உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இருசக்கர வாகனங்களுக்கு தனி வழித்தடம்: நெடுஞ்சாலைகளில் உருவாக்க திட்டம்

இருசக்கர வாகனங்களுக்கு தனி வழித்தடம்: நெடுஞ்சாலைகளில் உருவாக்க திட்டம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: நாடு முழுதும் சாலை பாதுகாப்பை மேம்படுத்தவும், விபத்துகளை குறைக்கும் நோக்கத்திலும், மாநில நெடுஞ்சாலை மற்றும் நகர்ப்புற சாலைகளில் இருசக்கர வாகனங்களுக்கு பிரத்யேக வழித்தடத்தை உருவாக்க மத்திய சாலை போக்குவரத்துத்துறை முடிவு செய்துள்ளது.நம் நாட்டில், வாகனங்களுக்கு தனித்தனியே வழித்தடங்கள் அமைக்கப்படாததே, சாலை விபத்துகள் அதிகரிப்புக்கு முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது. அரசு புள்ளிவிபரங்களின்படி, நாட்டில் நடக்கும் சாலை விபத்துகளில் 44 சதவீதம் இருசக்கர வாகனங்களால் நிகழ்கிறது. சாலையில் நடந்து செல்வோர், 17 சதவீத விபத்துகளுக்கு காரணமாகின்றனர். இதனால், 19 சதவீத உயிரிழப்புகள் நேர்கின்றன.சாலை விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகளுக்கு நடந்து செல்வோர், சைக்கிள் மற்றும் இருசக்கர வாகன ஓட்டுனர்களே பெரும்பாலும் காரணமாக உள்ளனர். இதையடுத்து, சாலை பாதுகாப்பை மேம்படுத்தவும், விபத்துகளை குறைக்கவும், 'சேப்' என்ற திட்டத்தின் வாயிலாக சில முன்முயற்சிகளை மத்திய அரசு மேற்கொள்ள உள்ளது.இதன் முதற்கட்டமாக, வெளிநாடுகளில் உள்ளது போல, மாநில நெடுஞ்சாலைகள் மற்றும் நகர்ப்புற நெடுஞ்சாலைகளில் இருசக்கர வாகனங்களை இயக்குவதற்கு பிரத்யேகமான வழித்தடத்தை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், நடந்து செல்வோர் சாலையை கடப்பதற்கு, குறுக்கு நடை மேம்பாலங்கள் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக ஒதுக்கப்பட்டுள்ள 14,000 கோடி ரூபாய் நிதியில், 9,948 கோடி ரூபாயை மத்திய அரசும், 4,053 கோடி ரூபாயை மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளும் செலவிடும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

visu
மே 30, 2024 06:28

150 சி சி மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் அல்லது 100 கி மி க்கு மேற்பட்ட வேகத்தில் செல்லகூடிய இரு சக்கர வாகனங்களை தடை செய்யலாம் நம் சாலையில் அதிகபட்ச அனுமதிக்கப்பட்ட வேகம் 60 கி மி எனும்போது எதேர்க்கு 200/350/500 சி சி வாகனங்கள் இளைஞர்கள் இந்த வாகனங்களை வாங்கி விபத்தில் உயிர் இழக்கின்றனர் இதை தவிர்க்க தடை செய்யலாம்


Varadarajan Nagarajan
மே 29, 2024 14:10

வாகன ஓட்டிகளுக்கு லைசென்ஸ் வழங்கப்படும் விதிமுறைகளில் பெருமளவு மாற்றம் தேவை. தற்பொழுது லைசென்ஸ் லைசென்ஸ் வைத்திருந்து வாகனம் ஓட்டுபவர்கள் பலருக்கு சாலை குறியீடு மற்றும் எச்சரிக்கை பலகைளின் அர்த்தம் தெரியாது. ஓட்டுநர் பயிற்சி பள்ளிகளிலும் இவர்களுக்கு எதையும் சொல்லிக்கொடுத்ததில்லை. லைசென்ஸ் வாங்கும்போது மோட்டார் ஆய்வாளர்களும் இவர்களிடம் எதையுமே கேட்பதில்லை. பெருமளவில் லஞ்சம் ஒன்றுதான் பிரதானம். இருசக்கர வாகனம் ஓட்டிகள் நெடுஞ்சாலைகளில் ஓரத்தில் இருக்கும் மர நிழல், பாசன மதகுகள், பேருந்து நிழற்குடைகளில் அமர்ந்து மது அருந்துவதை பல இடங்களில் நம்மால் பார்க்க முடிகிறது. மது அருந்தியபிறகு இவர்கள் விபத்தை ஏற்படுத்தாமல் எப்படி வாகனம் ஓட்டமுடியும்? நெடுஞ்சாலைகளில் நடுவிலேயே வண்டி ஓட்டுகின்றார்கள். அடுத்தது போக்குவரத்து போலீசார். இவர்களுக்கு வேண்டிய வருமானம் கிடைத்துவிட்டால் பிறகு ஒருவழி பாதை என்ன, ஓவர் ஸ்பீடு என்ன, லைசென்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டினால் என்ன எப்படிவேண்டுமானாலும் செல்லலாம். இவைகளால் சாலை விபத்துக்களில் நாம் முதன்மை மாநிலமாக இருப்பதில் வியப்பில்லை. மத்திய அரசின் புதிய முயற்சியால் மேலே சொன்ன ஏதாவது மாறினால்தான் விபத்துக்கள் குறையும்


Ramesh Sargam
மே 29, 2024 12:45

பாதசாரிகள் நடக்க தனி வழித்தடம் இருந்தும், பாதசாரிகளால் நிம்மதியாக நடக்கமுடியவில்லை. ஏன் என்றால், அந்த இடத்தில் சிறுவியாபாரிகள் கடைகள், இருசக்கர வாகனங்கள் என்று பல ஆக்கிரமிப்புக்கள். அவற்றை எல்லாம் அகற்றவேண்டும்.


N Sasikumar Yadhav
மே 29, 2024 12:45

இருச்சக்கரவாகன ஓட்டிகளுக்கு இருபது வழிசாசாலை போட்டால்கூட போதாது ஜிகாஜாக் போட்டு ஓட்டி மற்றவர்களின் உயிரை எடுப்பானுங்க


Munukur SridharanChettiar
மே 29, 2024 11:51

training... educating.. traffic rules to all sorts of people is an essential one.


Sampath Kumar
மே 29, 2024 11:29

தனி வழித்தடம் போட்டாலும் இவனுக அதில் போக மாட்டானுக நடு ரோட்டில் தான் போவானுக திமிர் பிடித்தவர்கள்


venugopal s
மே 29, 2024 11:22

சாலை விதிகளை மதிக்காமல் தங்கள் வசதி போல் மீறுவதும் அதிகமாக இரு சக்கர வாகன ஓட்டுநர்கள்கள் தான்!


Anbuselvan
மே 29, 2024 10:55

மிக சிறந்த திட்டம். ஒழுங்காக நிறைவேற்றி மற்றும் மக்களால் கடைபிடிக்கப்பட்டால் நிறைய உயிர் சேதங்கள் தவிர்க்கப் படும். இது மட்டும் இல்லை, ஏற்கனவே நிலுவையில் உள்ள போக்குவரத்து சட்ட திட்டங்களை மக்கள் ஒழுங்காக பின்பற்றினால் பல உயிர் சேதங்கள் நிச்சயமாக தவிர்க்கப் படும். பொதுவாக மனித உளவியல் என்ன கூறுகிறது என்றால் தவறுகளுக்கு தண்டனை பாரபட்சமின்றி கொடுக்கப் பட்டால் ஒழுக்கம் தானாக வரும் என்று.


தமிழ்வேள்
மே 29, 2024 10:48

டூ வீலர்களின் வேகத்தை பெருமளவுக்கு கட்டுப்படுத்தினால் தவிர , விபத்துக்களை தவிர்க்க இயலாது ...ஒரு சாதாரண டூ வீலர் 100 சி சிக்கு அதிக பவர் தேவையில்லை .வேகம் அதிகபட்சம் 60 கிமி போதுமானது . தயாரிப்பு நிலையிலேயே வேகம் கட்டுப்படுத்தப்படவேண்டும் ..ஸ்கூட்டர் ,மொபெட் மற்றும் பைக் என மூன்றே மாடல்களில் ஒரு சில வேரியன்ட் மட்டுமே போதுமானது .


ஆ.செந்தில்குமார், முழு நேர சங்கி
மே 29, 2024 10:28

Very good initiative


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை