உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பிரதமர் மோடி மவுனம் காப்பது ஏன்? : ராகுல் கேள்வி

பிரதமர் மோடி மவுனம் காப்பது ஏன்? : ராகுல் கேள்வி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: பிரதமர் மோடியின் அரசியல் குடும்பத்தில் அங்கம் வகிக்கும் குற்றவாளிகளுக்கு பாதுகாப்பு உத்தரவாதமா?. பாலியல் வழக்கில் சிக்கியுள்ள பிரஜ்வல் ரேவண்ணா விவகாரத்தில் பிரதமர் மோடி மவுனம் காப்பது ஏன்? என காங்கிரஸ் எம்.பி ராகுல் கேள்வி எழுப்பி உள்ளார்.பா.ஜ., கூட்டணியைச் சேர்ந்த மஜத எம்.பி., பிரஜ்வல் ரேவண்ணா மீது பாலியல் புகார் எழுந்த நிலையில் ராகுல் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் எக்ஸ் சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பாலியல் வழக்கில் சிக்கியுள்ள பிரஜ்வல் ரேவண்ணா விவகாரத்தில் பிரதமர் மோடி மவுனம் காப்பது ஏன்?. பிரதமர் பதில் சொல்ல வேண்டும்.

பெரிய குற்றவாளி

இந்திய மக்களுக்கு அநியாயம் ஏற்படும் போது குற்றவாளிகளுக்கு ஆதரவளிப்பது போல் பிரதமர் மோடி மவுனம் காத்து வருகிறார். இவ்வளவு பெரிய குற்றவாளி எப்படி எளிதாக நாட்டை விட்டு தப்பினார். குற்றவாளிகளுக்கு பிரதமர் மோடி மவுனமாக ஆதரவளிப்பது நாடு முழுவதும் உள்ள குற்றவாளிகளை உற்சாகப்படுத்துகிறது. பிரதமர் மோடியின் அரசியல் குடும்பத்தில் அங்கம் வகிக்கும் குற்றவாளிகளுக்கு பாதுகாப்பு உத்தரவாதமா?. இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 19 )

ராமகிருஷ்ணன்
மே 02, 2024 06:37

பைத்தியம் செய்வதை வேடிக்கையாக பார்க்க மட்டுமே முடியும். உளருவதற்கு பதில் சொல்லி கொண்டிருக்க முடியாது


JAYACHANDRAN RAMAKRISHNAN
மே 01, 2024 21:23

போபர்ஸ் பீரங்கி பேர புரோக்கர் நாட்டை ஓடி தப்பிக்க வைத்தது எந்த வகை திரு ராகுல் ஜி


M Ramachandran
மே 01, 2024 20:07

ஏன் உங்களை போல் கபகப வென்று கொட்டி நாட்டின் பெருமையை சீர்குலைக்க வேண்டுமா?


J.V. Iyer
மே 01, 2024 18:07

ஏனுங்க நீர்தான் கருத்து கந்தசாமியாக எல்லாத்துக்கும் ஏதாவது சொல்லி உங்க புத்திசாலி??த்தனத்தை காட்டுறீங்க உங்களுக்குத்தான் நிறைய நேரம் இருக்கு, சொல்லி மாட்டிக்கிறீங்க பிரதமருக்கு வேறு வேலை இல்லீங்களா?


Ramesh.M
மே 01, 2024 17:55

அவருக்கு நிறைய வேலை உள்ளது


Duruvesan
மே 01, 2024 16:49

பிஜேபி - சீட் ஜெயிக்கும் ட்ரெண்ட் மாறி விட்டது


vijay
மே 01, 2024 15:46

"பிரதமர் ஏன் மௌனமாக உள்ளார், ஏன் பேசமாட்டேங்கிறார்? என்று கேட்டாலும் கேட்பார் ஆச்சரியப்படுவதற்கில்லை


Srinivasan Krishnamoorthi
மே 01, 2024 15:28

Blunt blame by Rahul No proof that PM guarded Revanna Even JD-S at karnataka has barred him from party Amitshah directed congress government in Karnataka to immediately trap the person Escape via Bangaluru ariport could not happen without local police knowledge


Kumar Kumzi
மே 01, 2024 15:12

நீ என்ன பெரிய அப்பாட்டக்காரா


Balasubramanian
மே 01, 2024 15:02

உள்துறை அமைச்சர் அமித் ஷா அளித்த பதில் போதாதா?- பிரதமர் பாராளுமன்றத்தில் பதில் அளித்தால் இவர் வெளி நடப்பு செய்வாராம் - ஆனால் வெளியே இவர் கேட்கும் ஒவ்வொரு கேள்விக்கும் பதில் சொல்ல வேண்டுமாம் - முதலில் உங்கள் பாராளுமன்ற சீட்டை நிச்சயம் செய்து கொள்ளுங்கள்


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை