உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சென்செக்ஸ் 82 ஆயிரம், நிப்டி 25 ஆயிரம் புள்ளிகளை கடந்து புதிய உச்சம்

சென்செக்ஸ் 82 ஆயிரம், நிப்டி 25 ஆயிரம் புள்ளிகளை கடந்து புதிய உச்சம்

மும்பை: வரலாறு காணாத அளவில், சென்செக்ஸ் 82 ஆயிரம் புள்ளிகளை கடந்தும், நிப்டி 25 ஆயிரம் புள்ளிகளை கடந்தும் புதிய உச்சம் தொட்டது.உள்நாட்டு பங்குச் சந்தை குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிப்டி இன்று (ஆக.,1) இதுவரை இல்லாத அளவு புதிய உச்சம் தொட்டுள்ளது. இன்று வர்த்தகம் துவங்கியதும் ஏற்றத்துடன் காணப்பட்ட நிலையில், காலை 10 மணி நிலவரப்படி 82,014 என்ற புதிய உச்ச நிலையை எட்டியது. பின்னர் சற்று வர்த்தகம் குறைந்ததால் 10:20 மணிக்கு 81,972 புள்ளிகளாக வர்த்தகமாகின. இது நேற்றைய நிலவரத்தை விட 227.4 புள்ளிகள் அதிகம். தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி வர்த்தகம் துவங்கியதும் 25 ஆயிரம் புள்ளிகளை கடந்து புதிய உச்சத்துடனேயே வர்த்தகமாகியது. காலை 10:20 மணி நிலவரப்படி, 97.7 புள்ளிகள் உயர்ந்து 25,044 ஆக வர்த்தகமானது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Duruvesan
ஆக 01, 2024 12:36

Rubbish, மார்க்கெட் சரியும், இரான் இஸ்ரேல் போர் நடக்கும்


RAMAKRISHNAN NATESAN
ஆக 01, 2024 13:55

அட ..... பெரிய மார்க்கெட் பிளேயர் ஆ இருப்பீங்க போல ....


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை