உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நாகா பிரச்னைக்கு தீர்வு காணவில்லை; பிரதமர் மீது ராகுல் குற்றச்சாட்டு

நாகா பிரச்னைக்கு தீர்வு காணவில்லை; பிரதமர் மீது ராகுல் குற்றச்சாட்டு

கோஹிமா, ''நாகா அரசியல் பிரச்னைக்கு தீர்வு காண, கடந்த ஒன்பது ஆண்டுகளில், பிரதமர் நரேந்திர மோடி எதுவுமே செய்யவில்லை,'' என, காங்., - எம்.பி., ராகுல் குற்றஞ்சாட்டினார்.வட கிழக்கு மாநிலமான மணிப்பூரில், 'பாரத் ஜோடோ நியாய யாத்திரை'யை கடந்த 14ம் தேதி, காங்., - எம்.பி., ராகுல் துவங்கினார். இந்த யாத்திரை, நாகாலாந்தின் மொகோக்சுங் என்ற நகருக்கு நேற்றுவந்தடைந்தது.அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொதுக்கூட்டத்தில், ராகுல் பேசியதாவது:நாகா அமைதி ஒப்பந்தம் விவகாரத்தில், அம்மாநில மக்களின் நம்பிக்கை மற்றும் கருத்துக்கள் இல்லாமல் தீர்வு காண முடியாது. இந்த விவகாரத்தில், தீர்வு இல்லை என்றால் இல்லை என, பிரதமர் மோடி வெளிப்படையாக கூற வேண்டும். அதை விடுத்து, நாகாமக்களை பொய் சொல்லி ஏமாற்றக் கூடாது. கடந்த 2015ல், இது தொடர்பாக ஒப்பந்தம் கையெழுத்தாகியும், கடந்த ஒன்பது ஆண்டுகளாக, எந்த நடவடிக்கையும் எடுக்காமல் பிரதமர் மோடி இருந்துள்ளார். இந்த விவகாரத்திற்கு தீர்வு காண்பதில், காங்., உறுதியாக உள்ளது.நாகாலாந்தின் பல்வேறு இடங்களில், சாலைவசதிகள் முறையாக இல்லை என்பதை வரும் வழிகளில் கண்டேன். இந்த வசதிகளை வைத்து, மற்ற மாநில இளைஞர்களிடம், நாகா இளைஞர்கள் எவ்வாறு போட்டியிட முடியும்? நம் நாட்டில் ஒரு கருத்தியல் போர் நடக்கிறது. நாட்டில் உள்ள மதங்கள் மற்றும் அவற்றின் கலாசாரம், பாரம்பரியத்தை பா.ஜ., - ஆர்.எஸ்.எஸ்., சிதைத்து வருகின்றன. மணிப்பூரில் இனக்கலவரம் நடந்து பல மாதங்களாகியும், பிரதமர் மோடி அங்கு செல்லவில்லை. ஓர் இந்தியனாக இதை நினைத்து வெட்கப்படுகிறேன்.இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 22 )

Anand
ஜன 18, 2024 11:13

இத்தாலிய நாட்டு கூறுகெட்டவனெல்லாம் இந்தியாவில் அரியணை என்ற விரும்புகிறான்....கொடுமை


Velan Iyengaar
ஜன 18, 2024 11:06

இந்த ஜென்மங்களுக்கு குட்டய குழப்புவதே வேலை வேறு எதுவும் தெரியாத உருப்படி


RAMESH
ஜன 18, 2024 11:02

துண்டு சீட்டும் பப்புவுக்கும் உள்ள ஒற்றுமை , ரெண்டு பேருமே ஆளுமை திறமை ஒரு துளி கூட இல்லாதவர்கள் .


RAMESH
ஜன 18, 2024 10:59

பாரதத்திலிருந்து மொகலாய மற்றும் பிரிட்டிஷ் ஆட்சிகள் தூக்கி எறியப்பட்டது போல் காங்கிரஸ் ஆட்சி நமது பாரதத்தை விட்டே விரட்டி அடிக்கப்பட்ட வேண்டும் .


RAMESH
ஜன 18, 2024 10:56

காங்கிரஸ் கட்சி வேரோடு அழியும் நாள் புதிய பாரதத்தின் தொடக்கம்


RAMESH
ஜன 18, 2024 10:55

நேற்று மம்மியோட வீட்டுல சமையல் . திடீரென நாணோதயம் வந்து மணிப்பூர்ல நுழைஞ்சுட்டாரு . இந்த ஆளை சொல்லி குத்தமில்லை . வளர்ப்பு அப்படி .


R. Vidya Sagar
ஜன 18, 2024 10:36

ஏதோ போனதுக்கு அங்க உள்ள மக்களை உசுப்பி விட்டு வந்துட வேண்டும்.


duruvasar
ஜன 18, 2024 10:12

இவரு இந்த நானும் ரவுடிதான் வேடத்தை விட்டு விட்டு வேறு வேசம் கட்டி பார்க்கலாம்.


GoK
ஜன 18, 2024 10:00

இவனோட கொள்ளுப்பாட்டன், பாட்டி, அப்பன், ஆத்தா நிழல் பிரதமராக ...மொத்தம் ஒரு அரை நூற்றாண்டு காலம் ...என்னத்த பண்ணிக் கிழிச்சாங்க ,,,இப்போ இவன் வந்துட்டான் கேக்க..இவன் பேச்ச கேக்கறவனெல்லாம் என்ன மாங்கா மடயங்களா


Velan Iyengaar
ஜன 18, 2024 08:41

இந்த விஷயத்துல சொதப்புனது தான் இன்னும் விஷேஷம்...


Duruvesan
ஜன 18, 2024 09:23

கரெக்ட் ரவுல் சொதப்பினது தானே


Velan Iyengaar
ஜன 18, 2024 11:04

அவரு தான்.. அவரே தான்... அடித்து விரட்டப்பட்டார்... ராவோடு ராவாக ஓடி வந்த கேசு


மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை