உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பப்புவா நியூ கினியாவூக்கு ரூ.8.31 கோடி நிவாரணம்: இந்தியா உதவி

பப்புவா நியூ கினியாவூக்கு ரூ.8.31 கோடி நிவாரணம்: இந்தியா உதவி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ள பாப்புவா நியூ கினியாவுக்கு 1 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பு ரூ.8.31 கோடி) மதிப்பிலான நிவாரண உதவி வழங்க இந்தியா முடிவு செய்துள்ளது. பப்புவா நியூ கினியா நாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் மலை கிராமம் மண்ணுக்குள் புதைந்தது. இந்த விபத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். நிலச்சரிவில் சிக்கியுள்ளவர்களை மீட்க சர்வதேச நாடுகளின் உதவிகளை அந்நாட்டு அரசு நாடியுள்ளது. பாப்புவா நியூ கினியாவுக்கு 1 மில்லியன் டாலர் மதிப்பிலான நிவாரண உதவி வழங்க இந்தியா முடிவு செய்துள்ளது. .

இரங்கல்

பிரதமர் மோடி எக்ஸ் சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பப்புவா நியூ கினியாவில் நிலச்சரிவால் ஏற்பட்ட உயிரிழப்புகள் மற்றும் சேதங்கள் வருத்தம் அளிக்கிறது. பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறோம். பப்புவா நியூ கினியாவிற்கு தேவையான அனைத்து உதவிகளையும் இந்திய அரசு செய்யும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை