உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ரெப்போ வட்டி விகிதம் 0.25% குறைப்பு; ரிசர்வ் வங்கி அறிவிப்பு

ரெப்போ வட்டி விகிதம் 0.25% குறைப்பு; ரிசர்வ் வங்கி அறிவிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: வங்கிக்களுக்கான குறுகிய காலக் கடனுக்கான ரெப்போ வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைக்கப்படுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் கடனுக்கு விதிக்கப்படும் வட்டி விகிதம் ரெப்போ வட்டி விகிதம். இரு மாதங்களுக்கு ஒருமுறை ரிசர்வ் வங்கி கூடி, ரெப்போ வட்டி விகிதம் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கும். அந்த வகையில், இன்று (டிச.,05) வங்கிக்களுக்கான குறுகிய காலக் கடனுக்கான ரெப்போ வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைக்கப்படுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.இதனால் ரெப்போ வட்டி விகிதம் 5.50 சதவீதத்தில் இருந்து 5.25 சதவீதமாக குறைந்தது. இது குறித்து ரிசர்வ் வங்கி கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா கூறியதாவது: மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி உள்ளிட்டவை காரணமாக ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை 0.25 சதவீதம் குறைத்துள்ளது. பணவீக்கம் குறைந்துள்ளது. மொத்த உள்நாட்டு உற்பத்தி அதிகரித்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.ரெப்போ வட்டி விகிதம் குறைந்துள்ளதால், வீடு, வாகனக் கடனுக்களுக்கான வட்டி விகிதம் குறைய வாய்ப்புள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி