உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பங்குச்சந்தையில் வர்த்தகம் செய்யக்கூடாது: அனில் அம்பானிக்கு 5 ஆண்டு தடை

பங்குச்சந்தையில் வர்த்தகம் செய்யக்கூடாது: அனில் அம்பானிக்கு 5 ஆண்டு தடை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: இந்திய பங்கு சந்தையில் வர்த்தகம் செய்ய அனில் அம்பானிக்கு 5 ஆண்டுகள் செபி அமைப்பு தடை விதித்துள்ளது. முதலீட்டாளர்களின் நிதியை தவறாக பயன்படுத்தியதாக எழுந்த புகார்படி, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஸ்தாபகர் திருபாய் அம்பானிக்கு இரு மகன்கள். மூத்த மகன் முகேஷ் அம்பானி, ஜியோ, ரிலையன்ஸ் பெட்ரோலியம் உள்ளிட்ட நிறுவனங்களை வெற்றிகரமாக நடத்தி வருகிறார். மும்பை இந்தியன்ஸ் கிரிக்கெட் அணியும் அவர் வசம் உள்ளது. அவரது தொழில் நிறுவனங்கள் அனைத்தும் வெற்றிகரமாக செயல்படுகின்றன.ஆனால், அவரது இளைய சகோதரரான அனில் அம்பானியின் நிறுவனங்கள் ஒவ்வொன்றாக செயல்பாடிழந்து, நஷ்டத்தில் மூழ்கி வருகின்றன. அதனால் அவருக்கு மட்டுமின்றி, முதலீட்டாளர்களுக்கும் பெரும் நஷ்டம் ஏற்பட்டிருக்கிறது.இந்நிலையில், முதலீட்டாளர்களின் நிதியை அனில் அம்பானி தவறாக பயன்படுத்தியதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. அதன்படி, இந்திய பங்கு சந்தையில் வர்த்தகம் செய்ய அனில் அம்பானியின் நிறுவனம் உள்ளிட்ட 24 நிறுவனங்களுக்கு 5 ஆண்டுகள் செபி அமைப்பு தடை விதித்துள்ளது.

ரூ.25 கோடி அபராதம்

தொழிலதிபர்கள் பாப்னாவுக்கு ரூ.27 கோடியும், சுதால்கருக்கு ரூ.26 கோடியும், அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அனில் அம்பானிக்கு ரூ.25 கோடி அபராதமும், அனில் அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் ஹோம் பைனான்ஸ் நிறுவனத்திற்கு ரூ.6 லட்சமும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. பங்குசந்தையில் ரிலையன்ஸ் ஹோம் பைனான்ஸ் நிறுவன பங்குகளுக்கு 6 மாதங்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது. பங்குச்சந்தையில் உள்ள எந்த நிறுவனத்திலும், இயக்குனராகவோ, நிர்வாகத்திலோ அனில் அம்பானி இருக்கக் கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

Easwar Kamal
ஆக 23, 2024 18:22

திவால் ஆகி அண்ணன்காரன்கிட்ட கொஞ்சம் dabbu வாங்கி பாதி கடன் அடைச்சு மீதி பேங்க் காரன் கிட்ட காலம் அவகாசம் கேட்டு வண்டி ஓடி கிட்டு இருக்கு. இவன் எல்லாம் கிட்டத்தட்ட விஜய் மல்லையா, நீரவ் மோடி வகையறா. அவனுங்க எல்லாம் இந்தியா விட்டு ஓடிடான்னுவ இவன் ஓடி இருப்பான் அன்னான் பிசினஸ் படுத்திருமுனு இந்தியாவில இருக்கிறாப்பல. அதுக்கு காய் மருதன் அண்ணன்காரன் உதவி. இதுல ஸ்டாக் மார்க்கெட்ல வேற முதலீடு. அது எல்லாம் நடந்துகிட்டு தன இருக்கும். சும்மா வெளி உலகத்துக்கு இந்த தடை.


gmm
ஆக 23, 2024 15:03

செபியின் செயல் திட்ட நடவடிக்கையை வரவேற்போம். பங்கு சந்தை வர்த்தகம் கூடாது என்பது அனில் அம்பானிக்கு ஒரு தண்டனை. இது போன்று தேர்தல் ஆணையம், நீதிமன்றம் போன்ற உயர் அமைப்புகள் புகார் மீது தண்டனை கொடுப்பது குறைவு. மத்திய அரசு அபிவிருத்தி, ரயில், விமான நிலையம் போன்றவற்றில் முதலீட்டை நிறுத்தி, நாட்டின் கடனை 5 ஆண்டுகள் அடைக்க வேண்டும். மாநில நிர்வாகம், கல்வி, மருத்துவ, நீதிமன்ற வழக்கில் பணம் அதிகம் விரயம். மக்கள் ஆடம்பர செலவுகளை கூட்டி வருகின்றனர். வரி கட்டாயம் இல்லை. உள்ளூர் நபர்கள் அபிவிருத்தி முடிந்தவுடம் வருவாயை அரசு பெற தடையாக இருப்பது கடன் கூடிவிடும்.


ஆரூர் ரங்
ஆக 23, 2024 12:50

ஒரு திறமைசாலியின் எல்லா வாரிசுகளும் திறமையுடன் இருப்பர் என்ற எதிர்பார்ப்பு தவறு என்பதற்கு இவரும் விடியலும் சரியான எடுத்துக்காட்டுகள்.


Indian
ஆக 23, 2024 13:21

.... என்பதற்கு நீனும் ஒரு எடுத்துக்காட்டு ..


பட்டினத்தார் , மலையும் மலை சார்ந்த பகுதி
ஆக 23, 2024 17:11

திறமையாக செயல்படும் வாரிசுகளின் தந்தையர் எல்லாம் திறமையானவர்கள் என்று பொருள் கொள்ள கூடாது. குறுக்கு வழி பின்பற்றி கூட திறமையான வராக இருந்திருக்கலாம். ஆனாலும் அதற்கும் ஒரு திறமை வேண்டும்.


Lawrence k
ஆக 23, 2024 12:50

ரிலையன்ஸ் நிறுவனம் இன்னும் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்...


ponssasi
ஆக 23, 2024 12:44

முதலீட்டாளர்கள் செபி தரும் நம்பிக்கை பேரில் முதலீடு செய்கிறார்கள், அவர்கள் நிதி தவறாக பயன்படுத்தும்போது செபி என்ன செய்தது. அப்போது முதலீட்டாளர்களை காக்காமல் அம்பானியை காத்து முதலீட்டாளர்களை கைவிட்டது.


Duruvesan
ஆக 23, 2024 15:42

எந்த அம்பானிய யார் காத்தது? எனக்கு Rpower 10k shares இருக்கு, ஒரே வருஷத்தில் 82% profit. என்னோட முதலீடு நீ கவலை படாதே, ஷேர் மார்க்கெட் பத்தி தெரிஞ்சா பேசு இல்ல


தென்காசி ராஜா ராஜா
ஆக 23, 2024 12:41

காலம் கடந்த அறிவிப்பு முதிலிட்டாளர் பணத்தை சுருட்டி முடிச்சு பதுக்கிய பிறகு என்னத்த சொல்ல


Duruvesan
ஆக 23, 2024 15:29

உன்னோட பணம் எவ்வளவு போச்சி? எந்த shares வாங்கினே?


ponssasi
ஆக 26, 2024 10:29

சும்மா 10k ரிலையன்ஸ் பவர் 82% profit வச்சிக்கிட்டு பேசற. நான் 1995 முதல் மார்கெட்ல இருக்கேன், நீ சொல்லுற rpower உன்னைப்போல 20 மடங்கு வஞ்சிருக்கேன். ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் 50k இருக்கு. அணைந்து துறை சார்ந்த பங்க்குகளும் 5K முதல் 75k வரை வைத்திருக்கிறேன். நான் மார்கெட்டை சுயமாக ஆழ அறிந்தவன். rpower IPO விலை தெரியுமா? எந்த ஆண்டு என்பதை பார்த்து பேசுங்கள்.


ஆரூர் ரங்
ஆக 23, 2024 12:35

இந்த வீழ்ச்சிக்கு UPA அரசின் கொள்கை முடிவுகளில் அடிக்கடி ஏற்பட்ட மாற்றங்கள் முக்கிய காரணம். மும்பை மெட்ரோ கட்டுமானம் போன்ற பசையான ஒப்பந்தங்களை அளித்த காங் ஆட்சிகள் தான் அனிலின் மின்நிலையங்களுக்கான நிலுவைத் தொகைகளை அளிக்காமல் தாமதித்து அவரை பல வழிகளிலும் சரிய வைத்தன. ஒவ்வொரு தொழில் முனைவரின் வீழ்ச்சியும் நாட்டின் வளர்ச்சிக்கும் கேடு விளைவிக்கிறது.


Indian
ஆக 23, 2024 13:22

ரொம்ப வக்காலத்து வாங்குறீயே , நீ அவரோட சொந்தக்காரனா ?


மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி