உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ‛‛ராமர் கோயில் இந்தியாவின் ஒற்றுமைக்கான அடையாளம்: பிரதமர் மோடி பேச்சு

‛‛ராமர் கோயில் இந்தியாவின் ஒற்றுமைக்கான அடையாளம்: பிரதமர் மோடி பேச்சு

அயோத்தி: ராமர் கோயில் இந்தியாவின் அமைதி மற்றும் ஒற்றுமைக்கான அடையாளம் என பிரதமர் மோடி கூறினார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=l6ntcfo0&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அயோத்தியில் ராமர் சிலை பிராண பிரதிஷ்டை செய்த பின், பிரதமர் மோடி பேசியதாவது:

ராமர் கீதம்

மிகப்பெரிய முயற்சியால் ராமர் கோயில் சாத்தியமானது. ராமரின் ஆசிர்வாதத்தால், இந்த நிகழ்வு நடந்தேறி உள்ளது. இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும், ஜன.,22ம் தேதியை யாரும் மறக்க மாட்டார்கள். கூடாரத்தில் இருந்த பாலராமருக்கு தற்போது அழகிய கோயில் கட்டப்பட்டு உள்ளது. கோயில் கட்ட ஆன தாமதத்தை ராமர் மன்னிப்பார் என நம்புகிறோம். ஒவ்வொரு கிராமத்திலும் இன்று ராமர் கீதம் ஒலித்து கொண்டு இருக்கிறது. அடிமைத்தனத்தின் அடையாளம் நீங்கி உள்ளது.

நியாயம் வென்றது

மிகப்பெரிய சட்டப்போராட்டத்தால் கோயில் சாத்தியமானது. நியாயம் வென்றது. யாரையும் வீழ்த்தியதால் கிடைத்த வெற்றி அல்ல. கண்ணியமாக கிடைத்த வெற்றி. கோயில் கட்ட காரணமான இந்திய நீதித்துறைக்கு நன்றி. இந்தியாவே இன்று தீபாவளி கொண்டாடி வருகிறது. நாட்டு மக்கள் மனதில் ராமர் குடியேறி உள்ளார். ஸ்ரீரங்கம், ராமநாத சுவாமி மற்றும் தனுஷ்கோடி சென்றது எனது பாக்கியம். ராமர் அரிச்சல் முனை சென்றபோது காலச்சக்கரம் மாறியது. நானும் அங்கு அதனை உணர்ந்தேன். ராமரின் பக்தர்களுக்கு நான் கடமைப்பட்டு இருக்கிறேன். பல நூற்றாண்டுகளாக அயோத்தி ராமருக்காக காத்திருந்தது.

புதிய சகாப்தம்

ராமர் கோயில் திறப்பின் மூலம், இந்தியாவில் புதிய சகாப்தம் மற்றும் நம்பிக்கை பிறந்துள்ளது. நூற்றாண்டு கால தியானங்களும், பொறுமையும் இன்று பலன் அளித்துள்ளது. ஒட்டு மொத்த நாட்டு மக்களுக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன். ராமரின் சிறப்பு குணங்கள் இந்தியாவின் மூலை முடுக்கெல்லாம் பரவியுள்ளது.

ஒற்றுமைக்கான அடையாளம்

ராமர் கோயில் இந்தியாவின் அமைதி மற்றும் ஒற்றுமைக்கான அடையாளம். ராமர் நமக்கானவர் மட்டுமல்ல. உலகத்திற்கே உரியவர். ஆயிரம் ஆண்டுகளாக ராம ராஜ்ஜியம் நடந்து வருகிறது. சரியான பாதையை நோக்கி காலச்சக்கரம் சுழல துவங்கி உள்ளது. அயோத்தியில் ராமர் சிலையுடன், இந்திய கலாசாரமும் நிறுவப்பட்டுள்ளது.

விவாதப் பொருள் அல்ல

ராமர் 14 ஆண்டுகள் வனவாசம் சென்றார். ஆனால் மக்கள் அவரிடம் இருந்து பல நூற்றாண்டுகள் பிரிந்து இருந்தனர். அயோத்திக்கு வருகை தந்த பக்தர்களை வரவேற்கிறேன். ராமர் கோயில் கட்டினால் நாடு பற்றி எரியும் என சிலர் தவறாக பரப்புரை செய்தனர். ராமர் விவாதப் பொருள் அல்ல. அவர் ஒரு தீர்வு.

ராம நாமமே

ராமருக்கான அர்ப்பணிப்பு தேசத்திற்கான அர்ப்பணிப்பு என நாம் உறுதி ஏற்போம். அனைவரும் ஒன்று என கூறுவதற்கு ராமர் அடையாளம். இளைஞர்களின் முன் ஆயிரம் ஆண்டுகளுக்கான பாரம்பரியம் உள்ளது. உலக அரங்கில் இந்தியாவின் நேரமாக இந்த தருணம் மாறி வருகிறது. ராமேஸ்வரம் முதல் சரயு நதிக்கரை வரை ராம நாமமே ஒலிக்கிறது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

உணர்வுபூர்வமான தருணம்

முன்னதாக, உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியிருப்பதாவது: நாங்கள் கட்ட நினைத்த இடத்தில் ராமர் கோயில் கட்டப்பட்டுள்ளது. இந்த வரலாற்று தருணத்தில், நாட்டின் ஒவ்வொரு நகரமும், கிராமமும் அயோத்தியாக மாறியுள்ளது. மேலும் ஒவ்வொரு பாதையும் ராம ஜென்மபூமியை நோக்கிச் செல்வதாகத் தெரிகிறது.500ஆண்டு காத்திருப்புக்கு பின், நம் அனைவருக்கும் இது ஒரு உணர்வுபூர்வமான தருணம்.மகிழ்ச்சியை வெளிப்படுத்த வார்த்தைகள் கிடைக்காத சில உணர்வுகள் என் இதயத்தில் உள்ளன. மக்கள் அனைவரும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

Arachi
ஜன 23, 2024 13:59

மறுபடியுமா, கொரானா நேரத்தில் சொன்னீங்களே அது மாதிரியா.


beindian
ஜன 23, 2024 09:55

இதுக்குப்பெயர் ஒற்றுமை இல்லை தெளிவாக சொல்லுகிறார்


beindian
ஜன 23, 2024 09:52

உண்மையான மனிதர்கள் பாதிக்கப்பட்ட மக்களின் உரிமைக்காக நிற்பதே அறம் .


பேசும் தமிழன்
ஜன 23, 2024 08:06

அங்குள்ள முஸ்லீம்கள் உண்மையாய் உணர்ந்து... அமைதியாக இருக்கிறார்கள்.. ஆனால் கான்கிரஸ் மற்றும் திருட்டு மாடல் ஆட்கள் தான்.. மக்களை தூண்டி விட்டு வேடிக்கை பார்க்கிறார்கள்! மக்கள் ஒற்றுமையாக இருந்தால்.. அவர்கள் பிழைப்பு நடக்காதே!!


g.s,rajan
ஜன 22, 2024 21:43

இந்தியாவில் இந்துக்களிடம் ஒற்றுமை அதிகரிக்க வேண்டும் ,கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்களில் சாதிகள் மற்றும் சாதி அடிப்படையில் இட ஒதுக்கீடு அறவே ஒழிக்கப்படவேண்டும் ,அவ்வாறு செய்தால் மக்களிடம் தானாகவே ஒற்றுமை அதிகரிக்கும் .


ALAGAPPAN NACHIAPPAN NACHI
ஜன 22, 2024 20:21

ஜெய்ஸ்ரீராம் ....


Mohan
ஜன 22, 2024 17:57

மதசார்பின்மை என்பது பொருந்தாத ஏமாற்று வேலை. மனிதநேயமுள்ள ""சகிப்புத்தன்மையே"" சரியான பொருத்தமான கொள்கை. இந்திய அரசியல் அமைப்பு ஆசான்கள் சொல்லாத, தேவையில்லை என கருதியதால் அதை அரசியல் அமைப்பு சட்டத்தில் சேர்க்காமல் விட்டனர். பிரயோசனமற்றதாக,அவர்கள் ( அம்பேத்கர் உட்பட) கருதியதை வலுக்கட்டாயமாக லோக் சபையில் நீறைவேற்றாமல் எமர்ஜென்சி நேரத்தில் சர்வாதிகாரியாக திகழ்ந்த ""இந்திரா காந்தி"" புழக்கடை வழியாக அதில்கொண்டு வந்த இந்த சட்டத்திருத்தம் சட்ட விரோதம். இதற்கு சட்ட மதிப்பு இல்லை இல்லை இல்லவே இல்லை


Bala
ஜன 22, 2024 22:44

மதசார்பின்மை என்பதைவிட நாத்திகமின்மை என்பதை வேண்டுமானால் கொண்டுவரலாம். ஏனென்றால் இந்து மத துவேஷத்தை வளர்த்தெடுப்பதில் பெரும்பங்காற்றுவது தீக போன்ற நாத்திக முதுகெலும்பில்லாத ஹிந்து மத எதிர்பாளர்கள்தான். " ஒன்றே குலமும் ஒருவனே தேவனும், நன்றே நினைமின் நமனில்லை நாணாமே, சென்றே புகும்கதி இல்லைநும் சித்தத்து, நின்றே நிலைபெற நீர்நினைந்து உய்ம்மினே" என்ற திருமூலரின் வழியில் ஆரம்பிக்கப்பட்ட திமுக என்ற கட்சி இப்பொழுது முற்றிலுமாக தேச விரோதிகளின் கையிலும், நாத்திகர்களின் கையிலும் மாட்டிக்கொண்டு விட்டது என்று நினைக்கிறேன். இனி அவர்கள் எதிர்காலம் கேள்விக்குறிதான். திமுக சகாப்தம் முடிந்துவிட்டது


வெகுளி
ஜன 22, 2024 16:18

அயோத்தி ராமர் கோயில் இந்தியாவின் அமைதி மற்றும் ஒற்றுமைக்கான அடையாளம், குறிப்பாக தமிழகத்தில் ஹிந்துக்களின் விடியலுக்கான அடிக்கல்... திராவிட மாயை அகல தொடங்குகிறது....


A1Suresh
ஜன 22, 2024 16:11

தர்மத்தின் தலைவன் ஸ்ரீராமர் . "ராமோ விக்ரஹவான் தர்ம: " என்று மாரீசன் சொன்ன இதன் பொருள் என்னவெனில் -"ஸநாதனை தர்மம் ஒரு விக்ரஹ வடிவை எடுத்து வந்தால் அதுவே ஸ்ரீராமர் ஆகிறார் . என்பது தான்


Muthu Kumar
ஜன 22, 2024 16:07

ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம்


மேலும் செய்திகள்







புதிய வீடியோ