உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நாட்டை பிளவுபடுத்தும் வகையில் ராகுல் பேசுகிறார்: அமித்ஷா

நாட்டை பிளவுபடுத்தும் வகையில் ராகுல் பேசுகிறார்: அமித்ஷா

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

போபால்: ‛‛ நாட்டை பிளவுபடுத்தும் வகையில் காங்கிரஸ் எம்.பி., ராகுல் பேசி வருகிறார்'' என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.இது தொடர்பாக அவர் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: நாட்டின் பாதுகாப்பு , வளர்ச்சி, ஏழைகளின் நலனுக்காக நிற்கும் கட்சியை தேர்வு செய்ய வேண்டும் என மக்களுக்கு நான் வேண்டுகோள் விடுக்கிறேன். காங்கிரஸ் தனது பழைய பழக்கமான சமரச அரசியலை மீண்டும் செய்கிறது. இதனால் அக்கட்சியின் தேர்தல் அறிக்கைக்கு பிறகு பா.ஜ., மீது மக்களின் ஆதரவு அதிகரித்து உள்ளது.தனி நபர் சட்டம் குறித்து காங்கிரஸ் பேசுகிறது. ஷாரியா சட்டப்படி நமது நாடு செயல்பட முடியுமா என ராகுலிடம் நான் கேள்வி கேட்க விரும்புகிறேன். நமது அரசியல்சாசனம் மதசார்பற்றது. மத அடிப்படையில் சட்டம் கொண்டு வர முடியாது. பொது சிவில் சட்டம் கொண்டு வருவோம் என பா.ஜ., தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது. முத்தலாக் சிவில் சட்டத்தை ரத்து செய்துவிட்டு பொது சிவில் சட்டம் நோக்கி செல்கிறோம். ஆனால், நாட்டை பிளவுபடுத்தும் தனி நபர் சட்டம் குறித்து ராகுல் பேசுகிறார். இச்சட்டத்தை நாட்டில் அமல்படுத்த முடியாது. பிரதமர் ஆக மோடி 3வது முறையாக பதவியேற்பதை நாம் பார்ப்போம் என்ற நம்பிக்கை உள்ளது. இவ்வாறு அமித்ஷா கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

MADHAVAN
ஏப் 29, 2024 17:52

கோத்ராவுல இவரு பண்ணுனது என்ன னு எல்லோருக்கும் தெரியும்,


MADHAVAN
ஏப் 29, 2024 17:49

வண்டுமுருகன் கண்ணாடிமுன்னடி பேசுது


பேசும் தமிழன்
ஏப் 26, 2024 20:17

அவர் எப்போதுமே அப்படி தான் ...அவரது பேச்சு முழுவதும் ..தீவிரவாத ஆதரவு ....பிரிவினைவாதம் ....கொண்டதாகவே இருக்கும்.....இருந்திருக்கிறது......இதில் புதிதாக ஒன்றுமில்லை.


முருகன்
ஏப் 26, 2024 19:42

மதத்தை வைத்து அரசியல் செய்து மக்களை பிரிப்பது யார்?


A1Suresh
ஏப் 26, 2024 19:07

பப்பு என்கிற கைப்புள்ள வெளிநாடுகளில் சென்று பாரதத்தை பற்றி இழிவாக பேசுகிறார் ஒரிஜினல் பாரத ரத்தம் ஓடினால் இப்படி செய்வாரா ? இத்தாலிய கலப்பு ஓடுவதால் இந்த புத்தி


A1Suresh
ஏப் 26, 2024 19:06

அதனால் தான் அவருக்கு பப்பு. அதாவது கைப்புள்ள என்று பெயர் வைத்தனர்


M Ramachandran
ஏப் 26, 2024 18:30

பேசுவது இது முதல் முறை அல்லவே


அசோகன்
ஏப் 26, 2024 18:24

மோடி சொல்லாத 15 லட்சத்தை சொல்லி உருட்டுவர்களாம் ஆனால் பப்பு சொன்னதை அப்படியே திருப்பி சொன்னால் நாட்டை பிரிக்கிறாராம்.......... காசு கொடுத்தா என்ன வேணாலும் கருத்துப்போடும் கூட்டம்..... தென்னிந்தியாவை நாங்களும் வட இந்தியாவை முஸ்லிம்களும் எடுத்துக் கொள்ளலாம் என்று மேடையில் பேசியது நாட்டை சேர்க்கவா பிரிக்கவா ???


MADHAVAN
ஏப் 26, 2024 17:08

மிஸ்டர் வண்டுமுருகன் நீங்க கண்ணாடியை பார்த்து பேசுறீங்க


லூர்துசாமி,அடைக்கலபுரம் திருச்செந்தூர்
ஏப் 26, 2024 18:06

அறிவாலயத்துல அடைப்பு எடுக்கிற வேலையை மட்டும் பாரு மேன்.


MADHAVAN
ஏப் 26, 2024 16:08

மிஸ்டர் வண்டுமுருகன், நீங்க கண்ணாடிய பார்த்து பேசுறீங்க,


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை