உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / செந்தில் பாலாஜி ஜாமின் வழக்கு: மே 15க்கு ஒத்திவைப்பு

செந்தில் பாலாஜி ஜாமின் வழக்கு: மே 15க்கு ஒத்திவைப்பு

புதுடில்லி: சட்ட விரோத பணப்பரிமாற்ற தடை சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி ஜாமின் கோரி உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனு இன்று (மே 6) விசாரணைக்கு வந்தது. அப்போது, விசாரணையை தள்ளி வைக்க வேண்டும் என அமலாக்கத்துறை சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதற்கு செந்தில் பாலாஜி தரப்பு ஆட்சேபம் தெரிவித்தது. இருப்பினும் அமலாக்கத் துறையின் கோரிக்கையை ஏற்று விசாரணையை தள்ளி வைத்தது உச்ச நீதிமன்றம். அதன்படி, செந்தில் பாலாஜியின் ஜாமின் மனு மீதான விசாரணை வரும் 15ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது. அன்றைய தினம் விசாரணை நடைபெறும் என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

saravanan 777
மே 08, 2024 20:39

அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்வார்கள் அவர்கள் விருப்பப்படி கைது செய்வார்கள் ஆனால் விரைவாக வழக்கு விசாரணையை தொடங்க மாட்டார்கள் ஜாமீன் கொடுக்கமட்டும் ஆட்சேபனை செய்வார்கள் ஜாமீன் மனு விசாரணைக்கு வாய்தா வாங்குவார்கள் நீதிமன்றம் ஜாமீன் கொடுத்துவிட்டால் வழக்கை கிடப்பில் போட்டு விடுவார்கள் This is the Modus Operandi அடுத்த வாரம் அவருக்கு ஜாமீன் கிடைக்கக்கூடும்


Anbuselvan
மே 06, 2024 23:54

ஜூன் நான்காம் தேதி வரை இழுத்து கொண்டு போய் விடுவார்களோ


KAMARAJ M
மே 06, 2024 20:59

வாட்சுகு பில் கேட்டதுக்கு ஜாமீன் கிடைக்காதா


KAMARAJ M
மே 06, 2024 20:57

ஜாமீன் கொடுக்க மாட்டாங்க நூ தெரியும்ல எதுக்கு அ ப்பிளை பண்ணுறாங்க


m.n.balasubramani
மே 06, 2024 19:57

தமிழக அடுத்த முதல்வர் , தன் ஆட்சி போனாலும் பரவாயில்லை இவர காப்பாத்தறது யாரு , சிந்தியுங்கள்


Anbuselvan
மே 06, 2024 18:46

நீதிபதிகள் இடமாற்றம் என செய்தி வந்ததே அப்படியாவது இவருக்கு விடிவு காலம் பிறக்கும் போல


Godfather_Senior
மே 06, 2024 18:34

இன்னும் எத்தனை வருஷத்துக்கு இந்த இழுபறி தொடரனும் ? ஒண்ணு ஒழுங்கா விசாரிச்சு உள்ளே தள்ளுங்கோ, இல்லை திருட்டு பொன்முடியை அலங்காரமா உக்காரவச்சமாதிரி இவரையும் ஊத்தி விட்டு கழுவுங்கோ என்ன நீதிமன்றம் வேண்டிக்கிடக்கு, இந்த மாதிரி இழு- பறி கேவலத்துக்கு ?


Kuppan
மே 06, 2024 15:34

இது முப்பத்தி ஏழாவது தடவையா ? நீதி மன்றத்திற்கு வேறு எந்த அலுவலும் இல்லியா ? பொழுது விடிந்த ஜாமீன் மனு அதை இரண்டு மூன்று நாள் விசாரித்து ஜாமீன் மறுப்பு,


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை