்கும் சீட் வழங்கவில்லை போலும்.


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை