உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ‛‛அட போங்கப்பா, நீங்களும் உங்க சபையும்...: கனத்த மனதுடன் வெளியேறிய ராஜ்யசபா அவைத் தலைவர்

‛‛அட போங்கப்பா, நீங்களும் உங்க சபையும்...: கனத்த மனதுடன் வெளியேறிய ராஜ்யசபா அவைத் தலைவர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: எதிர்க்கட்சியினரின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து ராஜ்யசபா அவைத்தலைவர் ஜக்தீப் தங்கர் அவையில் இருந்து வெளியேறினார்.ராஜ்யசபா இன்று ( ஆக.,08) கூடியதும், ஒலிம்பிக் மல்யுத்தத்தில் இருந்து வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்ட விவகாரத்தை எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே எழுப்பினார். இதன் பின்னணியில் யார் உள்ளார்கள் என கேள்வி கேட்டார். அதற்கு, ஜக்தீப் தங்கர் அனுமதி தரவில்லை. அதே நேரத்தில் திரிணமுல் காங்கிரஸ் கட்சியின் டெப்ரிக் ஓ பிரையன் எழுந்து இன்னும் சில பிரச்னைகளை எழுப்பினார். இதற்கும் அனுமதி வழங்கப்படவில்லை.அப்போது டெப்ரிக் ஓ பிரையனை எச்சரித்து ஜக்தீப் தங்கர் கூறுகையில், ‛‛ நீங்கள் அவைத் தலைவரை நோக்கி சத்தம் போடுகிறீர்கள். அவையில் உங்கள் நடவடிக்கை மோசமாக உள்ளது. உங்கள் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவிக்கிறேன். அடுத்த முறை வாசல் கதவை காட்டுகிறேன் '' என்றார். எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வெளிநடப்பு செய்தனர்.எதிர்க்கட்சியினரின் நடவடிக்கைக்கு அதிருப்தி தெரிவித்து ஜக்தீப் தங்கர் ‛‛ சில நேரங்களில் நான் இங்கு அமர முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது. அவையை விட்டு கனத்த மனதுடன் வெளியேறுகிறேன்'' எனக்கூறி ஜக்தீப் தங்கர், அவையில் இருந்து வெளியேறினார்.இதனையடுத்து அவை துணைத்தலைவர் ஹரிவன்ஷ் சிங் ராஜ்யசபாவை நடத்தினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 22 )

Kumar
ஆக 08, 2024 19:13

நல்ல ஜால்ரா அடிக்கும் அவை தலைவர்


J.V. Iyer
ஆக 08, 2024 16:55

மூளை இல்லாத எதிர் கட்சிகள். வேண்டுமென்றே நாட்டு அமைதியை கெடுப்பவர்கள். கையூட்டு வாங்கி சோரம் போனவர்கள். இவர்களை தேர்ந்தெடுத்த மக்களை சொல்லவேண்டும்.


vbs manian
ஆக 08, 2024 16:41

ஒலிம்பிக் விளையாட்டு விடி படி தகுதி நீக்கம். இதற்கும் பார்லிமெண்டுக்கும் என்ன தொடர்பு. மறை கழன்று விட்டது.


வல்லவன்
ஆக 08, 2024 16:13

ரொம்ப நல்லது


அப்பாவி
ஆக 08, 2024 16:12

ராஜினாமா பண்ணியிருக்கலாமே. திரும்ப வரவேண்டாமே... அஸ்க்கு... புஸ்க்கு.


Kumar Kumzi
ஆக 08, 2024 17:25

எண்ணம் வேறு எப்படி இருக்கும்


Balasubramanian
ஆக 08, 2024 15:58

மல்யுத்த வீரர் நூறு கிராம் எடை கூடியது ஒரு பிரச்சினையா? பி.டி. உஷா கூட கோடு தாண்டி ஓடி பதக்கத்தை தவற விட்டார்! இன்று ஒலிம்பிக் குழுவின் தலைவர் அவர் - இதை எல்லாம் Sportive ஆக எடுத்துக் கொள்ள வேண்டும்


Narayanan
ஆக 08, 2024 15:29

கடந்த பாராளுமன்ற தேர்தலுக்கு முன் புதிய தேர்தல் ஆணையர்கள் நியமனம் செய்யாது இருந்து அந்த ஒரு தேர்தலை ஆணையர் தலைமையில் தேர்தல் நடந்திருந்தால் பிஜேபி யின் செல்வாக்கு உயர்ந்திருக்கும் . அந்த புதிய இரண்டு ஆணையர்களும் மனசாட்சியை தூக்கியெறிந்து விட்டு எதிர்கட்சியினரக்கு உதவியாக இருந்து பிஜேபியை இப்படி ஆக்கிவிட்டார்கள் . இல்லை என்றால் பிஜேபி தனக்கு முழு பலத்துடன் ஆட்சியில் இருந்திருக்கும் .நாடும் செழிப்பை நோக்கி நகரலாம் .


Apposthalan samlin
ஆக 08, 2024 16:17

அந்த எண்டு பேரால் தான் பிஜேபி ஆட்சிக்கு வந்தது இல்லை என்றால் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்து இருக்கும்


Parasumanna Sokkaiyer Kannan
ஆக 08, 2024 15:20

We have no strict procedure in any matter. BJP ruling from May, 2014. Modi has given births to all his loyalist with out minding the sufferings of the common man. Mutual funds and other banks giving 9.5% interest for senior citizens but the REPCO Bank owned by central government is giving only 8%. But Modi is very liberal in giving our tax payers money to Afghanistan, Srilanka, Bangladesh and so on in the name of help but he thinks about the indian voters who are responsible for his position and tax payers money is used to the entire administration. There is no political decency in politics and the BJP Government is did nothing for the welfare of the daily bread winners. We are going to hear his lecture on 15-8-2024.


ram
ஆக 08, 2024 15:16

எதிர்கட்சி ஆட்களை இந்த தொடர் முழுவதும் டிஸ்மிஸ் செய்து கேன்டீனுக்கு அனுப்பி விடலாம். பங்களேதேஷில் ஹிந்து மக்கள் இன படுகொலை நடந்து கொண்டு இருக்கிறது அதை பத்தி பேசாமல் நூறு கிராம் எடை கூடி பதக்கம் போனதை பத்தி பேசுகிறார்கள் மனசாட்சி இல்லாதவர்கள். எடை கூடி விட்டால் அதற்கு மோடி என்ன செய்வர். வயது ஆனாலும் மூளை வேலை செய்ய வில்லை இந்த கார்கேயுக்கு மற்றும் திமுக ஆட்களுக்கு.


Sridhar
ஆக 08, 2024 15:00

என்னதான் அருவருக்கத்தக்க முறையில் நடந்துகொண்டாலும், அந்த அரசியல், மக்களுக்கு பிடிக்கும் வரையில், அவர்கள் அதை செய்து கொண்டேதான் இருப்பார்கள். முதலில் தேர்தல் முடிவுகளில் முன்னேற்றம், இப்போது பங்களாதேஷில் புரட்சி மற்றும் ஆட்சிமாற்றம், இவையெல்லாம் அவர்களுக்கு நிச்சயமாக ஒரு புத்துணர்வு கொடுத்திருக்கிறது. நாளைக்கு இவர்களே ஆட்சிக்கு வந்து நாடு குட்டிசுவரானாலும், மக்கள் அதைப்பற்றி பெரிதாக ஒன்றும் கண்டுகொள்ளமாட்டார்கள். தண்ணீர் பிரச்னையா, மின்சாரவெட்டா, ரோடு பள்ளம் குழியா இருக்குதா, மழை பெஞ்சா வெள்ளம் தேங்குதா, ஊரெங்கும் ஒரே கஞ்சா புழக்கம், கொலை கொள்ளைனு வெளிய போகவே பயமான சூழ்நிலை நிலவுதா, அப்பகூட ஜனங்களுக்கு இதெல்லாம் திருட்டு கும்பலோட மோசமான மக்கள் விரோத ஆட்சியினாலன்னு புரியாது. எப்பவும் இப்படிதான்யா இருக்கும்ங்கற போக்கில் கடந்துபோயிடுவாங்க. போதாகுறைக்கு கையில 1000 , 2000 கொடுத்தா கேக்கவா வேணும்? ஒரே புளகாங்கிதம்தான் போங்க. இந்த மாதிரி மக்களுக்கு போயி ஒரு கூட்டம் நல்லாட்சி செஞ்சு அவங்க வாழ்க்கைத்தரத்தை மேன்படுத்தணும்னு நினைக்கிறானுங்களே, அவனுகள நினைச்சாதான் பரிதாபமா இருக்கு.


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை