UPDATED : ஆக 06, 2024 05:46 PM | ADDED : ஆக 04, 2024 05:40 PM
புதுடில்லி: ஆப்பிள் நிறுவனத்தின் பல்வேறு சாதனங்களில் பாதுகாப்பு குறைபாடுகள் உள்ளதாக, மத்திய அரசின் சி.இ.ஆர்.டி. - இன் எனப்படும், 'கம்யூட்டர் எமர்ஜென்சி ரெஸ்பான்ஸ் டீம்' எச்சரிக்கை விடுத்துள்ளது.இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: ஆப்பிள் நிறுவனத்தின் தயாரிப்புகளான ஐ போன்கள், ஐ பேட்கள், மேக்ஸ் மற்றும் பிற தயாரிப்பு சாதனங்களில் அதிக பாதுகாப்பு குறைபாடுகள் இருப்பது தெரியவந்துள்ளது. இந்த குறைபாடுகள் உள்ள மென்பொருள் பதிப்புகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதனால், இந்த சாதனங்களில் சைபர் தாக்குதல்கள் எளிதில் நடக்க வாய்ப்புள்ளது. அறிமுகமற்ற, 'லிங்க்' மற்றும் 'மெசேஜ்' வாயிலாக இச்சாதனங்களின் பாதுகாப்புகளை தகர்த்து, பயனர்களின் முக்கிய தகவல்களை திருடவும் வாய்ப்புள்ளது.குறிப்பாக ஆப்பிள் மென்பொருட்களான 17.6 மற்றும் 16.7.9க்கு முந்தை இயக்கு தளங்களைக் கொண்ட ஐபேடுகள், மேக் இயங்குதள பதிப்புகளின் பிரிவான 'சோனோமா'வின் 14.6, பதிப்புகளில் இந்த குறைபாடு உள்ளது. 'வென்சுரா'வின் 13.6.8 மற்றும் 'மான்டிரே'வின் 12.7.6க்கு முந்தைய பதிப்புகள், வாட்ச் இயங்குதளத்தின் 10.6க்கு முந்தை பதிப்புகள், டி.வி., இயங்குதளத்தின் 17.6க்கு முந்தைய பதிப்புகள், விஷன் இயங்குதளத்தின் 1.3க்கு முந்தை பதிப்புகள், உள்ளிட்ட பல்வேறு இயங்கு தள பதிப்புகளிலும் இந்த பாதுகாப்பு குறைபாடுகள் காணப்படுகின்றன.எனவே, பயனர்கள் புதுப்பிக்கப்பட்ட பாதுகாப்பு மென்பொருட்களை உடனடியாக தாங்கள் பயன்படுத்தும் ஆப்பிள் சாதனங்களில் பதிவேற்ற வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.