உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பின்வாசல் வழியாக வெல்ல நினைக்கும் ராகுல்: பா.ஜ., கடும் விமர்சனம்

பின்வாசல் வழியாக வெல்ல நினைக்கும் ராகுல்: பா.ஜ., கடும் விமர்சனம்

புதுடில்லி: அமேதி தொகுதியில் போட்டியிடாமல், ரேபரேலி தொகுதியில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்ட காங்., முன்னாள் தலைவர் ராகுல், பின்வாசல் வழியாக வெற்றியடைய நினைக்கிறார் என பா.ஜ., விமர்சித்துள்ளது.காங்கிரஸ் எம்.பி., ராகுல், ரேபரேலி, வயநாடு உள்ளிட்ட 2 தொகுதிகளில் போட்டியிடுவது குறித்து பா.ஜ.,வினர் கடும் விமர்சனம் செய்துள்ளனர்.

மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர்:

பலமுறை பயப்படாதீர்கள், பயப்படாதீர்கள் எனக் கூறிவந்த ராகுல், இப்போது பயம் காரணமாக அமேதியில் இருந்து வயநாடு சென்றார், வயநாடில் இருந்து ரேபரேலி வந்துள்ளார். தோல்வி பயம் அவரை எல்லா இடங்களிலும் அழைத்துச் செல்கிறது. ஒரு பக்கம் ராபர்ட் வாத்ரா சீட் கேட்டும், மறுபுறம் பிரியங்காவுக்கு கட்சியினர் ஆதரித்தும் தனது சகோதரிக்கு ராகுலால் நீதி வழங்க முடியவில்லை. காங்கிரஸ் கட்சிக்குள் ஏதோ நடக்கிறது.

உ.பி., துணை முதல்வர் பிரஜேஷ் பதக்:

ரேபரேலியிலும், அமேதியிலும் பா.ஜ., மிகப்பெரிய ஓட்டு வித்தியாசத்தில் வெற்றிப்பெறும். முதலில் ராகுல், அமேதியில் இருந்து வெளியேறி வயநாடு சென்றார்; இப்போது அவர் ரேபரேலி வந்துள்ளார். அங்குள்ள மக்கள் எப்போதும் ராகுலை ஏற்க மாட்டார்கள். உ.பி.,யில் உள்ள 80 தொகுதிகளிலும் பா.ஜ., வெற்றிப்பெறும்.

பா.ஜ., செய்தித்தொடர்பாளர் ஷேசாத் பூனவல்லா:

தோல்வியை ஒப்புக்கொண்டு அமேதியை விட்டு வெளியேறியதை காங்கிரஸ் உறுதிப்படுத்தியுள்ளது. இத்தனை ஆண்டுகளாக அமேதி மக்களை ஏமாற்றிவிட்டு வயநாடு சென்றனர். இப்போது வயநாடு மக்களையும் ஏமாற்றிவிட்டனர். வயநாடை 'யூஸ் அண்ட் த்ரோ' ஆக நினைத்துவிட்டார்கள். ரேபரேலி தொகுதிதான் பாதுகாப்பானது என அதை தேர்ந்தெடுத்துள்ளார்கள்.ஆனால் உ.பி.,யில் உள்ள 80 தொகுதிகளிலும், நாடு முழுவதும் 400க்கும் மேற்பட்ட தொகுதிகளிலும் தேசிய ஜனநாயக கூட்டணியே வெல்லும். அமேதியில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட கிஷோரி லால் சர்மா, பலிகடா ஆக்கப்பட்டுள்ளார். அதேபோல், ரேபரேலி தொகுதியில் போட்டியிட கடுமையாக முயற்சி செய்தும் வாய்ப்பிழந்த பிரியங்காவின் கணவர் ராபர்ட் வாத்ராவை நினைத்து வருத்தப்படுகிறேன்.

பா.ஜ., செய்தித்தொடர்பாளர் ஜெய்வீர் ஷெர்கில்:

அமேதியை விட்டு வெளியேறிய ராகுல், ஒட்டுமொத்த தேசத்திற்கும் தனது கோழைத்தனம் மற்றும் பாசாங்குத்தனத்தை நிரூபித்துள்ளார். பின்வாசல் வழியாக வெற்றியடைய நினைக்கிறார். அவர் அமேதியில் போட்டியிடாமல் தொகுதி மாறியது, பிரியங்கா தேர்தலில் போட்டியிடாமல் நழுவியது ஆகியவை காங்கிரஸ் பயந்து நடுங்குவதையே காட்டுகிறது. காங்கிரஸ் கட்சி வெகுவிரைவில் தனது ஆட்டத்தை முடித்துக்கொள்ளும்.

சத்தீஸ்கர் துணை முதல்வர் அருண் சாவ்:

முதலில் அமேதியில் இருந்து வெளியேறி வயநாடில் நின்றார். இப்போது அங்கும் தோல்வியடைவார் எனத் தெரிந்ததும், ரேபரேலியில் போட்டியிட வந்துள்ளார். மக்களின் விருப்பத்திற்கு வருபவர்களையும், தன்னுடைய விருப்பத்திற்காக வருபவர்களையும் வயநாடு மக்களுக்கு நன்றாக தெரியும். ரேபரேலி மக்களும் ராகுலை தோற்கடிப்பார்கள்.

அமேதி தொகுதியில் போட்டியிடும் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி

பா.ஜ., எம்.பி.,யின் கீழ் தொகுதி வளர்ச்சி பெற்றுள்ளது. ஆனால், பல தசாப்தங்களாக காங்கிரஸ் இத்தொகுதியை கண்டு கொள்ளாமல் இருந்தது. இன்று அமேதி மக்களுக்கு வெற்றி கிடைத்து உள்ளது. கடந்த 3 ஆண்டுகளாக காங்கிரஸ் தலைவர்கள் யாரும் அமேதிக்கு செல்லவில்லை என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

Syed ghouse basha
மே 03, 2024 22:56

ராகுல் நிற்ப்பது பஜக சும்மா அதிருதில்லே


Vathsan
மே 03, 2024 19:52

இந்த பேரும் பாஜக வாரிசு அரசியல் வாதிகள் என்பது குறிப்பிட தக்கது


shanmugaraja
மே 03, 2024 15:46

பா ஜா வின் தலைவர்கள் இப்பவே புலம்ப தொடங்கி விட்டனர் பாவம் மோடி


Vathsan
மே 03, 2024 15:42

மோடி தான் ரொம்ப தைரியமான ஆளாச்சே ராகுலை எதிர்த்து வயநாடு மாற்று ரேபரேலி யில் மோடி போட்டி போடலாமே அதை செய்யாமல் அல்லக்கைகள் எழும்புவது ஏன்?


Velan Iyengaar
மே 03, 2024 14:44

என்னாது ??? அமேதி தொகுதியில் முன்னேற்றம் இருக்கா ??


Ramanujadasan
மே 03, 2024 15:42

அப்போ இதுவரை காங்கிரஸ் கட்சி அமேதி முன்னேற்றத்திற்கு எதுவும் செய்யவில்லை என்கிறீர்களா எழுபத்தி இரண்டு வருடங்கள் அங்கே ஜெயித்த போதும் ?


Velan Iyengaar
மே 03, 2024 14:40

ராகுல் காந்தி வெற்றி நிச்சயம் இது எப்படி இருக்கு ????


Lion Drsekar
மே 03, 2024 13:32

சுதந்திரம் அடைவதற்கு முன்பாகவே இவரது தாத்தா பள்ளியில் பள்ளியில் அடிக்கும்போதே எந்த வழியாக வெளியே வருவார் என்று தெரியாதாம் , ஆகவே எல்லா வாசலிலும் ஒவ்வொரு கார்கள் இருக்குமாம் இதை நாங்கள் பள்ளியில் படிக்கும் போது லால்பகதூர் சாஸ்திரி அவர்களின் சரித்திரத்தில் ஆங்கில புத்தகத்தில் படித்திருக்கிறோம் அதே போன்று இந்த செய்திக்கு தொடர்பு இல்லாமல் இருக்கலாம் ஆனாலும் எல்லோரும் தெரிந்து கொள்ளவேண்டிய ஒரு செய்தி , அலகாபாத் நதியில் படகில் சென்று நதியை கடந்து செல்வது நேருவின் வழக்கமாம், ஆனால் பணம் இல்லாததால் லால்பகதூர் சாஸ்திரி நீந்தி , கடந்து சென்று படிப்பாராம் ஆக இவரது பரம்பரையே எல்லா வாசல்களையும் இன்றும் தங்கள் கட்டுப்பாட்டிலேயே வைத்திருப்பதால் எது முன்வாசல் எது பின்வாசல் என்பது உங்களுக்கு மட்டுமேதெரியும் வந்தே மாதரம்


Subramanian N
மே 03, 2024 13:28

ராகுல் கூடிய சீக்கிரம் இந்த நாட்டை விட்டே ஓடி விடுவார்


Ramesh Sargam
மே 03, 2024 12:21

எந்தவாசல் வழியாக வந்தாலும் ராகுலால் வெற்றிபெறமுடியாது


Velan Iyengaar
மே 03, 2024 12:14

போட்டியிடுவது உறுதியானதும் இப்போ இவர்களை பயம் பிடித்துக்கொண்டது இப்போது INDIA கூட்டணி உத்தரப்பிரதேசத்தில் எத்தகைய உத்வேகத்தை பெற்றுவிடுமோ என்ற பீதி இவர்கள் கண்களில் அப்பட்டமாக தெரிகிறது


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை