உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சமூக நீதி பெயரில் ஏமாற்றிய முந்தைய அரசுகள்: பிரதமர் மோடி விமர்சனம்

சமூக நீதி பெயரில் ஏமாற்றிய முந்தைய அரசுகள்: பிரதமர் மோடி விமர்சனம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

அம்ரோஹா: ''நமது நாட்டில் முந்தைய அரசுகள் சமூக நீதி என்ற பெயரில் எஸ்.சி., எஸ்.டி., மற்றும் ஓபிசி.,யை ஏமாற்றி வந்தன. ஆனால் அம்பேத்கர் கண்ட சமூக நீதி கனவை நான் நிறைவேற்ற வருகிறேன்'' என பிரதமர் மோடி பேசினார்.உத்தர பிரதேசம் மாநிலம் அம்ரோஹா பகுதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது: இன்று சில தொகுதிகளில் முதல்கட்ட லோக்சபா தேர்தல் நடக்கிறது. இது ஜனநாயக திருவிழாவின் மிகப்பெரிய நாள். அனைத்து வாக்காளர்களும் தங்களின் ஓட்டுகளை பதிவு செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் அம்ரோஹாவை சேர்ந்த முகமது ஷமி செய்த அற்புதமான சாதனையை உலகமே பார்த்தது. விளையாட்டில் சிறப்பாக செயல்பட்டதற்காக முகமது ஷமிக்கு மத்திய அரசு அர்ஜூனா விருது வழங்கியது. தற்போதைய லோக்சபா தேர்தல், நாட்டின் எதிர்காலத்திற்கான தேர்தல். கிராமங்கள் மற்றும் ஏழைகளுக்கான தொலைநோக்கு மற்றும் இலக்குகளுடன் பா.ஜ., முன்னேறி வருகிறது. ஆனால் இண்டியா கூட்டணி கட்சிகள் மக்களின் முழு ஆற்றலையும், கிராமங்களையும் பின்னோக்கி நகர்த்துவதில் குறியாக உள்ளன. நமது நாட்டில் முந்தைய அரசுகள் சமூக நீதி என்ற பெயரில் எஸ்.சி., எஸ்.டி., மற்றும் ஓபிசி.,யை ஏமாற்றி வந்தன. ஆனால் அம்பேத்கர் கண்ட சமூக நீதி கனவை நான் நிறைவேற்றி வருகிறேன். இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

முருகன்
ஏப் 19, 2024 14:36

பத்து வருடங்களில் செய்த விஷயங்களை என்று தான் பேசுவிர்கள்


ஆரூர் ரங்
ஏப் 19, 2024 15:45

முந்தைய ஆட்சி இப்போதைய ஆட்சி இரண்டையும் கூறி ஒப்பிட்டுதான் பேச முடியும். அதைத்தான் செய்து கொண்டிருக்கிறார்.


சொல்லின் செல்வன்
ஏப் 19, 2024 14:29

அய்யா நீங்கள்தான் பத்துவருஷமா ஆட்சியில் இருக்கீங்க இன்னும் முந்தைய அரசை பற்றியே பேசாமல், நீங்கள் செய்த சாதனைகளை சொல்லி வோட்டை கேளுங்கய்யா


Kandasamy
ஏப் 19, 2024 14:13

ஜெய் ஸ்ரீராம்


Indian
ஏப் 19, 2024 13:23

எதுவா இருந்தாலும் எங்க வோட்டு தி மு க விற்கு தான்


Pats, Kongunadu, Bharat, Hindustan
ஏப் 19, 2024 15:12

ஆமாம், நாங்க என்ன சொன்னாலும் நாங்க அப்படியேதான் இருப்போம்


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை