பாதயாத்திரை முடிப்பதற்குள் ராஜினாமா
துவக்க நிகழ்ச்சியில் முன்னாள் முதல்வர் எடியூரப்பா பேசியதாவது:'மூடா' முறைகேடுக்கு பொறுப்பேற்று, முதல்வர் சித்தராமையா ராஜினாமா கடிதம் கொடுப்பதற்கு தயாராக உள்ளார். எனக்கு வந்த தகவல்படி, எங்கள் பாதயாத்திரை முடிவதற்குள், அவர் ராஜினாமா அளித்திருப்பார்.பா.ஜ., - ம.ஜ.த., இரண்டு கட்சிகளும் இணைந்தும், முதல்வருக்கு எதிராக பாதயாத்திரை நடத்துகிறோம். குமாரசாமி ஆலோசனை வழங்குவார். மாநில காங்கிரஸ் அரசு செய்துள்ள அனைத்து முறைகேடுகளையும் மக்கள் முன்வைப்போம்.பொய் சொல்லி ஆட்சிக்கு வந்த அவர்கள், சொன்ன வாக்கை காப்பாற்றவில்லை. காங்கிரஸ் அரசு என்னென்ன செய்து கொண்டுள்ளது என்பதை கர்நாடக மக்கள் பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.இவ்வாறு அவர் பேசினார்.'ஆவணங்களை வழங்கியதே சிவகுமார் தான்'மத்திய கனரக தொழிற்சாலைகள் துறை அமைச்சர் குமாரசாமி பேசியதாவது:நான் முறைகேடாக சொத்து சேர்த்துள்ளதாக சிவகுமார் குற்றஞ்சாட்டினார். அப்படி முறைகேடு சொத்து சேர்த்திருந்தால், கையகப்படுத்திக் கொள்ளுங்கள். அவர்களை யாரும் தடுக்கவில்லை. நேர்மையாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.மக்களின் சொத்தை விழுங்கிய காங்கிரஸ் அரசு, மக்கள் விரோத அரசு. கர்நாடக காங்கிரஸ் ஆட்சியில் பல முறைகேடுகள் நடந்துள்ளன. தற்போதைக்கு, மூடா, வால்மீகி முறைகேடுகள் மட்டுமே பகிரங்கமாகி உள்ளன.காங்கிரசை கர்நாடகாவில் இருந்து வேறுடன் பிடுங்கி விரட்ட, பா.ஜ.,வுக்கு ஆதரவாக இருப்போம். மூடா முறைகேடு தொடர்பான ஆவணங்களை வழங்கியதே துணை முதல்வர் சிவகுமார் தான். ஆனால், ஒன்றும் தெரியாதபடி நாடகம் ஆடுகிறார்.உங்கள் நாடகத்தை பகிரங்கப்படுத்துகிறேன். இன்னும் 10 ஆண்டுகள் காங்கிரஸ் ஆட்சி தான் என்று அவர் சொல்லியுள்ளார். 10 ஆண்டுகள் அல்ல, 10 மாதங்கள் இருக்குமா என்று சவால் விடுக்கிறேன்.இவ்வாறு அவர் பேசினார்.
சாமுண்டீஸ்வரி தரிசனம்
பாதயாத்திரை துவங்குவதற்கு முன்னதாக, மாநில தலைவர் பா.ஜ., விஜயேந்திரா, மைசூரு சாமுண்டீஸ்வரி தேவியை தரிசனம் செய்தார். பின், அங்கிருந்து வந்து பாதயாத்திரையில் பங்கேற்றார். விஜயேந்திராவுடன், மாநில ம.ஜ.த., இளைஞர் அணி தலைவர் நிகிலும் ஒன்றாக இணைந்து பாதயாத்திரையில் பங்கேற்றது அனைவரையும் ஈர்த்தது.