உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா /  விபத்தில் பலியான வாலிபர் குடும்பத்துக்கு ரூ.35 லட்சம்

 விபத்தில் பலியான வாலிபர் குடும்பத்துக்கு ரூ.35 லட்சம்

புதுடில்லி: விபத்தில் உயிரிழந்த வாலிபர் குடும்பத்துக்கு, 35 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. புதுடில்லியைச் சேர்ந்த ராகுல்,21, தன் நண்பர் ரோஹனுடன் 2022ம் ஆண்டு ஜூன் 18ம் தேதி ஸ்கூட்டரில் சென்றார். ரோஹ்தக் சாலையில் செல்லும் போது, ரோஹன் கட்டுப்பாட்டை இழந்த ஸ்கூட்டர், மெட்ரோ ரயில் நிலைய துாணில் மோதியது. இருவரும் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்தனர். மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ராகுல் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இழப்பீடு கேட்டு, மோட்டார் வாகன விபத்து தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த டாக்டர் குஞ்சன் குப்தா அளித்த தீர்ப்பு: தாய், தம்பி மற்றும் திருமணமாகாத அக்கா ஆகிய மூவரும் ராகுலின் மாதச் சம்பளத்தை நம்பியிருந்தனர். தற்போது, வருமான ஆதாரம் இல்லாத நிலையில் தவிக்கின்றனர். குறைந்த பட்ச ஊதியத்தின் அடிப்படையில் மதிப்பிட்ட வகையில், ராகுல் குடும்பத்துக்கு 35.11 லட்சம் ரூபாய் இழப்பீட்டுத் தொகையை, காப்பீட்டு நிறுவனம் வழங்க வேண்டும். இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை