உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நிலச்சரிவால் பாதித்த கேரளாவில் ராகுல், பிரியங்கா

நிலச்சரிவால் பாதித்த கேரளாவில் ராகுல், பிரியங்கா

வயநாடு: மழை நிலச்சரிவால் பாதித்த கேரளாவுக்கு எதிர்க்கட்சி தலைவர் ராகுல், அவரது சகோதரி பிரியங்கா ஆகியோர் இன்று (ஆக-1) வந்தனர். காலை 9:30 மணிக்கு கண்ணூர் வந்த அவர்கள், சாலை மார்க்கமாக வயநாடு சென்றனர். 290க்கும் மேற்பட்டோர் பலியான மேப்பாடி, முண்டகை, சூரல்மலை பகுதியில் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்டனர்.சூரமலையில், நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளோரை பார்த்து ஆறுதல் தெரிவித்து, குறைகளை கேட்டறிந்தனர். மீட்பு மற்றும் நிவாரண பணிகள் குறித்து கேட்டறிந்தனர்.அவர்களை, காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் அழைத்துச் சென்றார். இருவரும் ரெயின் கோட் அணிந்து இருந்தனர். தற்காலிகமாக அமைக்கப்பட்ட பாலங்கள் மற்றும் சேறு சகதிகளில் சிக்காமல் பாதுகாப்புடன் அதிகாரிகள் ராகுல் மற்றும் பிரியங்காவை அழைத்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 20 )

sankaranarayanan
ஆக 01, 2024 20:42

இந்த சமயத்தில் இவர்களெல்லாம் இங்கு வருவது வெறும் ஆடம்பரம்தான் மக்களுக்கு உதவ வேண்டிய அரசுப்பணியாளர்கள் பாது காப்பாளர்கள் அனைவரும் இவர்களுக்கு பாதுகாப்பு கொடுத்து நேரத்தை பாழாக்குகின்றனர் இதற்குப்பதில் இருந்த இடத்திலிருந்தே வயநாட்டிரு பெரும்பணத்தொகை அளித்தாலே போதும் அதைத்தான் மக்களும் இவர்களிடம் எதிர்பார்க்கின்றனர்


Moosa Shahib
ஆக 01, 2024 19:46

ராகுல் அங்குள்ள எம்பி பிரியங்கா திருப்பி நிக்கிற போற வேட்பாளர் இவங்க அங்க போய் பாக்காம வேற யாரு தான் போய் பார்க்கிறது


தமிழ்வேள்
ஆக 01, 2024 21:08

ராஜினாமா செய்து விட்டு ஓடிப்போனவர் எப்படி எம்பி ஆக இருக்கமுடியும்? யோசித்து உணர்ச்சி வசப்படாமல் எழுதும்..


RAMAKRISHNAN NATESAN
ஆக 01, 2024 18:34

நான் கூட வயநாடு போனேன் .... ஆனா மோடி மணிப்பூர் போகலை என்று சொல்லிக்கொள்ள உதவும் இந்த விசிட் ....


Duruvesan
ஆக 01, 2024 17:45

இவனும் பிரியங்காவும் அவங்க சொத்துல 1% குடுத்தா போதும். நிவாரண நிதி வேற எதுவும் தேவையே இல்லை


rsudarsan lic
ஆக 01, 2024 17:02

Perfect poster. Should give 3 lakhs margin


Shekar
ஆக 01, 2024 16:47

வயநாடு தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் அறிமுக நிகழ்ச்சி.


Nandakumar Naidu.
ஆக 01, 2024 16:40

இந்தியாவின் போலியான நாடக குடும்பம். இவர்களுக்கு முன்னால் துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு வீரர்கள், சிரிப்புதான் வருகிறது. இவர்களுக்கு என்ன ஆபத்து அங்கு வரப்போகிறது? அங்கு எல்லாம் இவர்களின் உறவினர்கள் அயிற்றே. இவர்கள் அங்கு போய் விரோத அரசியல் மற்றும் தேச, சமூக பேச்சை பேசாமல் வரமாட்டார்கள்.


Anand
ஆக 01, 2024 16:32

நிலச்சரிவு ஏற்படும் சமயம் எங்கு சென்றார்களாம்? நாட்டை பற்றி துளிகூட கவலை இல்லை.


RAAJ68
ஆக 01, 2024 16:22

எங்க வந்தேள் எதுக்கு வந்தேள்... இடைத்தேர்தலில் அனுதாபத்தை சம்பாதிக்கும் நோக்கத்தில ஆ.... இவ்வளவு பெரிய சோகம் நடந்துள்ளது எனவே தற்போதைக்கு இந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தக் கூடாது.


Arunachalam Saptharishi
ஆக 01, 2024 16:18

பாவம் வயநாடு


மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ