உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நெஜமாவே வரப்போகுது அமலாக்கத்துறை; டீ, பிஸ்கட் செலவு கிண்டலுக்கு விடை தெரியும்!

நெஜமாவே வரப்போகுது அமலாக்கத்துறை; டீ, பிஸ்கட் செலவு கிண்டலுக்கு விடை தெரியும்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: நேஷனல் ஹெரால்டு வழக்கில், அமலாக்கத்துறை விசாரணைக்கு காங்கிரஸ் எம்.பியும், எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் அழைக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.புதுடில்லியை தலைமையிடமாக வைத்து செயல்படும், 'அசோசியேட்டட் ஜர்னல் லிமிடெட்' நிறுவனம், நேஷனல் ஹெரால்டு உள்ளிட்ட பத்திரிகைகளை நடத்தி வந்தது. கடன் நெருக்கடியில் சிக்கிய இந்த நிறுவனத்துக்கு, காங்கிரஸ் கட்சி சார்பில், 90 கோடி ரூபாய் கடன் கொடுக்கப்பட்டது. இந்தக் கடனில் இருந்து விடுபடுவதற்காக, நேஷனல் ஹெரால்டு பத்திரிகையை, 'யங் இந்தியன்' என்ற நிறுவனம் விலைக்கு வாங்கியது.

ரூ.751.9 கோடி

இந்நிறுவனத்தின் இயக்குனர்களாக காங்கிரஸ் தற்காலிக தலைவர் சோனியா, அவருடைய மகனும், எம்.பி.,யுமான ராகுல் உள்ளனர். இந்த பரிமாற்றம், பல ஆயிரம் கோடி ரூபாய் சொத்துக்களை பறிக்கும் வகையில் நடந்ததாக, பா.ஜ., மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி, 2013ல் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில், ரூ.751.9 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத்துறை பறிமுதல் செய்துள்ளது.

குற்றப்பத்திரிகை

இதில் நடந்துள்ள பண மோசடிகள் தொடர்பாக, அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. ஏற்கனவே, காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கே, பவன் பன்சால் ஆகியோரிடம் அமலாக்கத் துறை விசாரணை நடத்தியது. கடந்த 2023ம் ஆண்டு ராகுலிடம் 10 மணி நேரத்திற்கு மேலாக விசாரணை நடத்தியது. தற்போது இந்த வழக்கில், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய அமலாக்கத்துறை அதிகாரிகள் களத்தில் இறங்கியுள்ளனர்.

அமலாக்கத்துறை விசாரணை

இந்நிலையில்,நேஷனல் ஹெரால்டு வழக்கில், அமலாக்கத்துறை விசாரணைக்கு காங்கிரஸ் எம்.பியும், எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் அழைக்கப்படலாம். வழக்கு தொடர்புடையவர்கள் அனைவரும் விரைவில் விசாரணைக்கு அழைக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

டீ, பிஸ்கட்

கடந்த வாரத்தில், என்னை கைது செய்ய அமலாக்கத்துறை சதி திட்டம் தீட்டி வருகிறது என ராகுல் குற்றம் சாட்டியிருந்தார். அமலாக்கத்துறை வருகைக்காக காத்திருக்கிறேன். அவர்களது டீ, பிஸ்கட் செலவு என்னுடையது என்றும் ராகுல் கூறி இருந்தார். அந்த கிண்டல், இணையத்தில் பரபரப்பாக பேசப்பட்டது. இந்த சூழ்நிலையில் உண்மையாகவே நேஷனல் ஹெரால்டு வழக்கில் விசாரிப்பதற்கு அமலாக்கத்துறை ராகுல் வீட்டுக்கு செல்லப்போகிறது அல்லது அழைக்கப்போகிறது என்ற தகவல் வெளியாகியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 49 )

M Ramachandran
ஆக 28, 2024 18:58

ராகுல் politically அரசியலில் அனுபவமற்றவர். அது INDI கூட்டணியின் தலைவிதி


M Ramachandran
ஆக 18, 2024 20:12

இது மன்மோஹன் சிங்க் காலமல்லா தைய்யா தக்கா மாறன் டி பிஸ்கெட் கொடுத்த மாதிரி முதுகெலும்புள்ளவர்கள் ரொம்ப பேச்சி வாய் கொழுப்பால் மாட்ட போகும் ஆனால். அதே தைய்யா தக்கா மாறன்இப்போ பேசட்டும் வாயிலென + போட்டு ஒட்டி வச்சிருகிறா ன் ர்


Sivagiri
ஆக 17, 2024 16:58

சாமி போட்ட குடி-உரிமை வழக்கு வேற வர போகுதாம் ,


INDIAN
ஆக 14, 2024 10:28

ஆக ED , அரசியல் எதிரிகளை எதிர்கொள்ள திரானி இல்லாத கோழைகளான பிஜேபி அரசு பழிவாங்கவே பயன்படுத்தி வருகிறது. முதுகில் குத்திதான் பழக்கம்.. நேரடியாக எதிரகொள்ள முடியாத வெட்கம் இல்லாதவர்கள். உலகம் ஒரு வட்டம்.


I am a Sanghi + Kafir…but not a Family slave
ஆக 28, 2024 17:22

தட்டி பார், தூக்கி பாரு, தொட்டு பார், சீண்டி பார்....


Dr Jagannath Seshaiyer
ஆக 13, 2024 19:30

எதற்கெடுத்தாலும் அம்பானி, அதானி என்று சொல்பவர்கள், அம்பானி அதானி குழுமத்தில் எத்தனை பேர் வேலை செய்கிறார்கள் என்று தெரியுமா? எத்தனை குடும்பகள் வீட்டில் இவர்களால் உலை கொதிக்கிறது என்றாவது தெரியுமா? சரி, இவர்கள் இல்லை என்றால், யார் முன் நின்று முதல் போட்டு தொழிற்சாலை ஆரம்பிப்பார்கள்? அரசாங்கமா? அப்படியே அரசாங்கம் ஆரம்பித்தால், உடனே தொழிற்சங்கங்கள் மூக்கை நுழைத்து நாசம் பண்ணிவிடும். இன்று இந்தியாவிற்கு டாடா, பிர்லா, ஆசீம் ப்ரேம்ஜி, அதானி, அம்பானி போன்ற முதலீட்டார்கள் தேவை.


Balasri Bavithra
ஆக 17, 2024 01:59

சன் டிவி இன் ஷேர் மார்க்கெட் மதிப்பு பற்றி பேச முடியுமா?.. ஜெகத்ரசகன் சொத்து அவரின் பிசினஸ் பற்றி பேசுங்க


ச.பாலசுப்பிரமணியன்
ஆக 13, 2024 10:20

தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை தரவேண்டும்.


மாயவரத்தான்
ஆக 12, 2024 23:02

ஏன் தேவையில்லாத வெட்டிப்பேச்சு விசாரணைக்கு ஒத்துழைச்சி நீதிமன்றம் சென்று உண்மை இருந்தால் நிரபராதி என்று தீர்ப்பை பெற்று வர வேண்டியதுதானே ?அதைத்தானே ஒரு நேர்மையான அரசியல்வாதி செய்ய வேண்டும் ?அதைதானே குஜராத்தில் மோடி அமித்ஷா மீது சோனியா அரசு பொய் வழக்கு போட்ட போது செய்தார்கள். அதை செய்ய வேண்டியது தானே ?இதில் கிண்டல் கேலி என்ற விஷயங்களுக்கு என்ன தேவை இருக்கிறது ? யார் மக்கள் சொத்தை கொள்ளை அடித்தார்கள், யார் வங்கி பணத்தை பணக்காரர்களுக்கு ஒரு போன் மூலம் எடுத்து வாரி விட்டார்கள் என்பது மக்களுக்கு நன்றாகவே தெரியும்.


Raj
ஆக 12, 2024 22:28

கொள்ளை கும்பல்


I am a Sanghi + Kafir…but not a Family slave
ஆக 28, 2024 17:19

ஆமாம் காங்கிரீஸும் dmk வும்


Raj
ஆக 12, 2024 22:26

மோடி அதானியால் ஆட்டப்படும் கை பொம்மை எகாதிபத்திய வர்கம் எழைகளின் வலி தெரியாது


Vasoodhevun KK
ஆக 13, 2024 16:02

ஆமாங்க ஐயா சோனியா ராகுல் மாதிரி ஏழை மக்களுக்கு தெரியாதுங்க .


Raj
ஆக 12, 2024 22:23

பெருமுதலாளி முதலைகளை பாதுகாக்கும் மோடி அதற்கு சலுகையாக அவர் ஆட்சியை பாதுகாக்கும் பெரும் முதலைகள் அரசுக்கு எதிராக மக்களுக்கு ஆதரவாக கேள்வி கேட்டால் எதாவது ஒரு வழக்கை எடுத்து மிரட்டுவது இவர்கள் உத்தமர்கள் போல நாட்டின் சாபக்கேடு


மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி