உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ராகுலை விமர்சித்த ரஷ்ய செஸ் வீரர்: ‛ஜோக் என விளக்கம்

ராகுலை விமர்சித்த ரஷ்ய செஸ் வீரர்: ‛ஜோக் என விளக்கம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மாஸ்கோ: ரஷ்யாவைச் சேர்ந்த பிரபல செஸ் வீரர் கேரி காஸ்பரோவ், ‛‛ தலைமைக்கு சவால் விடுவதற்கு முன்பு ராகுல் ரேபரேலியில் வெற்றி பெற வேண்டும் '' எனக்கூறி இருந்தார்.காங்கிரஸ் எம்.பி., ராகுல், அரசியல் பிரசாரத்திற்கு இடையே செஸ் விளையாடும் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தது. மேலும், தனக்கு பிடித்த செஸ் வீரர் ரஷ்யாவின் கேரி காஸ்பரோவ் எனக்கூறியிருந்தார்.இது தொடர்பாக ஒருவர், ‛எக்ஸ்' சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ‛‛ நல்லவேளை, கேரி காஸ்பரோவ் மற்றும் விஸ்வநாதன் ஆனந்த் விரைவில் ஓய்வு பெற்று விட்டனர். இல்லையென்றால், அவர்கள் இக்காலத்தில் மிகப்பெரிய செஸ் மேதையை எதிர்கொள்ள வேண்டியிருந்திருக்கும்'' என பதிவிட்டு இருந்தார். அதனுடன் கேரி காஸ்பரோவ்வையும் மேற்கோள் காட்டி இருந்தார். இதனால், இந்த பதிவு காஸ்பரோவின் கவனத்திற்கு சென்றது. அவர் அதற்கு அளித்த பதிலில், ‛‛ தலைமைக்கு சவால் விடுவதற்கு முன்பு ராகுல் ரேபரேலியில் வெற்றி பெற வேண்டும் '' எனக்கூறியிருந்தார். இதனையடுத்து இந்த பதிவு வைரல் ஆகி சர்ச்சையை ஏற்படுத்தியது.இதனையடுத்து கேரி காஸ்பரோவ் அளித்த விளக்கத்தில் கூறியுள்ளதாவது: எனது சிறிய ஜோக் இந்திய அரசியலில் தாக்கம் அல்லது நிபுணத்துவம் பெறாது என நான் நம்புகிறேன். எனக்கு பிடித்த விளையாட்டில் ஒர் அரசியல்வாதி ஈடுபடுவதை என்னால் பார்க்காமல் இருக்க முடியாது '' எனக்கூறியுள்ளார். இது பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

குமரி குருவி
மே 04, 2024 17:02

ராகுலை நம்மூரில் சிறியவர்கள் கூட கிண்டல் கேலி பண்ணுவது தெரியாதா..


Godfather_Senior
மே 04, 2024 16:44

அவர் கூறியதை அப்படியே ஏற்போம் உண்மைதான், ராகுல் இரண்டு இடத்திலும் தோல்வி அடைவார் என்பது ரஷ்யாவிலும் தெரிந்திருக்கிறது


Kumar Kumzi
மே 04, 2024 15:35

ராகுல் புகழ் ரஷ்யா வரை பறந்துள்ளது


JAYACHANDRAN RAMAKRISHNAN
மே 04, 2024 15:33

நமது நாட்டின் செஸ் வீரர்களை பிடிக்கவில்லை ரஷ்யா வீரரை தான் பிடித்துள்ளது


Venkatasubramanian krishnamurthy
மே 04, 2024 15:31

ராகுலின் ரேபரேலி வெற்றி என்பது ரஷ்யா அளவில் கூட சந்தேகத்தைத் தருகிறது


Mohan
மே 04, 2024 15:01

நம் நாட்டு அரசியல்வாதிகள் அவர்களது சும்மா இல்லாம செஸ் வீரர்களை போல தங்கள் தலைவரும் புத்திசாலிகள் எனப் பீற்றிக் கொண்டுள்ளனர்


RAJ
மே 04, 2024 13:55

விடுங்க சார் கரெக்டாதானே சொல்லி இருக்கார் வருத்தப்படவேண்டாம்


Ramesh Sargam
மே 04, 2024 13:45

மற்றநாட்டு செஸ் வீரர்களிடம் கூட ராகுலுக்கு மதிப்பு இல்லை என்னத்த சொல்வது?


MOHAMED Anwar
மே 04, 2024 13:26

ரஷ்ய வீரர் கூறியது வருத்தமளிக்கிறது அவர் விளையாட்டில் சறுக்கியுள்ளாரோ தெரியவில்லை? வார்த்தைகளில் சறுக்கியுள்ளார்


Sakthi,sivagangai
மே 04, 2024 14:56

எல்லாம் ஒரே சிந்தனைதான் அது எதிர்மறை சிந்தனையாகும்.


மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி