உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சோனியா, பிரியங்கா உடன் சென்று ரேபரேலியில் வேட்புமனு தாக்கல் செய்தார் ராகுல்

சோனியா, பிரியங்கா உடன் சென்று ரேபரேலியில் வேட்புமனு தாக்கல் செய்தார் ராகுல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ரேபரேலி தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சியின் ராகுல் இன்று (மே 3) வேட்புமனு தாக்கல் செய்தார். தாக்கலின்போது சோனியா, பிரியங்கா உள்ளிட்டோரும் உடனிருந்தனர்.உ.பி., மாநிலம் ரேபரேலி தொகுதியில் ராகுலும், அமேதியில் கிஷோரி லால் சர்மாவும் போட்டியிடுவார்கள் என காங்கிரஸ் அறிவித்து உள்ளது. வேட்புமனு தாக்கலுக்கு இன்றே கடைசி நாள் என்பதால், இருவரும் வேட்புமனு தாக்கல் செய்தனர். இதற்காக, சோனியா, ராகுல், பிரியங்கா, ராபர்ட்வாத்ரா ஆகியோர் அமேதி வந்தடைந்தனர். இங்கிருந்து ரேபரேலி சென்று ராகுல் வேட்புமனு தாக்கல் செய்தார். அப்போது மல்லிகார்ஜூன கார்கே, சோனியா, பிரியங்கா ஆகியோர் உடனிருந்தனர்.முன்னதாக விமான நிலையத்தில் சோனியா, ராகுல், பிரியங்காவை ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் அசோக் கெலாட் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் வரவேற்றனர்.

அமேதி தொகுதியிலும் வேட்புமனு தாக்கல்

அமேதி தொகுதி காங்., வேட்பாளர் கிஷோரி லால் சர்மா, இன்று வேட்புமனுத் தாக்கல் செய்தார். இதனைத்தொடர்ந்து பேசிய சர்மா, ''யார் வெற்றிப்பெறுவார்கள், யார் தோல்வியடைவார்கள் என்பது மக்கள் கையில் உள்ளது. கடினமாக உழைப்போம். தங்களுக்காக பாடுபடுபவர்களை மக்கள் தேர்ந்தெடுக்க தேர்தல் ஒரு சம்பிரதாயமாக நடத்தப்படுகிறது. அமேதி மக்கள் என் இதயத்தில் உள்ளனர். நான் 40 வருடங்களாக இங்கு இருக்கிறேன். கட்சி தலைமை எனக்கு அறிவுறுத்தியதை நான் பின்பற்றுகிறேன். மக்கள் எனக்கு ஒரு வாய்ப்பளிக்க வேண்டும்'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 29 )

Godfather_Senior
மே 05, 2024 20:01

குடும்பத்தினருடன் "தனி விமானத்தில்" சென்று மனு தாக்கல் செய்தார் என்று அல்லவோ தலைப்பு இருந்திருக்கவேண்டும்? காங்கிரஸ் கட்சியிடம் பணம் இல்லை என்று சொல்லிக்கொண்டே தனி விமானத்தில் பறக்கிறார்கள் என்றால்


ராஜவேல்,வத்தலக்குண்டு
மே 03, 2024 18:35

போன எலக்ஷன்ல அமேதி தொகுதியில தோத்த மாதிரி இந்த தடவை நம்ம குடும்ப தொகுதியான ரேபரேலியிலும் தோத்துட்டா என்ன செய்யிறது மம்மி? டோன்ட் வொரி மை சன் ஒரு நாலு மாசத்துக்கு இத்தாலிக்கு போய் நம்ம பாட்டி வீட்டுல படுத்துக்கோ..


ManiK
மே 03, 2024 17:55

Dynasty in full action. நேரு மகள இந்திரா பாட்டி, இத்தாலி அம்மா, now confused பையன்


A1Suresh
மே 03, 2024 17:43

இத்தாலியில் ஒரு டவுனில் கவுன்சிலர் பதவிக்கு இடைத்தேர்தல் வருகிறதாம்


Indian
மே 03, 2024 18:17

நீங்க போங்க , அங்க பொய் நில்லுங்க


krishnamurthy
மே 03, 2024 17:33

குடும்பமே சென்று ரே பரேலி தொகுதியை பி ஜே பி கு ஒப்படைத்துள்ளனர் நாட்டுக்கு மிக நல்லது இவன் தோற்கடிக்க பட வேண்டும்


Indian
மே 03, 2024 18:18

உன்னை போன்றவர்கள் தோற்கடிக்க பட வேண்டும்


Bala YH
மே 03, 2024 17:30

காலகாலமா காங்கிரஸ் கைல இருந்த தொகுதில ஜெயிக்க துப்பில்லை , இதுல இந்தியாவ காப்பாத்த போறானுகலாம்


Bala YH
மே 03, 2024 17:28

அமேதில அடி வாங்குனது பத்தலன்னு ரேபரேலில ரெடி ஆகுறாப்ல


J.V. Iyer
மே 03, 2024 17:16

அப்படீன்னா வயநாடு புடுங்கிகிச்சா? அடப்பாவமே ராவுலு


Godfather_Senior
மே 03, 2024 16:59

கட்சி தலைமை, கொள்ளை அடித்து கப்பம் கட்ட நிறையவே உங்களுக்கு வாய்ப்பளித்துள்ளது ஷர்மாஜி ஆனால் தோற்ற பின்பு எதுவும் கப்பம் கட்ட வேண்டாம்


Godfather_Senior
மே 03, 2024 16:56

இரண்டு தொகுதிகளிலும் தோல்வியுற ராகுல் பாபாவிற்கு நல்வாழ்த்துக்கள்


மேலும் செய்திகள்





புதிய வீடியோ