உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தமிழகத்தை சேர்ந்த ராஜா சுப்ரமணி ராணுவ துணை தளபதியாக பொறுப்பேற்பு

தமிழகத்தை சேர்ந்த ராஜா சுப்ரமணி ராணுவ துணை தளபதியாக பொறுப்பேற்பு

புதுடில்லி: ராணுவ துணைத் தலைமைத் தளபதியாக லெப்டினட் ஜெனரல் ராஜா சுப்பிரமணி பொறுப்பேற்றார். இந்திய ராணுவ தளபதியாக இருந்த மனோஜ்பாண்டே கடந்த ஜூன் 30-ம் தேதி ஓய்வு பெற்றதையடுத்து புதிய ராணுவ தலைமை தளபதியாக உபேந்திர திவேதி நியமிக்கப்பட்டார்.இதைத்தொடா்ந்து ராணுவத்தின் துணை தளபதியாக லெப்டினட் ஜெனரல் ராஜா சுப்ரமணி பெயரை மத்திய அரசு கடந்த ஜூன் மாதம் அறிவித்தது. இதையடுத்து கடந்த 01-ம் தேதி பொறுப்பேற்றுக்கொண்டார்.இவர் 1985ம் ஆண்டு டிசம்பரில் கார்வால் ரைபிள்ஸ் படைப்பிரிவில் பணியில் சேர்ந்தார். தேசிய பாதுகாப்பு கல்விக்கழகம் ,இந்திய ராணுவ கல்விக் கழகத்தில் இளநிலைப் பட்டம் பெற்றார். டில்லியில் உள்ள தேசிய பாதுகாப்புக் கல்லூரியின் முன்னாள் மாணவர் ஆவார். சென்னைப் பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பு ஆய்வில், எம்.பில் பட்டம் பெற்றார். மேலும் டில்லி, லண்டனில் பயின்றுள்ளார்.ராணுவத்தில் 37 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி பல்வேறு முக்கிய பதவிகளை வகித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

V RAMASWAMY
ஜூலை 10, 2024 08:49

நல்லவர், வல்லவர் என்று பெயரெடுத்து, தமிழகத்து பெயரையும் பாரத தேசத்து பெருமையும் உயர செயல்பட வாழ்த்துக்கள்.


Subramanian
ஜூலை 10, 2024 07:44

வாழ்த்துகள்


Yes
ஜூலை 10, 2024 03:50

இந்த பெயர் உள்ளவர்கள் மிகுந்த திறமைசாலிகள் ஆகவும் அறிவாளிகள் ஆகவும் இருப்பர் இது போன்ற தெய்வ பெயர்கள் மனிதரை நல் வழி படுத்துகிறது. அதனால் முன்னோர் கடவுள் பெயர்களை மனிதர்க்கு வைத்தனர்.


subramanian
ஜூலை 09, 2024 22:32

மிகவும் பெருமையாக உள்ளது. உங்களுக்கு வாழ்த்துக்கள். பல நல்ல திட்டங்களை செயல்படுத்தி நாட்டுக்கு பெருமை சேர்க்கும் வகையில் பணியாற்றி உயர்வு பெற வேண்டும்.


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை