உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மோடியின் அமைச்சரவையில் இருப்பது பெருமை: சுரேஷ்கோபி விளக்கம்

மோடியின் அமைச்சரவையில் இருப்பது பெருமை: சுரேஷ்கோபி விளக்கம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருவனந்தபுரம்: நேற்று (ஜூன் 9) மத்திய அமைச்சராக பொறுப்பேற்ற நடிகர் சுரேஷ் கோபி, இன்று திரைப்படங்களில் நடிக்க இருப்பதால் தனக்கு அமைச்சர் பதவி வேண்டாம் எனத் தெரிவித்ததாக செய்தி வெளியானது. இதனை மறுத்துள்ள சுரேஷ் கோபி, பிரதமர் மோடியின் அமைச்சரவையில் இடம் பெற்றிருப்பது பெருமை எனவும் தெரிவித்துள்ளார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=ltseen2t&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்துள்ள தேசிய ஜனநாயக கூட்டணி அரசில், அவரை தவிர, 71 பேர் அமைச்சர்களாக நேற்று பதவியேற்றனர். இதில் கேரளாவின் திருச்சூர் தொகுதியில் பா.ஜ., சார்பில் போட்டியிட்டு வென்ற நடிகர் சுரேஷ் கோபியும் அமைச்சராக பொறுப்பேற்றார். ஆனால், 'திரைப்படங்களில் தொடர்ந்து நடிக்க இருப்பதால் எனக்கு மத்திய அமைச்சர் பதவி வேண்டாம். என்னை அமைச்சரவையில் இருந்து விடுவிப்பார்கள் என நம்புகிறேன்' என்று சுரேஷ் கோபி தெரிவித்ததாக செய்தி பரவியது.இந்த செய்திக்கு மறுப்பு தெரிவித்த சுரேஷ்கோபி, அவரது எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டதாவது: மோடி அரசின் அமைச்சரவையில் இருந்து நான் விலகப் போவதாக சில ஊடகங்கள் தவறான செய்திகளை பரப்பி வருகின்றன. இது முற்றிலும் தவறானது. மோடி அரசின் அமைச்சரவையில் இடம்பெற்றிருப்பதும், கேரள மக்களை பிரதிநிதித்துவப்படுத்துவதும் எனக்கு பெருமை. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், கேரளாவின் வளர்ச்சிக்கு பாடுபட உறுதி பூண்டுள்ளேன். இவ்வாறு அவர் விளக்கத்துடன் பதிவிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

S Sivakumar
ஜூன் 10, 2024 18:36

ஊடகங்கள் தவறாக பயன்படுத்துதல் போன்ற கோழைகளை களையெடுக்க வேண்டும். நடவடிக்கை நாட்டுக்கு தேவை.


narana m
ஜூன் 10, 2024 16:42

இது காங்கிரசின் பரப்பிய பொய் எனவும் சில ஊடகஙகள் கூறியுள்ளன


நிக்கோல்தாம்சன்
ஜூன் 10, 2024 16:07

இந்திய காங்கிரஸ் தமிழக பிரிவின் முகநூல் பகுதியிலும் இதனை பார்க்க முடிந்தது ,


மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி